௹,115 கோடியில் மயிலாடுதுறை புதிய ஆட்சியர் அலுவலகம்.! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.!
- உறியடி செய்திகள்

- Mar 4, 2024
- 1 min read

மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.!
மயிலாடுதுறையில் ரூ.114 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.!

தமிழகத்தில் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு பொறுப்பேற்ற திமுக அரசு, மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சி பணிக்காக பல்வேறு திட்ட பணிகளை துவங்கி வைத்து வருகிறது.!
அதன் ஒருபகுதியாக கடந்த 2021ம் ஆண்டு மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஊராட்சியில், ரூ.114.48 கோடி மதிப்பில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.!
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுமான பணிகள் நிறைவுற்றது. இதனை தொடர்ந்து புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 7 மாடி கட்டிடத்துடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.!
மன்னம்பந்தல் அருகே மூங்கில் தோட்டத்தில் ரூ.115 கோடியில் கட்டிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.!

தி.மு.கழக முதன்மைச்செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை - சேலம் மாவட்ட பொருப்பு அமைச்சர், கே.என்.நேரு, மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஏ.வ.வேலு, ரகுபதி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வீ.மெய்யநாதன், அரசு கொறடா கோ, வி.செழியன், உள்ளிட்ட அமைச்சர்கள், திருச்சி மாநகர தி.மு.கழகச் செயலாளர், மாநகர மேயர் மு.அன்பழகன் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.கழக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்!.
இதனை தொடர்ந்து , ரூ.88,62 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு கட்டிடப்பணிகளை தொடங்கி வைத்து,நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 12,653 பயனாளிகளுக்கு ரூ.655.44 கோடி நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகங்களை வழங்கி அமைச்சர்கள் வரவேற்றார்கள்.




Comments