கரூர் சம்பவம் சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவு! உச்ச நீதிமன்றம் அதிரடி! பா.ஜ.க. வானதி சீனிவாசன் வரவேற்பு!
- உறியடி செய்திகள்

- Oct 13
- 1 min read

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு. தீர்ப்பை வரவேற்பதாக பாஜக மகளிர் அணி தலைவர், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறினார்.
கோவை புலியகுளம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான "தாய்மை" என்ற விழிப்புணர்வு பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது.
"திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை என்று பேசிக்கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. மத்திய அரசின் பெண்கள் நலத் திட்டங்களுக்குக்கூட நிதியைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது முழுவதுமாக பெண்களுக்கு எதிரான மாடலாக இருக்கிறது. குடும்பத்தில் ஆண் வாரிசுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெண்களுக்குக் கொடுக்காததுதான் திராவிட மாடல்"
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை நாங்கள் வரவேற்கிறோம். இது தமிழக காவல்துறை முழுவதுமாகத் தோல்வியடைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. தமிழக காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு அடியைக் கொடுத்துள்ளது" .
" இது பற்றி மாநில அரசின் மீது மிகப்பெரிய சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. சிபிஐ விசாரணை மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்படும். சம்பவத்திற்குக் காரணமானவர்கள், எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், அதிகாரத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் மக்கள் முன்பாக நிறுத்தப்படுவார்கள்"
"தேர்தல் நெருங்கும் நேரத்தில், விடுபட்ட பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப் போவதாக துணை முதலமைச்சர் உதயநிதி கூறியிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாகக் கொடுக்காமல் மக்களை ஏமாற்றுகின்ற 'டிராமா வேலையை' செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் இந்த அரசு போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்"
ஊர் பெயர்கள், தெரு பெயர்களில் . சாதிப் பெயர்களை எடுக்கு விட்டால் "கோவையில் நிறைய ஊர்களுக்குப் பெயரே இருக்காது. இனிமேல் ஊர்களுக்கு இன்சியல் போட்டுத்தான் கூப்பிட வேண்டும். இது அரைகுறை அரசு, அப்படித்தான் இருக்கும்"
மேலும், வருகின்ற 28-ஆம் தேதி துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை வர உள்ளார், அவருக்குப் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது .
நாளை சட்டமன்றத்தில் கரூர் சம்பவம் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.




Comments