மல்லிகார் ஜீனே கார்கே ஆதங்கம்! மக்களுக்கு எதிராக, விருப்பத்திற்கு மாறானவராகவே மோடி உள்ளார்!
- உறியடி செய்திகள்

- Jun 5, 2024
- 1 min read

மக்களுக்கு எதிரான - மக்களது விருப்பத்திற்கு எதிரான வராகவே மோடி உள்ளார்.!
மல்லிகார்ஜுனே கார்கே ஆதங்கம்!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில், இன்று (ஜூன் 5) மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. !
கூட்டத்திற்கு பின்னர்மேலும் பேசிய அவர், “ம்க்களின் தீர்ப்பு மோடிக்கு எதிராகவும் அவரது அரசியல் முறைக்கு எதிராகவும் அமைந்திருக்கிறது. இது ஒரு தெளிவான தார்மிக தோல்வி என்பதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் மோடிக்கு இது ஒரு பெரிய அரசியல் தோல்வி. எனினும், அவர் மக்களின் விருப்பத்தை தகர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்.!

நமது அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள மாண்புகளையும் அதன் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்கான அடிப்படை உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்ளும் அனைத்து கட்சிகளையும் இண்டியா கூட்டணி வரவேற்கிறது.!
கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தி.மு.கழகத்தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.!


தொடர்ந்துவிமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதை தொடர்ந்து, நலம் விசாரித்துக் கொண்டதும், அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம்வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.!
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “டெல்லி விமான நிலையத்தில், முத்தமிழறிஞரின் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தேன்.!
அவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு - ஆந்திர பிரதேசம் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம் என்ற என் நம்பிக்கையை வெளிப்படுத்தினேன்.!
என்று பதிவிட்டுள்ளார்.!




Comments