மணிப்பூர் கலவரம்! பெற்றோரை தேடும் குழந்தைகள்! சித்ரவதைக்கும் இளம்பெண்கள்! ஓர் ஆய்வு பார்வை!
- உறியடி செய்திகள்

- Jul 22, 2023
- 4 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா
குறிவைக்கப்படும் இந்தியாவின் மகள்கள் : தேசத்தையே உலுக்கிய வீடியோ..!! -
மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சம்பவம்!
மணிப்பூர் கலவரம்! பெற்றோரை தேடும் குழந்தைகள்! சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட இளம்பெண்கள்!
இந்தியாவையே புரட்டிப் போட்டுள்ள இந்த சம்பவம்! ஓர் பார்வை!!
இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சுற்றிலும் ஆண்கள் புடைசூழ செல்போன் கேமராக்களில் படம்பிடித்துக் கொண்டே ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சி காணொளியாக வெளியாகி இந்தியாவையே உலுக்கி உள்ளது.!
அந்த காணொளி காட்சி மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ம் தேதி படமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள காங்கோப்கி மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் இருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஒடிய போது 3 குக்கி இன பெண்களை வழிமறித்து காட்டுமிராண்டி கும்பல் ஒன்றால் ஆடைகளை கழட்டச் சொல்லி நிர்வாணப்படுத்தியதோடு , அவர்களில் 21 வயது பெண் ஒருவரை பட்டப்பகலில் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்திருக்கிறது.!

இந்த சம்வத்தை தடுக்க சென்ற பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை மற்றும் சகோதரனை அடித்துக் கொன்றிருக்கிறது அந்த கும்பல் .!
மற்ற 2 பெண்களும் அந்த காட்டுமிராண்டி கும்பலிடமிருந்து தப்பிக்க ஊர்காரர்கள் உதவி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் தாயார் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்தியாவையே வெட்கி தலைகுனிய வைத்த இந்த காணொளி காட்சி சம்பவத்தின் உண்மை தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது!
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அரசியல் தலையீடுகள் ,கண்டனங்கள் என அதிர்வலகளை ஏற்படுத்த , காணொளியில் பச்சை டீஷர்ட் அணிந்த 32 வயதான ஹீராதாஸ் என்ற குற்றவாளியை தளபல் மாவட்டத்தில் கைது செய்து , கடந்த 77 நாட்கள் மணிப்பூர் கலவரத்தில் முதல் கைதை நடைமுறைப்படுத்தி இருக்கிறது மணிப்பூர் காவல்துறை.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெரும்பான்மை சமூகமான மெய்தி இன மக்களுக்கு அம்மாநிலத்தின் சிறுபான்மையராக உள்ள பழங்குடியினத்தை சேர்ந்த குக்கீ இன மக்களுக்கும் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது!

. இரண்டு தரப்பிலும் பாதிப்புக்குள்ளானது பெண்களும் , குழந்தைகளும் தான் . கண் முன்னே அவர்களது வீடுகளை தீயிட்டு கொளுத்திய நிகழ்வுகளை பார்த்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தாலும் கண் மூடினால் தீ வைப்பார்களோ என்ற அச்சத்தால் தூங்க முடியாமல் தவித்து வருகிறார்கள் அந்தபெண்களும் ,குழந்தைகளும்.!
3 ,4 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் கணவனை இழந்த ஒரு பெண்ணிடம் அப்பா எங்கே என்று கேட்கும் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்வது என்பதை தெரியாமல் தேற்றுவாரின்றி நிற்கிறாள் அந்த பெண். கணவனை இழந்து, வீடுகளை நிலங்களை, உடைமைகளை இழந்து ,கைகளில் கணவர்களின் புகைப்படங்களை மார்போடு அணைத்துக் கொண்டு அழும் அந்த பெண்களின் எதிர்காலம் மீண்டும் பூஜ்யத்தில் இருந்து தொடங்க திக்கு தெரியாமல் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள் !
அந்த பெண்களின்.
தந்தை, சகோதரன் என இரத்த உறவுகளின் இழப்பு, பறிபோன பாடப்புத்தகங்கள் , செல்லமாக வளர்த்த வளர்ப்பு பிராணிகள் , இது வரை தங்கி இருந்த வீடு, விளையாடிய விளையாட்டு பொருட்கள் என அனைத்தையும் இழந்து நிற்கும் அந்த குழந்தைகள் பள்ளிக்கும் செல்ல முடியாமல் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்!

தந்தை, சகோதரன் என இரத்த உறவுகளின் இழப்பு, பறிபோன பாடப்புத்தகங்கள் , செல்லமாக வளர்த்த வளர்ப்பு பிராணிகள் , அது வரை தங்கி இருந்த வீடு, விளையாடிய விளையாட்டு பொருட்கள் என அனைத்தையும் இழந்து நிற்கும் அந்த குழந்தைகள் பள்ளிக்கும் செல்ல முடியாமல் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கே உரிய குழந்தை பருவத்தையும் இழந்து நிற்கும் அந்த குழந்தைகளின் மன நிலையை சிந்திக்கவே பதட்டமாக உள்ளது!
மணிப்பூர் தலைநகரம் இம்பாலை சுற்றியுள்ள சூரசந்தபூர் ,பிஸ்னாபூர் , தூர்பங், மொய்ராங் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில கிராமங்கள் முழுவதுமே சூரையாடப்பட்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஒரே கிராமத்தை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பக்கத்து கிராமங்களில் எல்லை பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.!

12 நாட்களுக்கு மேல் குளிக்காமல் முகாம்களில் இருக்கும் பெண்கள் , தண்ணீரை மட்டும் குடித்து வாழும் பெண்கள் , தங்கள் குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகளை மட்டுமே உணவாக கொடுக்கும் அம்மாக்கள் என முகாம்கள் இன்னொரு வதை முகாமாக மாறி இருக்கிறது.!
சில தன்னார்வ அமைப்புகள் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைகளுக்கு உணவுகள் , பாடப்புத்தகங்கள் , உளவியல் நிபுணர்களை கொண்டு உளவியல் பயிற்சிகள், நிவாரணங்கள் என்று வழங்கப்பட்ட போதும் கையில் ஆயுதங்கள் , துப்பாக்கிகள் , கம்புகள் என இளைஞர்கள் கூட்டமாக கூட்டமாக செல்வதை பார்க்கும் அந்த பிஞ்சு குழந்தைகளின் மனநிலை பெரும் அச்சத்திலயே தான் உள்ளது.!
கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் நிலை மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாததால் குழந்தை பேரு குறித்த அச்சம் , உளவியலாக கர்ப்ப கால பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

. இன்னொரு பக்கம் கார்கள் மற்றும் சாலைகளில் குழந்தை பேறுகள் நடந்தேறுகிறது. பச்சிளங் குழந்தையோடு பாலூட்டும் தாய்மார்கள் முறையான ஊட்டசத்தான உணவின்றி பட்டினி கிடக்கிறார்கள் .!
இதுவரை காடுகளின் வாசம் அறிந்த பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்து தற்போது தான் கல்வியின் சுவாசத்தை உணர்ந்த முதல் தலைமுறை படிப்பறிவு பெரும் பெண்கள் ,போட்டி தேர்வுக்கு தயாராகும் பெண்கள் அனைவரின் எதிர்காலமும் தற்போது கேள்வி குறியாகி இருக்கிறது.!

கடந்த 3 மாதங்களில் 14 ஆயிரம் பெண்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் . 14 ஆயிரம் பெண்கள் என்ற புள்ளி விவிரங்களை அளித்தது அரசோ , அரசு அதிகாரிகளோ அல்ல.!
அந்த பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் நாப்கின்கள் வழங்கி வரும் தன்னார்வ அமைப்புகள். இன்னும் நாப்கின்கள் வாங்க,உள்ளாடைகள் வாங்க ,உணவளிக்க, அவர்கள் நன்கொடை திரட்டியும் வருகிறார்கள்.!

இத்தகைய முகாம்களில் தங்கியிருக்கும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் ,ஆண்களின் சீண்டலுக்கு ஆளாவதும் எப்போதும் அரங்கேறும் . பல்வேறு இழப்புகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு கூடுதல் சிக்கலை பாலியல் வல்லுறவு தொந்தரவுகள் ஏற்படுத்தும் . வயதான பெண்களின் நிலை ,ஆதரவின்றி தவிக்கும் பெண்கள் என எல்லா பருவ நிலையில் உள்ள பெண்களும் பெண் என்பதற்காகவே கூடுதல் வதையை , இத்தகைய கலவரங்களின் போது அனுபவிக்கிறார்கள்.!
இவை அனைத்தும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அனைத்து தேசிய ஊடகங்களிலும் வந்த செய்திகள். கூடவே ” The Burden of Riots” என்ற தலைப்பில் பிரபல இணையதளமொன்றில் கட்டுரையாகவும் வெளிவந்துள்ளது.!

சாதி, மதம் , பொருளாதார அடுக்குகளில் தந்தை வழி சமூகத்தில் ஆண்களின் அதிகாரத்தை வைத்து நடத்தப்படும் பெண்களின் மீதான வன்முறைகள் காலம் காலமாக நடந்தேறுகிறது . சிறு குழுக்களுக்கிடையே ஆன கலவரங்கள் தொடங்கி இரு நாடுகளிடையே ஆன பெரும் போர்கள் வரை என எத்தகைய வடிவங்களில் வன்முறைகள் நடந்தாலும் அதில் பாதிப்புக்குள்ளாவது பெண்கள் தான் . எதிராளிகளை பழிதீர்க்க கலவரங்களில் ஆண்கள் ஆயுதமாக பெண்களின் உடலை தான் பயன்படுத்துகிறார்கள்.!
பெண்களின் உடல் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய வன்முறைகள் மூலம் எதிராளியை வீழ்த்த முடியும் என்றோ அல்லது வீழ்த்த முடியாது போது பெண்களை பாலியல் வல்லுறவு செய்து சித்தரவதைக்கும் உள்ளாக்குகிறார்கள்!

1947 ல் இந்தியா சுதந்திரமடைந்து இரண்டாக பிரிந்த போது , 1971 ல் நடைபெற்ற வங்கதேச போர் , 1984 ல் அரங்கேறிய சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் , இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர் இனப்படுகொலை என தெற்காசிய வரலாற்றில் நடைபெற்ற இத்தகைய பெரும் வன்முறைகளில் பெண்கள் மீதும் அவர்களது உடல்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் எண்ணிலடங்காதவை. !
அவைகள் அனைத்தும் வார்த்தையால் விவரிக்க முடியாதவை. அவை பெரும்பாலும் வெளியே வருவதே இல்லை. அப்படியே அவை வெளியே வந்தாலும் அதற்கான நீதி என்பது இரண்டாம்பட்சம் தான் .!
ஒரு வேளை அப்போதெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திருந்தால் இப்படி பட்டவர்த்தனமாக பாலியல் வல்லுறவு செய்ய ,நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லும் அளவிற்கு குரூர ,குரோத மனநிலை உருவாகாமல் போயிருக்குமோ என்னவோ.!

தேர்தல் அரசியலில் அரசியல் கட்சிகள் அனைத்தும் பெண்களை மையமாக வைத்து நலத் திட்டங்களை அறிவிப்பதை தற்போது வாடிக்கையாக கொண்டுள்ளனர் . இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் பெண்களின் வாக்கு வங்கி அதிகம் இருப்பதாலும் ,பெண்களின் முன்னேற்றமும் தேவைப்படுவதாலும் தான் இத்தகைய நலத்திட்ட அறிவிப்புகள் வருகிறதே என்று ஆதங்கப்பட்டாலும் அப்படியாவது பெண்கள் நலனில் அரசியல் தலைவர்கள் அக்கறை கொள்கிறார்களே என ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்கள் பெண்கள்!

ஆனால் வருங்காலங்களில் இத்தகைய அசம்பாவிதங்கள் , வன்முறைகள் , கலவரங்கள் நடந்தேறும் போது பெண்களை பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக தர வேண்டும். அந்த வாக்குறுதிகளை மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போன்று அசம்பாவித காலங்களில் , பேரிடர் காலங்களில் குழந்தைகளை, பெண்களை சுயமரியாதையுடனான பாதுகாப்பை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டியது ஆளக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தலையாய கடமையாகும்!
அது தான் ஓரிரவில் இந்திய தேசத்தையே உலுக்கிய மணிப்பூர் பெண்களை நிர்வாண படுத்திய,காணொலி.சொல்லமுடியாத கொடூரங்களை நாட்டுக்கும், மக்களுக்குச் சொல்லும் பாடம்.!
நன்றி.......பி.பி.சி. தமிழ்




Comments