கரூர்: சர்ச்சையில் சிக்கியதா? புலியூர் பேரூராட்சி! தீண்டாமை சுவர்! தெருவிளக்கு கம்பங்களில் தீப்பந்தங்கள்!
- உறியடி செய்திகள்

- Aug 10, 2024
- 1 min read

கரூர் அருகே, எரியாத தெரு விளக்குகளை சரி செய்யாததால் பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி வைத்து பொதுமக்கள் நூதனப் போராட்டம் நடத்தியுள்ளனர். இப்போது இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில் அமைந்துள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் 4-வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்குகள் எரியவில்லை என்றும், பெண்கள் கழிவறை உள்ள பகுதியிலும் விளக்குகள் எரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளாளப்பட்டி பகுதி பொதுமக்கள் புலியூர் பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.!

இதனால் பொருமையை இழந்த வெள்ளாளப்பட்டி பொதுமக்கள் 4-வது வார்டு பகுதியில் உள்ள மின் கம்பங்களிலும் பெண்கள் கழிவறை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வெள்ளிக்கிழமை இரவு தீப்பந்தங்களை ஏற்றிவைத்து நூதனப் போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வெள்ளாளப்பட்டி பகுதி பொதுமக்களின் இந்த நூதனப் போராட்டம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.!சமீபத்தில் இப்பகுதியில், வருவாய் இழப்பை ஏற்படுத்தும் ரியல் எஸ்டேட் முறைகேடு, தொழில் வரி இழப்பீடு!காந்திநகர் பகுதியில் ஆதிதிராவிட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வலுவாக தீண்டாமை சுவர் அமைத்திருப்பது.!

பேரூராட்சி தலைவர் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவரின் பெயரை பேரூராட்சி பலகையில் நீண்ட காலமாக பதிவிடா மலிருந்தது.! இப்படி பல்வேறு பிரச்சனைகள் இப்பகுதியில் பேசும் பொருளாக இருந்து வருவதும் குறிப்பிட தக்கது.!




Comments