அமைச்சர் கே.என்.நேரு தகவல்! முடியும் தருவாயில் சென்னை வடிகால் பணிகள்! முழுமையாக ஆகாய தாமரை அகற்றவும் உத்தரவு!
- உறியடி செய்திகள்

- Jul 29, 2024
- 1 min read

சென்னை மாநகராட்சி பகுதிகளில், வடிகால் அமைக்கும் பணிகள் விரைந்து செயல்படுத்த பட்டு முடியும் தருவாயை நெருங்கி வருவதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.! மேலும் வட கிழக்கு பருவமழை தொடங்கும் முன்னர் ஆகாய தாமரைகளை முழுயாக அப்புறபடுத்துவதுடன், அனைத்து வளர்ச்சி, திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.!

சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று (ஜூலை 29) காலை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், மாநகராட்சிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, “வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும். நீர்நிலைகளில் காணப்படும் ஆகாயத் தாமரையை முழுமையாக அகற்ற வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு - தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது.!
தமிழ்நாட்டில் தி.மு.கழக ஆட்சி அமையும் போதெல்லாம், அரசு நிர்வாகம் முழுமையாக முடுக்கி விடப்பட்டு அனைத்து துறை சார்ந்த மக்கள் நலத்திட்டங்களும், அடிப்படை கட்டமைப்பு, அத்தியாவச தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு பயனளிக்கும் வகையில், விரைவாக செய்து முடிக்கப்பட்டு வந்தது.!

அந்த வகையில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் வழியில், மக்கள் அனைவருக்கும், அனைத்து விதமான திட்டங்களும், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியார், உத்தரவு விட்டு, நகராட்சி நிர்வாகம். குடிநீர் வழங்கல் துறை திட்டங்களை செயல்படுத்த தனிகவனத்துடன், வழிகாட்டி, அறிவுறுத்தல்களும் வழங்கி வருகிறார்.!

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், அடிப்படை வசதிகள் போன்றவற்றில் பெரும் பங்கு வகிக்கும் நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் தமிழ்நாட்டில் இதுவரையில்லாத அளவிற்கு, அதிக அளவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.!

சென்னை மாநகராட்சியை பொருத்தமட்டில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆறு தொடர்பான பணிகள் முடிய 8 மாதம் உள்ளது.!

இதில் தற்போது வரை 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது..மெட்ரோ ரயில் நிறுவனத்துடன், சென்னை மாநகராட்சி இணைந்து பல்வேறு பணிகளை முதல்வரின் வழிகாட்டல்களோடு, செய்து வருகிறது.!

மெட்ரோ ரயிலுக்காக தோண்டிய பள்ளத்தில் உள்ள தண்ணீரை எடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. . தேவைப்படும் இடங்களில் மோட்டார்கள் வைத்தும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.!
வடகிழக்கு பருவமழைக்கு முன்தாக அதாவது செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது,!
இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு கூறினார்.!




Comments