top of page
Search

கரூர்: தி.மு.கழக முப்பெரும் விழா! 2026 - தேர்தல் திருப்பு முனையாக அமையும்! அமைச்சர் நேரு தகவல்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Sep 12
  • 1 min read
ree

கரூரில் நடைபெற உள்ள தி.மு.கழக முப்பெரும் விழா 2026-ம் ஆண்டு தேர்தலில் திருப்புமுனையாக அமையும், தி.மு.கழக முதன்மைச் செயலாளர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல் .


கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி பிரிவு அருகே செப்.17-ம் தேதி தி.மு.கழக முப்பெரும் விழா நடைபெறுகிறது.!

ree

இதனையொட்டி விழா நடைபெறும் இடத்தையும், மாநாட்டு ஏற்பாடுகளையும் தி.மு.கழக, முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (செப்.11-ம் தேதி) பார்வையிட்டு, பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து முப்பெரும் விழா தகவல்கள் அடங்கிய பலூனையும் பறக்கவிட்டார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு தி.மு.கழக முப்பெரும் விழா ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறார். அவர் சாதாரண கூட்டங்களையே 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடத்துவார்.

ree

தி.மு.கழக முப்பெரும் விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என அவர் நினைத்துள்ளார். எனவே கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குரிய ஏற்பாடுகளை செந்தில்பாலாஜி செய்து வருகிறார். கோவை, நாமக்கல், ஈரோடு போன்ற இடங்களில் பல்வேறு கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்.

ree

கரூர் திருச்சி மாவட்டத்தில் இருந்த காரணத்தால் அதிகமான அளவுக்கு திருச்சி மாவட்டத்தில் இருந்து பங்கேற்பார்கள். எத்தனை பேர் வரவேண்டும் எனக் கூறுகிறாரோ அத்தனை பேர் வருவார்கள். 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு திருப்புமுனையாக இம்மாநாடு இருக்கும். நடக்க இருக்கின்ற தேர்தலுக்கு அஸ்திவாரத்தை செந்தில் பாலாஜி செய்து இருக்கிறார். நிச்சயமாக மிகப்பெரிய வெற்றி பெறும்.



கழகத் தலைவர், தமிழகமுதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் திருச்சி வந்து அங்கிருந்து கரூர் வருகிறார். பெரியார் பிறந்த நாள் உறுதிமொழியை திருச்சியில் ஏற்கிறார். மாநில மாநாடுகள் காலை முதல் மாலை வரை நடைபெறும். இது மாலை 5 மணி முதல் 7 மணி வரை குறுகிய காலத்தில் அதனை விட கூடுதல் சிறப்பாக நடைபெறும். செந்தில்பாலாஜியை நம்பி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார். எனவே சிறப்பாக இருக்கும் இவ்வாறு அவர் கூறினார்,.

ree

முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, எம்எல்ஏக்கள் ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் ப.சரவணன், மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page