top of page
Search

அமைச்சர் எ.வ.வேலு விலாசல்! காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் நிறமா! மாஜி வேலுமணிக்கு கேள்வி?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 12, 2024
  • 2 min read
ree

தோகமலை.

ச.ராஜா மரியதிரவியம் ........


காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் நிறம் தான்“ என்பதை போல பாராட்ட மனமில்லை என்றாலும் கூட உண்மைக்கு முற்றிலும் மாறான தகவலை வேறு மணி பேசலாமா ? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி ?


கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பனக்கார வீதிவரை உயர்மட்டப் பாலம் குறித்து. அதிமுக மாஜி .வேலுமணி, உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பி வருவதாக அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார்.!

ree

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,!


கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை, உயர்மட்டப்பாலம் அமைக்கும் திட்டம் கடித எண்.23504/திட்டம்-1, 2010 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரால் கருத்துரு உருவாக்கப்பட்டது.!


பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் ஒப்பனக்கார வீதி சாலைகளில், அதிகப் போக்குவரத்துச் செறிவு(CPU) இருந்ததாலும், உக்கடம் பகுதியில், போக்குவரத்துச் நெரிசல் மிக அதிகமாக இருந்ததாலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த முத்தமிழறிஞர் கலைஞரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.!

ree

14.11.2011இல் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில், உயர்மட்டப்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த மனம் இல்லாமல், ஏழு ஆண்டுகாலம் காலதாமதத்திற்குப் பின் 2.4.2018 அன்று பாலப்பணி தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது.!


ree

கோவை மாவட்டத்தில், மிகப்பெரிய அதிகார மையமாக செயல்பட்டு வந்த வேலுமணி , 7 ஆண்டுகாலம் கோவை மாவட்ட மக்களின் மீது எவ்வித அக்கரையும் காட்டவில்லை.10 ஆண்டுகால காலதாமதத்திற்குப் பின் 2018-2019 ஆம் நிதியாண்டில், 24.1.2021 அன்று, உயர்மட்டப் பாலத்தினை நீட்டித்து, மீண்டும் பணி துவங்க ஒப்பந்தம் போடப்பட்டது.!


7.5.2021 அன்று, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், தளபதியார், தலைமையில் கழக ஆட்சிப் பொறுப்பேற்றபோது. 12% சதவீத பாலப்பணிகள் மட்டுமே முடிந்து இருந்தன.!

ree

கழகத் தலைவர் முதலமைச்சர் தளபதி , இப்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னிடம் அறிவுறுத்தினார்.!


கழகத்தலைவர் முதலமைச்சரின் அறிவுரையின்படி, பலமுறை கோயம்புத்தூர் தளத்திற்கே சென்று, ஆய்வுக் கூட்டங்களை நடத்தியதுடன், பொறியாளர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் எந்தெந்த வகையில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று, அறிவுரைகள் வழங்கி செயல்படுத்தியுள்ளேன். என்னுடைய தொடர் நடவடிக்கையின் காரணமாக 88% சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டது. இப்பாலப்பணிக்கு சுமார் ரூ.318 கோடி நிதி திராவிட மாடல் ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளது.!

ree
ree

சாலையைப் பயன்படுத்தக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுக்களின் கோரிக்கைகளை ஏற்று, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காலவிரயத்தைத் தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதியாரால், 9.8.2024 அன்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.!

ree

இந்த உயர்மட்டப்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது குறித்து, தினத்தந்தி, தினமலர், தினகரன், தி இந்து, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, மாலைமலர், மாலைமுரசு, தமிழ்முரசு, தமிழ் இந்து ஆகிய தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் படத்துடனும் பாராட்டியுள்ளதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வேலுமணி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்குப் புறம்பானச் செய்திகளை, பேட்டியாக கொடுத்துள்ளார்.!

ree

தினமலர் தமிழ்ப் பத்திரிகை “நீட்டித்தது பழனிசாமி “ “நிறைவேற்றியது கழகத் தலைவர் தளபதி.மு.க.ஸ்டாலின்“ எனப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது! இது அனைவரும் நன்கு அறிந்த உண்மை!

.“காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் நிறம் தான்“

என்ற முது மொழிக்கேற்ப, கழக ஆட்சியால் பல பணிகள் செய்யப்பட்டுள்தை பாராட்ட மனமில்லை என்றாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம்.தற்போது, நடைபெற்று வரும் திருச்சி சாலை சுங்கம் பகுதியில், ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணி 31.8.2024க்குள் முடிக்கப்படும். இப்பணி விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்பதையும் .வேலுமணிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்,!


இவ்வாறு அமைச்சர் எ.வ. வேலு அதில் கூறியுள்ளார்.


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page