top of page
Search

அமைச்சர் கே.என்.நேரு தகவல்! மக்கள் தொகை! அடிப்படை வசதி - கட்டமைப்புக்காக தான்!மாநகராட்சியுடன் இணைய வற்புறுத்தல் இல்லை!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 30, 2024
  • 2 min read
ree

தோகமலை.

ச.ராஜா மரியதிரவியம் ......


திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இன்று (29.08.2024) கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் திருச்சி மாவட்டத்திற்கு 09 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியை (Mobile Veterinary Clinic) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக.தி.மு.கழக முதன்மைச்செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு - தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.!

ree

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு

மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் பணிகள் நடப்பதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ரயில்வே நிர்வாகத்திடமிருந்து சில அனுமதிகள் பெற வேண்டும் என்பதால், அது காலதாமதம் ஆகிறது. தமிழக அரசு பாலத்தைக் கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். இது குறித்து ரயில்வே கோட்ட மேலாளரிடம் மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார், விரைவில் பணிகள் முடிக்கப்படும்.!

ree

இந்த மாதம் புதிய பேருந்து முனையம் தொடங்குவதாக கூறி கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், கூடுதலாக 100 கோடி ரூபாய்க்கான ரிவைஸ்டு எஸ்டிமேட் போடப்பட்டு, அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அதில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, உணவகங்கள் போன்றவை இருக்கும் வகையில், டிசம்பருக்குள் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது!

ree

வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி மழைநீர் அகற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடக்க உள்ளது. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அனைத்து பகுதிகளிலும் ஆகாய தாமரையை அகற்றபட்ட விட்டது சென்னை மாநகராட்சியில் புதிதாக ரூ.22 கோடி மதிப்பில் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது . அந்த எந்திரத்தை பயன்படுத்தி அனைத்து வாய்க்காலிலும் தூர்வாரப்பட்டு வருகிறது.

ree

எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது எல்லா மாநகராட்சிகளிலும் வாய்க்காலை சுத்தப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.!

மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் அனைத்து இடங்களிலும் முடிந்து விட்டது. 20 செ.மீ., 25 செ.மீ. மழை பெய்தால் எந்த வடிகாலுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும். அங்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் தேங்கினால் மோட்டார் வைத்து உடனே அகற்றப்படும். எல்லா சுரங்கப்பாதைகளையும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. !


ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைவதில் யார் விருப்பப்படுகிறார்களோ, அவர்கள் திருச்சி மாநகராட்சியுடன் வந்து இணைந்து கொள்ளலாம்.!


நாளுக்கு நாள் மாநகராட்சியின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதே சமயம், வெளி மாவட்டங்களில் இருந்து புலம்பெயர்ந்து திருச்சிக்கு வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.!


எனவே, ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே பொதுமக்கள் வந்து குடியேறுவதற்கு ஏதுவாக அமையும். இதனை கருத்தில் கொண்டு தான் மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக, மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சியில் விரும்ப மில்லை.!


இவ்வாறு அவர் கூறினார்.!


மாவட்ட ஆட்சித் தலைவர் .மா.பிரதீப் குமார்., மு.அன்பழகன் மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் , பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி அ.சௌந்தரபாண்டியன் , துறையூர்,செ.ஸ்டாலின் குமார். ஸ்ரீரங்கம் எம்.பழனியாண்டி உடனிருந்தார்கள்

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page