மணிப்பூர்:2. பெண்களை நிர்வாணபடுத்தி ஊர்வலம்! உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்! எச்சரிக்கை!!
- உறியடி செய்திகள்

- Jul 22, 2023
- 2 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா
மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய கொடூரம் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே எடுப்போம் என தலைமை நீதிபதி !
மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளது!
. இது குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்களே நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்தார்.!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், மெய்டீஸ் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க அம்மாநில பாஜ அரசு முயன்ற விவகாரத்தால் கடந்த மே மாதம் 3ம் தேதி கலவரம் வெடித்தது. இப்போதும் மணிப்பூரில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.
இந்த விவகாரத்தில், வன்முறையை தடுத்து பிரச்னைக்கு தீர்வு காண ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.!

மணிப்பூர் கலவரம் பற்றி பிரதமர் மோடி நேற்று காலை வரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். கலவரத்தை கட்டுப்படுத்துவதாக கூறிய மணிப்பூர் மாநில அரசு இண்டர்நெட்டை முடக்கி வைத்தது. இதனால், அம்மாநிலத்தின் உண்மை நிலவரம் வெளி உலகிற்கு தெரியவில்லை. இந்நிலையில் மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்கள் இருவரை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்று, வயல்வெளியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் நேற்றுமுன்தினம் பரவியது.!

மே மாதம் 4ம் தேதி நடந்த கொடூர சம்பவம் தொடர்பான இந்த வீடியோ வைரலாக பரவியது. மணிப்பூரில் 2 பெண்களுக்கு நடந்த கொடூரம், இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் நேற்று காலை வழக்குகள் விசாரணை தொடங்க இருந்தது. அப்போது அவர், மணிப்பூரில் 2 பெண்களுக்கு நடந்த பாலியல் கொடூரம் குறித்து ஊடகங்களில் பரவிய வீடியோ மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இந்த கொடூரத்தை ஏற்கமுடியாது. இது அரசியல் சட்டமீறல் மற்றும் மனித உரிமை மீறல் ஆகும். ஜனநாயகத்தில் இதுபோன்ற கொடூர செயல்களுக்கு இடம் இல்லை.!

மணிப்பூர் வன்முறை கடந்த சில மாதங்களாக நீடித்து வருகிறது. அதனை முழுமையாக கட்டுப்படுத்த ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? பெண்களுக்கு எதிரான இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இதுகுறித்த விவரங்களை ஒன்றிய உள்துறை செயலாளர், மணிப்பூர் அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் இந்த விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசு இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிது அவகாசம் தருகிறோம். அதற்குள், ஒன்றிய அரசும், மணிப்பூர் மாநில அரசும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்’ என்று எச்சரித்தார். அப்போது, மணிப்பூர் சம்பவம் தொடர்பாக ஒன்றிய அரசுடன் கலந்தாலோசித்து அறிக்கை தாக்கல் செய்வதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதியளித்தார். இந்த வழக்கு வரும் 28ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
* ஒன்றுதான் வெளியே வந்துருக்கு… மணிப்பூர்ல… இதே போல் 100 சம்பவம் நடந்திருக்கு… முதல்வர் பிரேன்சிங் பொருப்பற்ற பதிலா!

மணிப்பூரில் மே 4ம் தேதி குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து முதல்வர் பிரேன்சிங் கூறியதாவது: 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்பட்ட சம்பவம் குறித்து எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவத்தைப் போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மணிப்பூரில் நடந்துள்ளன. எனவே, எங்கள் மாநிலத்தில் இணையத் தடையை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். இதில் ஒரு சம்பவம் மட்டுமே வெளிவந்துள்ளது. ஆனாலும் நான் அதைக் கண்டிக்கிறேன். இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம். இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை நாங்கள் கைது செய்துள்ளோம். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இத்தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.!
உறியடி செய்திக்குழு.....




Comments