கரூர்: விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவம்! தேசிய மனித உரிமை விசாரிக்க த.வெ.க. மனு!
- உறியடி செய்திகள்

- Sep 28
- 1 min read

. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் பலியாக சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தவெக சார்பில் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
கரூரில் நேற்று இரவு நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் விஜய்யை பார்க்க வந்திருந்த குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த மாதம் திருமணம்! விஜய் நெரிசலில் சிக்கி பலியான ஜோடியின் கடைசி செல்பி.. கலங்கவைக்கும் போட்டோ
"அடுத்த மாதம் திருமணம்! விஜய் நெரிசலில் சிக்கி பலியான ஜோடியின் கடைசி செல்பி.. கலங்கவைக்கும் போட்டோ"
கரூர் மருத்துவமனையில் மேலும் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். நேரில் வந்து பார்வையிட்ட ஸ்டாலின் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் வழங்குவதாக கூறினார். கூட்ட நெரிசல் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் திட்டமிட்ட சதி என்று கூறிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தேசிய மகளிர் உரிமைகள் ஆணையத்தில் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விஜயை பார்க்கப்போன மனைவி - மகள் நெரிசலில் பலி.. உடல்களை தேடி அலைந்த கரூர் நபர்.. கலங்கடித்த சோகம்
"விஜயை பார்க்கப்போன மனைவி - மகள் நெரிசலில் பலி.. உடல்களை தேடி அலைந்த கரூர் நபர்.. கலங்கடித்த சோகம்"
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.




Comments