மேட்டூர் அணை! அமைச்சர் கே.என்.நேரு திறந்து மலர் தூவி வரவேற்றார்! ஆர்பரிக்கும் வெள்ளம்! அரசு எச்சரிக்கை !
- உறியடி செய்திகள்

- Jul 29, 2024
- 3 min read

மேட்டூர் அணை, அமைச்சர் கே.என்.நேரு திறந்து மலர் தூவி வரவேற்றார் !அணையில் இருந்து டெல்டாவை நோக்கி ஆர்பரித்து வரும் வெள்ளம்.! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! தயார் நிலையில் நிவாரண முகாம்கள்! கட்டுபாட்டு மையங்கள்! அவசர கால தொடர்பு எண்களும் அறிவிப்பு!முழு கொள்ளைவை எட்டும் மேட்டூர் அணை நிலவரம்!
தொடர்ந்து அணையின் நிலவரம், கரையோர மக்கள் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை, மீட்பு பணிக்கான ஏற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தீவிர முழுகவனம் செலுத்தி கண்காணித்து துரிதமாக நடவடிக்கைகள் எடுத்திடவும் அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி கேட்டுக் கொண்டார்.!
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன.!
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து 1 லட்சத்து 66 ஆயிரத்து 234 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.!

அதன்படி இன்று காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 1.47 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலை உருவாகியது!
இந்த நிலையில், மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து, நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.!
முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவெடுக்க ப்பட்டது.!

தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு மற்றும்
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, நேற்று மாலை 3 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து
ஆர்பரித்து கரைபுரண்டு வந்த காவிரி நதி வெள்ளநீரை அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி, வாஞ்சையுடன் வரவேற்றார்.!
தொடர்ந்து அணையின் நிலவரம், கரையோர மக்கள் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை, மீட்பு பணிக்கான ஏற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தீவிர முழுகவனம் செலுத்தி கண்காணித்து துரிதமாக நடவடிக்கைகள் எடுத்திடவும் அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி கேட்டு கொண்டார்.!
முதற்கட்டமாக 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தைப் பொறுத்து நீர்திறப்பின் அளவு அதிகரிக்கக் கூடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது !

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அணையின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.!
இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தும் வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 111.20 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 52 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.52 லட்சம் கனஅடியில் இருந்து 1.55 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.! இதனால் அணையின் நீர்மட்டம் 116.36 அடியை தாண்டியுள்ளது.! காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 12,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில . நீர் இருப்பு 87.78 டிஎம்சியாக உள்ளது.!
நீர்வரத்தானது தொடர்ந்து இதே அளவில் வந்து கொண்டிருந்தாலும், அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் அளவு 2 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீடித்தாலும் மேட்டூர் அணை இன்று நிரம்பலாம் என்று நீர்வளத்துறை வட்டாரத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.!

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகங்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.!

மாநில மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்கள் 1070, 1077 ஆகிய எண்களிலும், 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது.!
இன்று(29.07.2024) காலை 8 மணியளவில் 116.360 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்கு 120 அடியை எட்டும் என்றும் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் தமிழகஅரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.!




Comments