கனிமொழி கருணாநிதி எம்.பி. வலியுறுத்தல்!பெண் எஸ்.பி. -குடும்பத்தினர் மீது இணையவழி தாக்குதல்! உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- உறியடி செய்திகள்

- Aug 27, 2024
- 1 min read

தோகமலை.
ச.ராஜா மரியதிரவியம் .....
புதுக்கோட்டை எஸ்.பி. மீது இணையவழி ஆபாச தாக்குதல் கனிமொழி கருணா நிதி, எம்.பி. கண்டனம்!
எஸ்.பி. மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.!
இதுகுறித்து, தி.மு.கழக துணைப்பொதுச் செயலாளர். நாடாளுமன்ற இரு அவைகளின் தி.மு.கழகக்குழுத்
தலைவர் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி
எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.!
பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்.!

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.!
ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டேவின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.!
கனிமொழி கருணாநிதியின் இத்தகைய கண்டன பதிவை, தமிழ்நாடு காவல் துறை பெண்காவலர்களும், பல்வேறு மகளீர் , சமூக நீதி அமைப்பினர்களும் பெரிதும் வரவேற்று சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.




Comments