பள்ளிமாணவிகளுடன் கனிமொழி கருணாநிதி எம்.பி.! ஒரு அகழாய்வு - வரலாற்று சுற்றுலா!
- உறியடி செய்திகள்

- Aug 24, 2024
- 1 min read

பள்ளி மாணவிகளுடன் கனிமொழி கருணாநிதி! அகழாய்வு குறித்தும் விளக்கமளித்து மாணவிகளை உற்சாகமூட்டினார்.!

தி.மு.கழக துணைப்பொதுச் செயலாளர், நாடாளுமன்ற இரு அவைகளின் குழுத்தலைவர், மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட பேருந்தில் இன்று ஆக.24. ந்தேதி அழைத்துசென்றார்.!


பேருந்தில் மாணவிகளுடன் கலந்துரையாடிய கனிமொழி கருணாநிதி, கல்வி கற்றல், பெண் கல்வி, சமூக அந்தஸ்து, வாழ்வாதரம், குறித்தும் பயனளிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறியவர் தொடர்ந்து


அகழாய்வு பணி முன்னெடுப்பில்
கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வமுடன் இருந்த மாணவ, மாணவிகளுக்கு, அகழாய்வு, பொருட்கள் - முதுமக்கள் பயன்படுத்திய, அகழாய்வின் மூலம் கண்டறியப்பட்ட பொருட்கள் அகழாய்வு பணிகள் குறித்தும் மிகுந்த எளிமையாக, மாணவிகள் புரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் விளக்கமளித்தார்.!




Comments