கள்ளக்குறிச்சியில் கருணை இல்லம் அமைக்கிறாம்!தி.மு.க.விடம் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்கும் அண்ணாமலை!
- உறியடி செய்திகள்

- Jun 27, 2024
- 1 min read

லெமூரியன் பார்வையில்......
நேற்று போலீஸ், இன்று தமிழக பாஜக, வின் தலைவர் நாளை கருணை இல்லம் நடத்தும் சமூக சேவக புரவலரோ அண்ணாமலை.!
எங்கேயோ கணக்கு இடிக்கு தோ!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்ததில் 6 பெண்கள் உட்பட 63 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிலர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.!

இதனிடையே கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.!இந்த சூழலில், கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராய உயிரிழப்பில் அண்ணாமலையின் சதி இருக்குமோ என்று சந்தேப்படுவதாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த 23ம் தேதி புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது குற்றம் சாட்டியிருந்தார்.!
ஏன் இந்த பதட்டம் அண்ணாமலைக்கு என்பதில் பலவிதமான சந்தேகங்களை எழுப்பியும் வருகின்றது.!

இந்நிலையில் தன்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.!
மேலும் நோட்டீஸ் பெற்ற மூன்று நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், நஷ்ட ஈடாக பெறப்படும் பணத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக. தகவல்கள் வைரலாகி வருகிறது!
பாஜக. தமிழக தலைவரான அண்ணாமலை, கள்ளக்குறிச்சி சம்பவம் மட்டுமல்ல!

இதற்கு முன் அவர் கூறிய, கூறிவரும் கருத்துக்கள் முழுவதுமாக அரசியலுக்காகவே தன்னிருப்பை காட்டிக் கொள்ளும் வகையிலும் தொடர்ந்து பேசி வருவதும், அவர் மீது வார் ரூம் தொடங்கி, தமிழிசையுடன் பகிரங்க குற்றசாட்டு பற்றாக்குறைக்கு இப்போது திருச்சி சூர்யா சிவாவின் கடும் குற்றச்சாட்டுக்கள்,
விமர்சனங்கள் வரை அவரின் அரசியல் பக்கவ மின்னமையே காட்டுகின்றது.!

ஐபிஎஸ், அதிகாரியாக வேலை பார்த்த அண்ணாமலை இன்னமும் தான் பாஜக, எனும் தேசிய கட்சியின் தலைவர் என்பதைக்கூட மறந்து, எடுத்தேன் கவிழ்த்தேன் எனக் கூறுவது வாடிக்கையாகி விட்டதாகும்.!

இதேநிலைபாட்டில் அரசியல் செய்வாரானால் தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த காமெடியனாகவே அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாவார் என் கின் றார்கள்.
அரசியல் களநிலவரங்கள் அறிந்த பார்வையாளும் - விமர்சகர்களும்.!




Comments