top of page
Search

கனிமொழி கருணாநிதி பேச்சு! உலகத்தை பாதுகாக்கும் சக்தி மாணவர்கள் தான்! சாதி, மதம் கடந்து வர வேண்டும்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 7, 2024
  • 1 min read
ree


­ உலகத்தை பாதுகாக்கும் சக்தி மாணவர்கள்தான்! சாதி, மத, பாகுபாடுகளை கடந்து வெளியே வர வேண்டும் கவிஞர் கனிமொழி கருணாநிதி அழைப்பு!.


தூத்­துக்­குடி மாவட்­டம் கீழ­வல்­ல­நாட்­டில் உள்ள தூத்­துக்­குடி அரசு மாதிரி மேல்­நி­லைப்­பள்­ளியை, தி.மு.கழக துணைப்பொதுச் செயலாளர், தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர், நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர், கவிஞர் கனி­மொழி கரு­ணா­நிதி, ஜூலை,06 அன்று பார்­வை­யிட்டு ஆய்வு செய்து மாணவ – மாண­வி­யர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார்.!


பின்­னர் கனி­மொழி

கரு­ணா­நிதி, எம்.பி. மாணவர்களிடம் கூறியதா­வது:–

ree

உங்­க­ளுக்கு எந்­தத் துறை பிடித்­தி­ருக்­கி­றதோ அந்­தத் துறையை தேர்ந்­தெ­டுங்­கள். அந்த துறை­தான் உங்­கள் வாழ்க்கை முழு­வ­தும் உங்­க­ளோடு வரப்­போ­கி­றது. பிடித்த துறை­யில்­தான் நமக்­குப் பிடித்த விஷ­யத்தை மகிழ்ச்­சி­யோடு செய்ய முடி­யும். மற்­ற­வர்­களை பார்த்து துறையை தேர்ந்­தெ­டுத்­தால் மகிழ்ச்சி இருக்­காது. நம்முடையஅறிவே ஆற்­றல் ஆகும்.!


உல­கத்­தில் நிறைய அழ­கான விஷ­யங்­கள் உள்­ளன. அவை அத்­த­னை­யை­யும் உண­ரக்­கூ­டிய மனி­தர்­கள்­தான் முழுமை பெற்ற மனி­தர்­கள்.!


மாணவர்கள் மீது முழுமையான அக்கரை கொண்டு பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த கொள்கையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் , வழியில், முதல்வர தளபதியின் தலைமையில் பிற மாநிலங்களுக்கும் தமிழ்நாடு முன் உதாரணமாக திகழுகின்றது.!

ree

எதிர்கால தலைமுறைகளான, மாணவர்களாகிய நீங்கள் இந்த உல­கத்தை பாது­காக்­கக்­கூ­டி­ய ­வர்­க­ளாக, சாதி, மத பாகு­பா­டு­க­ளில் இருந்து நீங்கள் வெளியே வந்து அனைத்து மக்­க­ளை­யும் நேசிக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்க வேண்­டும்.! உங்களுடைய குடும்பம் பெருமை கொள்ளும் வகையில், நம் நாட்டிற்கு சாதனைகள் பலவற்றை படைக்க வேண்டும்.

அனை­வ­ருக்­கும் வாழ்த்­துக்­கள்.!


இவ்வாறு கனி­மொழி கரு­ணா­நிதி. எம்பி. தெரி­வித்­தார்.


நிகழ்ச்­சி­யில் தூத்­துக்­குடி மாந­க­ராட்சி மேயர் பெ. ஜெகன், மாவட்ட ஆட்சித் தலைவர் லெட்சுமிபதி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page