மதுக்கடைகள் படிப்படியாக குறைக்க நடவடிக்கை ! அமைச்சர் சு.முத்துசாமி அறிவிப்பு நம்பிக்கையளிக்கிறது !தொல்.திருமா!
- உறியடி செய்திகள்

- Sep 12, 2024
- 1 min read

தோகமலை.
ச.ராஜா மரியதிரவியம் ........
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் நடத்துவதில் முதல்வருக்கு எள்ளலவும் விருப்பமில்லை. படிப்படியாக குறைக்க நடவடிக்கை ! விசிக,
மது ஒழிப்பு மாநாட்டை திட்டமிட்டு அரசியலாக்க சிலர் முயற்சி ! அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி.
அமைச்சரின் அறிவிப்பு நம்பிக்கையளிக்கிறது. தொல்.திருமா !
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க-வும் பங்கேற்கலாம் என திருமாவளவன் அறிவித்தார். தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் அ.தி.மு.க-வுக்கு திடீர் அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில்
ஈரோடு அரசு பேருந்து நிலையத்தில் 5 புதிய பேருந்துகள் இயக்கத்தைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதுவிலக்கு கொள்கையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ஒரு மாநாட்டை நடத்துகின்றனர். அவர்கள் நடத்தும் மதுவிலக்கு மாநாட்டை நாம் தவறு என்று சொல்ல முடியாது. அவர்கள் அரசை எதிர்த்தோ, முதல்வர் .தளபதியை எதிர்த்தோ மாநாடு நடத்தவில்லை.கழகத் தலைவர் முதல்வர் தளபதி யாருக்கு டாஸ்மாக் கடையை தொடர்ந்து நடத்துவதில் எள் அளவுக்கும் விருப்பம் இல்லை.!


டாஸ்மாக் கடைகள் என்றைக்காவது ஒரு நாள் மூடப்படவேண்டும் என்பது தான் அவரின் எண்ணம். ஆனால், உடனடியாக இதனைச் செய்தால் எந்த நிலைமை ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும். எனவே அப்படிப்பட்ட கடுமையாக சூழ்நிலையை நிதானமாக அணுக வேண்டும் என்பது தான் அரசின் நோக்கமாக உள்ளது.

எனவே, மக்களை மது பழக்கத்தில் இருந்து மீட்டு கொண்டுவர தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு திருமணம் நடந்தால் எதிரி உட்பட அனைவருக்கும் அழைப்பு கொடுக்கிறோம். அதுபோல, மதுவிலக்கு மாநாட்டுக்கு விசிக அழைப்பு விடுத்துள்ளனர். அதற்கே அதிமுகவினர் இவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டை அரசியலாக்க முயற்சிக்கின்றனர் !
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
இதனை தொடர்ந்து
வி.சி.க தலைவர், மக்களவை உறுப்பினர், முனைவர் தொல்.
திருமாவளவன்: “படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என அமைச்சர் முத்துசாமி அறிவித்திருப்பது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அமைச்சர் முத்துசாமிக்கு மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
என்கிற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
.




Comments