top of page
Search

கரூர்: 33 பேர் பலி. 62 பேருக்கு சிகிச்சை! நிவாரணம் - விசாரணை அரசுஅமைப்பு! முதல்வர் இரவே கரூருக்கு வருகை

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Sep 27
  • 2 min read
ree

தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 6 குழந்தைகள் பெண்கள் உட்பட 33பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 62க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று இரவே தனி விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் வருகை. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை! நிவாரணம், விசாரணை ஆணையமும் அமைத்து அரசு உத்தரவு.!

ree

தவெக தலைவர் விஜய் இன்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகண ஆண்கள் - பெண்கள், குழந்தைகளுடன் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் பலர் மயக்கமடைந்தனர். விஜய் பேசிக்கொண்டிருந்த போதே மயக்கமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ree

இந்நிலையில், விஜய் பரப்புரையில் மயக்கமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்துள்ளார் அதிகரித்தது. தற்போது கரூர் அரசு மருத்துவமனையில் மட்டும் 6 குழந்தைகள் 19 பெண்கள் உட்பட 33 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள் மேலும் 62-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு கட்டணமில்லா சிகிச்சையிலுள்ளனர்.

கரூர் அரசு மருத்துவமனைக்கு திருச்சி, திண்டுக்கல், கோவை, சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.


கரூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் வந்து , பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர்.

ree

, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதள பதிவு,

,

“கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர்

செந்தில் பாலாஜி, மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

ree

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபி-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ree

மேலும் திருச்சி, திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


இந்நிலையில் தற்போது, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் இரவே சென்னையிலிருந்து புறப்பட்டு கரூருக்கு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற் தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 1 லட்சமும், சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமும் அமைத்து தமிழ்நாடு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு கூறமல் மௌனமாக சென்றார் நடிகர் விஜய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது..

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page