காஞ்சிபுரம், மிரட்டும் மிர்ஜா! புயல்,மழை, குடையோடு அமைச்சர் சு.முத்துசாமி! கள - முகாம்களிலும் ஆய்வு!
- உறியடி செய்திகள்

- Dec 4, 2023
- 2 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிரட்டும்மிர்ஜா புயல்!
கொட்டும் மழையிலும் குடையுடன், மக்கள் பாதுகாப்புப்பணிகளில் அமைச்சர் சு.முத்துசாமி, நிவாரண முகாம்களிலும் ஆய்வு, 24. மணிநேர தொடர் பணியில் எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள், நிவாரணக்குழுக்கள், மீட்புப் படையுடன் மாவட்டத்தின் பாதுகாப்பு, கண்காணிப்புகளப்பணியில்அமைச்சர் முத்துசாமி!

தமிழ்நாட்டில் தற்போது உருவாகியுள்ள மிக் ஜாம் புயல் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல்வேறு வழிகளிலும் தமிழ்நாடு அரசு எடுத்துவருகிறது.!
தங்களிடம்,அமைச்சரின் எளிய எதார்த்த அணுகுமுறையாலும், எதார்த்த பேச்சு, அக்கரையுடன் கூடிய நலன் விசாரித்த பாங்கு ஆகியவற்றால், தங்களுக்கு ஏற்பட்ட இக்கட்டாண சூழல், அதனால் ஏற்பட்ட இன்னல்கள். துன்பங்கள் மறந்து, பாதிப்புக்காள பொதுமக்கள், தன்னம்பிக்கையுடன் மிகுந்த உற்சாகமடைந்தார்கள்.!

இப்பணிகளை மேலும் கூடுதல் கவனத்துடன், 24 மணிநேரமும் கண்காணித்து உடனுக்குடன் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுத்து பாதுகாப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் தீவிரபடுத்தியுள்ள தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், புயல் பாதிப்புகளுக்கு ஆளாகக் கூடிய மாவட்டத்திற்கு பொறுப்ப அமைச்சர்களையும், மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளையும் நியமித்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கியும் விடப்பட்டார்.!

அவ்வப்போது புயல் நிலவரங்களை கண்காணித்து வருவதுடன், பொதுமக்கள் உதவிக்கு கட்டுப்பாட்டு மையங்களையும் ஏற்பத்தப்பட்டுள்ளது.!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரையோர , மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பல்வேறு தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்!.

மிக் ஜாம் புயலால் பாதிப்புக்குள்ளாகும் என கண்டறியப்பட்ட, காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறப்பு பொறுப்பு அமைச்சர். ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர், தமிழக வீட்டுவசதி - நகர்புற மேம்பாடு. மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று நேரில் சென்று, மாவட்ட முழுவதும் கள ஆய்வை மேற்கொண்டார்.!

அப்போது மழை, புயல், வெள்ளத்தால் பாதிப்புகளுக்குள்ளாகும் என கண்டறியப்பட்ட இடங்களில், கடும்மழையிலும், குடையை பிடித்த படி, மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், மழை வெள்ளத்தையும் பொருட்படுத்தாது களத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சு.முத்துசாமி .......
அப்பகுதியில் தேவையாள முன்னெச்சரிக்கை. பாதுகாப்பு நடவடிக்கைகளை, மேலும் துரித படுத்தி தாழ்வான பகுதிகளிலிருந்த மக்களை உடனடியாக பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பவும் நடவடிக்கை மேற்கொண்டு பேரிடர் கால பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து துறையினரையின் பணிகளையும் முடுக்கியும் விட்டார்.!

இதனை தொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் நேரில் சென்று சந்தித்து, அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், தேவையான கூடுதல் வசதிகள் பற்றியும் கேட்டறிந்து, உடனடியாக அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கவும் உத்தரவிட்டார்.!

தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் காவல்துறை, வருவாய். வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துறை அலுவலர்கள்,தீயணைப்புத்துறை பேரிடர் மீட்புக்குழுக்களுடன், நடைபெற்ற முன்னெச்சரிக்கை - பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில், இதுவரை அந்தந்த துறைவாரியாக செய்யப்பட்டுள்ள பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்து, மேலும் கூடுதலாக ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் வழங்கியும் 24, மணிநேரமும் அரசுத்துறையினர் கண்காணிப்பு பணிகளை, நிவாரணப் பணிகளில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.!

உத்தரமேரூர், தேனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளிகள் உள்ளிட்ட பாதுகாப்பு, நிவாரண முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து உணவு, மருத்துவம், அடிப்படை வசதிகள், நிவாரண பொருட்க்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்துதரும் பணிகளையும் ஆய்வு செய்து துரிதபடுத்திய அமைச்சர் சு.முத்துசாமி, அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள சிறார்களிடம் உற்சாகப்படுத்தி உரையாடினார்.!


தங்களிடம்,அமைச்சரின் எளிய எதார்த்த அணுகுமுறையாலும், எதார்த்த பேச்சு, அக்கரையுடன் கூடிய நலன் விசாரித்த பாங்கு ஆகியவற்றால், தங்களுக்கு ஏற்பட்ட இக்கட்டாண சூழல், அதனால் ஏற்பட்ட இன்னல்கள். துன்பங்கள் மறந்து, பாதிப்புக்காள பொதுமக்கள், தன்னம்பிக்கையுடன் மிகுந்த உற்சாகமடைந்தார்கள்!
எம்.எல்.ஏ. க்கள் எழிலரசன், சுந்தர்.மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் உட்பட பலர் உடன் சென்றார்கள்.




Comments