நீதிமன்றங்களில் மீண்டும் மாமேதை அம்பேத்கார்! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாராட்டும் - வாழ்த்தும்!
- உறியடி செய்திகள்

- Jul 25, 2023
- 1 min read

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா....
நீதிமன்றங்களில் மீண்டும் மாமேதை அம்பேத்கார்! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாராட்டும் - வாழ்த்தும்!
அம்பேத்கர் படத்தை வைப்பதற்கு முன் முயற்சி எடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்ட அமைச்சர் உள்ளிட்டவர்களுக்குநன்றி தெரிவித்துக் கொள்வதில் தமிழர்கள் சமூகம் மட்டும் அல்ல. இந்திய ஒன்றியேமே பெருமை கொள்கிறது!
முரண்பாடுகள் எவ்வளவு இருந்தாலும்
வாழ்த்த வேண்டிய இடத்தில் வாழ்த்திதான் ஆக வேண்டும்....!
காந்தி படம் ஏன் வைத்தார்கள் ?
அறிவர் அம்பேத்கர் படம் ஏன் அகற்ற உத்தரவிட்டார்கள்...?
காந்தி படத்தை வைப்பதற்கும் எடுப்பதற்கும் காரணத்தை சொன்னாலும் அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அதிகம் இருப்பதற்கான தரவுகள் இருக்க வாய்ப்பில்லை....!
ஆனால் அறிவர் அம்பேத்கர் படம் வைப்பதற்கான காரணம் அதில் விடுதலைக்கான அரசியல் உள்ளது
பல தலைமுறைகள் கூனி குறுகி இருந்த மண்ணின் மைந்தர்களை தலை நிமிர வைத்த மாமேதை அம்பேத்கர் ....!
அறிவர் அம்பேத்கர் படத்தை அகற்றுவதற்கான காரணம் மனிதனை பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என பிரித்த இந்து மதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும்அகற்ற அரும்பாடு பட்டவர்.
அதனால் தான் மத அரசியலை முன்னிலைபடுத்தும் பி.ஜே.பி ஆட்சியில் அவரது படத்த அகற்ற வேலை திட்டமிட்டே நடத்தப்படுகிறது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி....

இந்து மதம் தவறு என்றால் அதற்கு மாற்றாக பௌத்தம் தந்த நவயுக புத்தர் அறிவர் அம்பேத்கர் ....!
ஆகவே தான் அண்ணல் அம்பேத்கர் படத்தை எடுப்பதற்கான வேலையை தொடர்ந்து மத அரசியல் செய்யும் பி.ஜே.பி கட்சி இந்த வேலையை நீதிமன்றத்தின் மூலமாக செய்கிறார்கள்.....!
அன்று வன்கொடுமை பாதுகாப்பு தடுப்புச்சட்டத்தை நீதிமன்றம் மூலம் மழுங்கடிக்க செய்தது நீதித்துறை கூட்டம்... அதை எதிர்த்து இந்திய முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்து பட்டியலின அரசியல் கட்சிகள் போராடியதின் விளைவு மீண்டும் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இன்றைக்கு அச்சட்டம் ஓரளவிற்கு மக்கள் பாதுகாப்பை நோக்கி காத்து வருகிறது...!
பி.ஜே.பி ஆட்சியில் வரும்போதெல்லாம அறிவர் அம்பேத்கர் அவர்களை சீண்டி தலித் மக்கணை உணர்வுகளை காயப்படுத்தி வருகிறது...!
அகற்றப்பட வேண்டியது
அறிவர் அம்பேத்கர் படம் அல்ல...!
ஆளுகின்ற பி. ஜே.பி. கட்சியை என மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்- சமூகநீதி ஆர்வர்கள்...!

அறிவர் அம்பேத்கர் பட விவகாரத்தை பெரிது ஆவதற்குள் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் தமிழகசட்ட.அமைச்சர் நேரிடையாக சென்று உயர்நீதிமன்ற நீதிபதியை பார்த்து அறிவர் அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டாம் என கோரிக்கையிட்டதை அனைவரும்அறிவர்!
அம்பேத்கர் படத்தை வைப்பதற்கு முன் முயற்சி எடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்ட அமைச்சர் உள்ளிட்டவர்களுக்குநன்றி தெரிவித்துக் கொள்வதில் தமிழர்கள் சமூகம் மட்டும் அல்ல. இந்திய ஒன்றியேமே பெருமை கொள்கிறது! என்றால் மிகையாகாது




Comments