top of page
Search

அமைச்சர் கே. என். நேரு வலியுறுத்தல்! அதிகாரிகள் மக்கள் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 5, 2024
  • 2 min read
ree

தமிழக முதல்வர் - அரசு செயல்படுகளுக்கும், வளர்ச்சிப் பணிகள், திட்டங்களை விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தல்.!


தி.மு.கழக வளர்ச்சிக்கான செயல்பாடுகளானாலும், அதே மக்கள் நலப்பணி திட்டங்களை ஆய்வு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு குழுமையாக சென்றடையச் செய்வதிலும், தான் ஏற்றுகொள்ளும் பொருப்புகளில் தனி பெரும் சக்தியாக தன்னை முழுயாக அர்ப்பணித்து கொண்டு, தி.மு.க. ஆட்சி அமைக்கும்போதெல்லாம் அர்ப்பணிப்பு உணர்வுடன் மிகுந்த சுறுசுறுப்புடன் சுற்றி சூழன்று பணியாற்றும் அமைச்சர்களில் கே.என்.நேரு எப்பவும் தனி இடம்பெற்றவர் என்று கட்சியினரும், அரசு அதிகாரிகளும் கூறுவது வழக்கம்.!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தி.மு.கழக. இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2. நாள் சுற்றுப்பணமாக திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சி கலந்து கொண்டார், அவருடன் இணைந்து பயணம் மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சேலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளை முடித்து, தொடர்பயணமாக, மறுநாள் வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக திருநெல்வேலி சென்றார்.!

ree
ree

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தில் மகாத்மா காந்தி மார்க்கெட் பணிகள் ரூ.40.03 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இங்கு 420 கடைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை, தி.மு.கழக முதன்மைச்செயலளர் சேலம் மாவட்ட பொருப்பு - தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து

பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டனர்.!

ree

இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் ரூ.53.14 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம், வணிக வளாகம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை பார்வையிட்டு அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் நூலகம், பொதுவான நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினர்.!

ree

மேலும், ரூ.85.56 கோடி மதிப்பில் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய வணிக வளாகத்தில் அருகில் உள்ள வணிக நிறுவனங்களின் வாடகைக்கு ஏற்ப வாடகை நிர்ணயம் செய்து, வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கவும், அரசுத்துறை சார்ந்த நிறுவனங்களின் பயன்பாட்டுக்கும் ஒதுக்கீடு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.!


முன்னதா அமைச்சர்கள் ஆய்வுப் பணியை தொடங்கியபோது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அங்கு இல்லை என்பதை அறிந்த அமைச்சர் கே.என்.நேரு, அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.!

ree

அப்போது, “நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் ஆய்வுகளை முடித்து கொண்டு நாங்களே நேரில் வந்து பார்ப்போம் அல்லவா?. இரண்டு அமைச்சர்கள் ஆய்வு செய்துகொண்டு இருக்கிறோம், ஆட்சியர் வராவிட்டால் எப்படி சார்?, எங்கு இருக்கிறீர்கள், எப்போது வருவீர்கள்” கழகத்தலைவர், தமிழக முதல்வர், அரசு செயப்பாடுகளுக்கு அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டாமா?

மாவட்ட ஆட்சித்தலைவரே இப்படி இருக்கலாமா? மற்ற அதிகாரிகள் எப்படி பொருப்புடன் மக்களுக்கான பணிகளை கவனமுடன் செய்வார்கள் என்று கூறினார்.!


பின்னர் தாமதமாக வந்த ஆட்சியர் கார்த்திகேயன், ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அமைச்சரிடம் தாமதத்துக்கான காரணத்தை கூறியதாக தெரிகிறது.!


சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மேயர் (பொறுப்பு) கே.ஆர்.ராஜூ, சட்டமன்ற முன்னால், சபாநாயகர், ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் உள்பட உடனிருந்தனர்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page