மக்களவையில் கனிமொழி கருணாநிதி காட்ட மான கேள்வி! தமிழ்நாடு மெட்ரோ ரயில் திட்டம்! நிதி ஒதுக்காதது ஏன்?
- உறியடி செய்திகள்

- Jul 26, 2024
- 1 min read

தமிழ்நாட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காது ஏன்? என்று கனிமொழி கருணாநிதி காட்டமாக கேள்வி?
2024 - 25. ஆண்டுக்கான பாஜக, ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சி நடைபெறும் மாநிலங்களை, புறக்கணித்துள்ளாதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டணம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தி.மு.கழகத்தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக, வை தோற்கடித்த மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்த வேண்டாம். என்றும் கடுமை மையாக விமர்சனம் செய்திருந்தார்.!
இந்நிலையில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது மற்றும் அதன் அனுமதி நிலை குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி கருணாநிதி மக்களவையில் கேள்வி எழுப்பினார்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 22-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 3வது முறை ஆட்சி அமைத்த பிறகு, ஜூலை 23-ம் தேதி 2024-25 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது !.

மக்களவையில் பேசிய தி.மு.கழக துணைப் பொது செயலாளர் நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர், தூத்து டி மக்களவை உறுப்பினர்.கனிமொழி கருணாநிதி, ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை சுட்டி பேசுகையில், மதுரை ஆகிய பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது குறித்தும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதி நிலையின் விபரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.!

இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ பதிலத்து பேசுகையில்“மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். ஆனால், தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.” என்று கூறினார்!!
இதைத் தொடர்ந்து நாட்டில் கவாச் அமைப்பை நிறுவுவதற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த விவரங்களை கனிமொழி கருணாநிதி கேட்டார். இதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “கவாச் பணிகளுக்கு இதுவரை 1,216 கோடியே 77 லட்ச ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளது. நடப்பு 2024-25 நிதி ஆண்டில் ஆயிரத்து 112 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.!




Comments