கனிமொழி கருணாநிதி பங்கேற்பு!தூத்து குடி வடக்கு மாவட்ட தேர்தல் ஆலோசனை கூட்டம்! அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு!
- உறியடி செய்திகள்

- Mar 20, 2024
- 2 min read

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தீவிரம்!
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ‘இந்தியா’ கூட்டணிக்கட்சி செயல்வீரர்கள் கூட்டம் கவிஞர், கனிமொழி கருணாநிதி பங்கேற்பு! வடக்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் தமிழக சமூக நல -மகளீர் நல உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அறிக்கை!
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணிக்கட்சி வேட்பாளரின் வெற்றிக்கான பணிகள் குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது.!

அதன்படி தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் மார்ச் 21. வியாழக்கிழமை காலை சுமார்10.00 மணிக்கு தூத்துக்குடி 2-ம் கேட் அருகிலுள்ள அபிராமி மஹாலில் நடைபெறுகிறது.!
தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் மார்ச், 21. வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு எட்டையபுரம் சாய்கணேஷ் திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது.!
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் மார்ச் 21.வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குகோவில்பட்டி, மந்தித்தோப்பு ரோட்டிலுள்ள சர்க்கஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
அனைத்து செயல்வீரர்கள் கூட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் பி.கீதாஜீவனாகிய நான் தலைமை தாங்குகிறேன். கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.!
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், தி.மு.க சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், மாநகர மேயர் ஜெகன் பெரயசாமி, மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகர செயலாளர் கா.கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், மாவட்ட அவை தலைவர் ஜி.செல்வராஜ், மா.கம்யூ மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், இ.கம்யூமாவட்ட செயலாளர் பி.கரும்பன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், வி.சி.க.மாவட்ட செயலாளர்கள், முருகன், கணேசன், இ.யூனியன், முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் பி.மீராசா, மக்கள் நீதிமய்யம் மாவட்டச்செயலாளர் ஜவஹர், ரமேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கயத்தாறு அஸ்மத், சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் என்.ஏ.கிதர்பிஸ்மி, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் காயல் முருகேசன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் நம்பிராஜ் பாண்டியன் மற்றும் கூட்டணிக்கு ஆதரவுதெரிவித்துள்ள அமைப்புகளின் நிர்வாகிகள் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.!
எனவே அனைத்து செயல்வீரர்கள் கூட்டங்களிலும் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொள்ள கழகத் தலைவர், தமிழக முதல்வர் தளபதியார் காட்டிய வழியில் அன்புடன் அழைக்கிறேன்.!
ஓரணியாய், அணிதிரள்வோம்! மகத்தான, மாபெரும் வெற்றியை நமதாக்குவோம்!
இவ்வாறாக கீதாஜீவன் கூறியுள்ளார்.




Comments