சவுக்குக்கு மதுரையிலும் சோதனை! தேனி போலீசுக்கும், 2 நா
- உறியடி செய்திகள்

- May 20, 2024
- 2 min read

சவுக்கு சங்கர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சை ஆனதால் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.!
இதையடுத்து, சவுக்கு சங்கரின் வீடு, கார் மற்றும் அலுவலங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சவுக்கு சங்கர் சங்கர் சட்டவிரோதமாக கஞ்சா பயன்படுத்தியதாக கூறி புதிய வழக்கு ஒன்றையும் காவல்துறையினர் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சவுக்கு சங்கர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குகள் பதிவு செய்யபட்டது !..
இந்த நிலையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்தார்.!
இதற்கிடையே, கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் காவல்துறை விசாரணைக்கு சென்ற சவுக்கு சங்கர், தனது கையை போலீசார் உடைத்தாக நீதிமன்றத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கரின் நீதிமன்றக் காவல் நாளை உடன் நிறைவடைகிறது.!
இதற்கு மத்தியில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். கோவையில் இருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும் வழியில் பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாகவும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் புகார் அளித்தார்.!

பின்னர் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு லால்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.!
இந்நிலையில் தன் மீது பதியப்படுள்ள கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார் இந்த வழக்கும், மே 20.ம் தேதி,இன்று விசாரணைக்கு வந்தது.!

சவுக்கு சங்கர். காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இவரை கோவை போலீஸார் மே 5-ம் தேதி, தேனியில் வைத்து கைது செய்தனர். தேனியில் சவுக்கு சங்கர் கைதானபோது அவரது காரில் சோதனையிட்ட பழனிசெட்டிபட்டி போலீஸார் காரில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, சங்கருடன் தேனி விடுதியில் தங்கியிருந்த ராஜரத்தினம், அவரது ஓட்டுநர் ராம்பிரபு ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். கஞ்சா வழக்குக்காக சவுக்கு சங்கரையும் பழனிசெட்டிபட்டி போலீஸார் கைது செய்தனர்.!
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.!

இந்த வழக்கில் சவுக்கு சங்கரை 7 நாள் போலீஸில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரை போலீஸார் ஆஜர்படுத்தினர்.
பின்னர், சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கலாம். விசாரணை முடிந்து, புதன்கிழமை மாலை 3 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். போலீஸ் விசாரணையின் போது சவுக்கு சங்கரை காலை 8, மதியம் 2, இரவு 7 மணிக்கு வழக்கறிஞர் சந்தித்து பேசலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சவுக்கு சங்கரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.!
முன்னதாக, சவுக்கு சங்கரை மதியம் 12 மணியளவில், பின்னர் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 22-க்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.!




Comments