top of page
Search

அமைச்சர் நேரு அட்வைஸ்! முதல்வர் மு.க. ஸ்டாலின் என்றும்மக்களோடு தான்! உங்க கட்சிய காப்பாத்துங்க பழனிசாமி!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 28, 2024
  • 5 min read
ree

தோகமலை ச ராஜா மரிய திரவியம் .....


தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் என்றும் மக்களோடு தான் உள்ளார். உங்க கட்சிய காப்பாத்துங்க பழனிசாமி,! அதிமுக ஆட்சி மக்கள் விரோத - விரும்பத்தகாத நிகழ்ச்சிகளை பட்டியல் இட்டு,! அமைச்சர் கே.என்.நேரு அட்வைஸ் கூறியுள்ளார்.!!!


ree
ree
ree

இது குறித்து தி.மு.கழக முதன்மைச் செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை - சேலம் மாவட்ட பொருப்பு,அமைச்­சர் கே.என்.நேரு விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:–




கள்­ளக்­கு­றிச்சி விஷச்­சா­ராய விவ­கா­ரத்­தில் உண்­ணா­வி­ர­தப் போராட்­டம் நடத்­தி­யி­ருக்­கி­றது அ.தி.மு.க. ‘சிபிஐ விசா­ரணை வேண்­டும்’ என்ற கோரிக்­கை­யை­யும் வைத்­தி­ருக்­கி­றது.!


ஓ...... இதுதான் அறுக்கத் தெரியாதவன், 52 அறுவாளை எடுத்துகிட்டு அறுக்கப்போன கதையோ!


சென்னை எழும்­பூர் ராஜ­ரத்­தி­னம் மைதா­னம் அரு­கே­தான் இந்த உண்­ணா­வி­ர­தப் போராட்­டம் நடத்­தப்­பட்­டி­ரு­கி­றது. 7ஆண்­டு­க­ளுக்கு முன்பு இதே ராஜ­ரத்­தி­னம் மைதா­னம் அருகே 2017 மார்ச் 8-ஆம் தேதி ஓ.பன்­னீர்­செல்­வம் உண்­ணா­வி­ர­தப் போராட்­டம் ஒன்றை நடத்­தி­னாரே… அது பழ­னி­சா­மிக்கு நினை­வி­ருக்­கி­றதா?

ree

ஜெய­ல­லிதா மர­ணத்­திற்கு சிபிஐ விசா­ரணை கேட்­டுத்­தான் அன்­றைக்­குப் பன்­னீர்­செல்­வம் உண்­ணா­வி­ர­தம் இருந்­தார். இதை பழ­னி­சா­மி­யோடு உண்­ணா­வி­ர­தப் பந்­த­லில் அமர்ந்­தி­ருந்த முன்­னாள் அமைச்­சர் சி.பொன்­னை­ய­னி­டம் கேட்­டுத் தெரிந்து கொள்­ள வேண்டும்.!. அந்த பன்­னீர்­செல்­வம் உண்­ணா­வி­ர­தத்­தி­லும் பங்­கேற்­ற­வர் தான் பொன்­னை­யன்.!

ree

அன்­றைக்கு மோடி­யி­டம் செல்­வாக்கு பெற்­றி­ருந்த பன்­னீர்­செல்­வம் அணி­யி­ன­ரின் கோரிக்­கையை ஏற்று, சிபிஐ விசா­ர­ணையை அமைத்­து­வி­டு­வார்­களோ என அஞ்சி, உடனே ஜெய­ல­லி­தா­வின் மருத்­துவ அறிக்­கையை உண்­ணா­வி­ர­தத்­துக்கு இரண்டு நாட்­கள் முன்பு பழ­னி­சாமி அரசு ஏன் அவ­சர அவ­ச­ர­மாக வெளி­யிட்­டது நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.!

ree

உண்­ணா­வி­ர­தப் பந்­த­லில் பேசிய பன்­னீர்­செல்­வம், “சிபிஐ விசா­ரணை நடந்­தால் முதல் குற்­ற­வாளி விஜ­ய­பாஸ்­கர்­தான். சிபிஐ விசா­ரித்­தால்­தான் ஜெய­ல­லிதா மர­ணத்­தின் மர்­மம் வெளியே வரும்” என்­று பேசினார். பழனிசாமியின் இதய தெய்வமான தலை­வி­யின் மர்ம மர­ணத்­தில் சிபிஐ விசா­ர­ணைக்கு அன்று முட்­டுக்­கட்டை போட்ட பழ­னி­சாமி, இன்­றைக்­குக் கள்­ளக்­கு­றிச்சி விவ­கா­ரத்­திற்கு சிபிஐ விசா­ரணை கேட்­ப­தற்கு வெட்­க­மாக

இல்­லையா?

ree

’ஜெய­ல­லிதா மர­ணத்தை சி.பி.ஐ விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட வேண்­டும்’ என்று மாநி­லங்­க­ள­வை­யில் ஓ.பி.எஸ் அணி எம்.பி-க்­கள் ஜெய­ல­லிதா படத்­து­டன் சபா­நா­ய­கர் இருக்­கையை முற்­று­கை­யிட்டு அப்போது அம­ளி­யில் ஈடு­பட்­ட­னர். ‘ஜெய­ல­லிதா மர­ணத்தை சி.பி.ஐ விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட வலி­யு­றுத்தி ஓ.பி.எஸ் அணி­யின் 12 எம்.பி-க்­கள் குடி­ய­ர­சுத் தலை­வர் பிர­ணாப் முகர்ஜியிடம் மனு அளித்­த­னர். இதற்­கெல்­லாம் ஒப்­புக்­கொள்­ளா­த­வர்­கள்­தான் இன்­றைக்கு சி.பி.ஐ-யைத் தலை­யில் தூக்கி வைத்­துக்­கொண்டு கோரிக்கை வைக்­கி­றார்­கள்.!

ree

4,800 கோடி ரூபாய் நெடுஞ்­சாலை டெண்­டர் முறை­கேடு முந்­தைய அதி­முக ஆட்­சி­யில் நடை­பெற்­றது. எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் உற­வி­னர்­க­ளுக்கு ஒப்­பந்­தப் பணி­கள் முறை­கே­டாக அளிக்­கப்­பட்டதால். அது­பற்றி ஊழல் தடுப்பு சட்­டத்­தின்­கீழ் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­டம் அன்­றைய எதிர்க் கட்­சி­யான தி.மு.கழகம் மனு அளித்­தது. அதன் மீது லஞ்ச ஒழிப்­புத் துறை நட­வ­டிக்கை எடுக்­கா­த­தால் உயர் நீதி­மன்­றத்­தில் தி.மு.கழகம் வழக்கு போட்­டது. அந்த வழக்­கில் சிபிஐ விசா­ர­ணைக்கு உயர் நீதி­மன்­றம் 2018 அக்­டோ­பர் 12-ஆம் தேதி உத்­த­ர­விட்­ட­துமே திரு­ட­னுக்­குத் தேள் கொட்­டி­யது போல பழ­னி­சாமி பத­றி­னாரே அது ஏன்?


இந்த உத்­த­ரவு வெளி­யான அன்­றைய தினமே அமைச்­சர் ஜெயக்­கு­மார், முன்­னாள் அமைச்­சர் பொன்­னை­யன், அதி­முக தேர்­தல் பிரிவு துணைச் செய­லா­ளர் இன்­ப­துரை ஆகி­யோ­ரைக் கூட்­டா­கப் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைச் சந்­திக்க வைத்து, “சிபிஐ விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டதை எதிர்த்து உச்ச நீதி­ மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­வோம்’’ என அவ­சர அவ­ச­ர­மாக ஏன் சொன்­னார்?


அன்­றைக்கு சிபி­ஐ-க்கு பயந்து உச்ச நீதி­மன்­றத்­தின் கத­வு­க­ளைத் தட்­டிய பழ­னி­சா­மி­தான், இன்­றைக்­குக் கள்­ளக்­கு­றிச்சி விவ­கா­ரத்­திற்கு சிபிஐ விசா­ரணை வேண்­டும் என்­கி­றார்.!


அன்­றைக்­குக் கசந்த சிபிஐ, இன்­றைக்கு ஏன் இனிக்­கி­றது? ’’ஏன்யா நான் சரி­யா­தான் பேசு­றேனா’’ என ஒரு திரைபடத்­தில் நடி­கர் சங்­கிலி முரு­கன் பேசும் வச­னம்­தான் இப்போது நினை­வுக்கு வரு­கி­றது.!

ree

சசி­கலா தய­வில் முத­ல­மைச்­சர் ஆன­போது ஒரு முக­மும், மோடி தய­வில் அந்த முத­ல­மைச்­சர் பத­வி­யைத் தக்­க­வைத்­துக் கொண்­ட­போது இன்­னொரு முக­மும் காட்­டிய இரட்டை வேடத்­தைத்­தான் இன்­றைக்கும் சிபிஐ விஷ­யத்­தி­லும் கப­ட­தாரி பழ­னி­சாமி என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.!


இப்படிப்பட்ட பழனிசாமிதான், இப்போது கள்ளக்குறிச்சியில் நடந்தது துயரமிகுந்த சம்பவத்தையும் - உறவுகளையும். வாழ்வாதாரத்தையும் இழந்த நிற்கும் அந்த எளிய மக்களின் சூழலை கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் கட்சியின் அரசியல் லாபத்திற்காக கள்­ளக்­கு­றிச்சி சம்­ப­வத்­திற்கு சிறிதும் தாமதிக்காமல், அரசை முடுக்கிவிட்டு, அதிகாரிகளின் மீது பாரபட்சமில்லாமல் கடும் நடவடிக்கை எடுத்துடன், அமைச்சர் பெருமக்களை நேரில் அனுப்பி 24. மணி நேரம் அங்கு நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக கவனித்து, நடந்த விரும்பத்தகாத சம்பவத்தை ஒரு நபர் ஆணையத்தை ஓய்வு பெற்று நீதியரசர் தலைமையில், உரிய காலத்திற்குள் நடந்த நிகழ்வுகள் குறித்த முழு விசாரணை அறிக்கையும் அரசுக்கு வழங்க உத்தரவிட்டு, அதன் பணிகளையும், மருத்துவம், காவல், வருவாய் உள்த்துறைகளையும் அங்கு முடுக்கிவிட்டு, பாதிப்புக்குள்ளான மக்களிடம் இன்று மட்டுமல்ல என்றும் உங்களோடு இந்த அரசு இருக்கிறது. கலங்காதீர்கள் என்று அந்த எளிய மக்களுடன் துணையாகயிருக்கும்,முத­ல­மைச்­சர் தளபதியார் ராஜி­னாமா செய்ய வேண்­டும்” எனப் பிதற்­றி­யி­ருக்­கி­றார் பழ­னி­சாமி.!


அவ­ரு­டைய பொறுப்­பில் கட்சி வந்த பிறகு ஒரு தேர்­த­லி­லும் அதி­முக வெற்றி பெற­வில்லை. 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­தல் தோல்­வி­யைச் சேர்த்­தால் தொடர்ந்து 9 தோல்­வி­க­ளைச் சந்­தித்த வர­லாற்­றுப் பெரு­மைக்­கு­ரிய பழ­னி­சா­மிக்­குப் பித்­தம் தலைக்கு ஏறி­விட்­டது. அத­னால்­தான் முத­ல­மைச்­சரை ராஜி­னமா செய்­யச் சொல்­கி­றார்.!

ree

பழ­னி­சாமி!

உங்களின்… முது­கைக் கொஞ்­சம் திரும்­பிப் பாருங்­கள். அதில் மிக மோசமான கறை படிந்த வர­லாறு தெரி­யும்!

ree
ree

ஸ்டெர்­லைட்­டுக்கு எதி­ரா­கப் போரா­டிய 13 அப்­பா­வி­க­ளை துளி கூட மனிதாபினமே இல்லாமல் துள்ள துடிக்­கத் தூத்­துக்­கு­டி­யில் சுட்­டுக் கொன்­றது உங்­கள் ஆட்­சி­யில்­தானே! அந்த சம்பவத்தை கூட தொலைகாட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று பொருப்பற்ற முறையில் கடமையை மறந்து சொன்ன நீங்­கள், அப்போது ராஜி­னாமா செய்­தீர்­களா?

ree

பொள்­ளாச்­சி­யில் நூற்­றுக்­க­ணக்­கான இளம் பெண்­க­ளைக் கடத்­திக் கூட்­டுப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்த விவ­கா­ரத்­தில் அதி­முக நிர்­வாகி அரு­ளா­னந்­தம் கைதா­ன­போது அப­லை­க­ளின் கதறி அழுத கண்­ணீ­ரைத் துடைத்து உரிய நடவடிக்கையை முழுமையாக அரசியல் உள்நோக்கமில்லாமல் எடுத்தீர்களா - அல்லது முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யைத் துறந்­தீர்­களா?

ree
ree

இதய தெய்வம், இதய தெய்வம் என்கிறீர்களே, அன்றைய முதல் அமைச்சர் ஜெய­ல­லிதா வாழ்ந்த கொட­நாட்­டு பங்களாவிலேயே கொலை, கொள்­ளை­கள் நடந்­த­போது, உங்களின் தலைவி வாழ்ந்த இல்­லத்­தின் இரத்­தக் கறை­யைத் துடைக்க பத­வி­யைத் தூக்­கி­யெ­றி­யா­மல் மெளமாக இருந்­தது ஏன்?


குட்கா வழக்கில், உங்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புல்லது என்று தெரிந்தும் பல்லையா குத்தி கொண்டிருந்தீர்கள்

உங்கள் ஆட்சியில் நீங்கள் பரவவிட்டது தானே குட்கா போன்ற போதை பொருட்கள். அப்போது எடப்பாடியில் பல்லை யாகுத்திக் குத்திக் கொண்டிருதீர்கள் !

ree

சாத்­தான்­கு­ளத்­தில் தந்தை ஜெய­ராஜ், மகன் பென்­னிக்ஸ் இரு­வ­ரையும போலீஸ் லாக்­அப்­பில் சித்திரவதை செய்து கொல்­லப்­பட்டதால்,


அந்த காவல்­நி­லை­யம் வரு­வாய்த் துறை­யின் கட்­டுப்­பாட்­டில் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது காவல்­து­றைக்­குப் பொறுப்பு வகித்த பழ­னி­சாமி ராஜி­னாமா ஏன் ராஜினாமா செய்­யவில்லை?


இப்படி ஆட்சி - நிர்வாகத்தை சீர்குலைத்து, உங்கள் சகார்கள் - உறவினர்களுக்காக ஆட்சி நடத்திய உங்களுக்கு, தமிழ்நாட்டின்

முத­ல­மைச்­சர் தளபதி மு.க.ஸ்டாலின் ராஜி­னாமா செய்ய வேண்­டும் எனச் சொல்ல அரு­கதை இருக்­கி­றதா?


அப்போது மட்­டும் விசா­ரணை


ஆணை­யம் தேவைப்­பட்­டதா?

ree

கள்­ளக்­கு­றிச்சி விவ­கா­ரத்­தில் நீதி­பதி கோகுல்­தாஸ் விசா­ரணை ஆணை­யத்­தைத் தமிழ்­நாடு அரசு அமைத்­தி­ருக்­கி­றது. ஆனால், “ஒரு நபர் ஆணை­யம் அமைத்­தா­லும் மக்­கள் மத்­தி­யில் நம்­ப­கத்­தன்மை ஏற்­ப­டாது’’ என்று சொல்­கி­றார் பழ­னி­சாமி. ஜெய­ல­லிதா மர­ணத்­துக்கு சி.பி.ஐ விசா­ர­ணையை மறுத்து, அதற்­குப் பதி­லாக நீதி­பதி ஆறு­மு­க­சாமி ஆணை­யத்தை ஏன் பழ­னி­சாமி அமைத்­தார்? அப்­போது மட்­டும் விசா­ரணை ஆணை­யம் தேவைப்­பட்­டதா? அன்­றைக்கு நம்­ப­கத்­தன்மை பாது­காக்­கப்­பட்­டதா?


விஷச்­சா­ரா­யம் நிச்­ச­யம் தடுக்­கப்­பட வேண்­டும். அதில் யாருக்­குமே மாற்­றுக்­க­ருத்து இருக்க முடி­யாது. ஆனால், இந்­தியா முழு­வ­தும் எல்லா மாநி­லங்­க­ளி­லும் விஷச் சாராய மர­ணங்­கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­கின்­றன. அதில், தமிழ்­நாடு கடைசி இடங்­க­ளில்­தான் இருக்­கி­றது.!


ஒன்­றிய அர­சின் தேசிய குற்ற ஆவ­ணக் காப்­ப­கம் (NCRB) அறிக்­கை­யின்­படி, 2017-இல் 1,497 கள்­ளச் சாராய வழக்­கு­கள் பதி­வாகி, 1,510 பேர் உயி­ரி­ழந்­த­னர். அதி­க­பட்­ச­மா­கக் கர்­நா­ட­கா­வில் 256 பேரும் மத்­தி­யப் பிர­தே­சத்­தில் 216 பேரும், ஆந்­தி­ரா­வில் 183 பேரும், பஞ்­சா­பில் 170 பேரும், அரி­யா­னா­வில் 135 பேரும், புதுச்­சே­ரி­யில் 117 பேரும் சத்­தீஸ்­க­ரில் 104 பேரும் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.


2018-ல் 1,365 பேர் கள்­ளச் சாரா­யத்­தால் இறந்­த­னர். இதில், அதி­க­பட்­ச­மாக மத்­தி­யப் பிர­தே­சத்­தில் 410 பேரும் கர்­நா­ட­கா­வில் 218 பேரும், அரி­யா­னா­வில் 162 பேரும், பஞ்­சா­பில் 159 பேரும், உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் 78 பேரும், சத்­தீஸ்­க­ரில் 77 பேரும், ராஜஸ்­தா­னில் 64 பேரும் உயி­ரி­ழந்­த­னர். 2019-ல் கள்­ளச் சாரா­யத்­தால் நாட்­டில் 1,296 பேர் இறந்­த­னர். கர்­நா­ட­கா­வில் கலப்­பட சாரா­யம் குடித்து அதி­க­பட்­ச­மாக 268 பேர் உயி­ரி­ழந்­த­னர். பஞ்­சா­பில் 191 பேரும், மத்­தி­யப் பிர­தே­சத்­தில் 190 பேரும், சத்­தீஸ்­க­ரில் 115 பேரும், அசா­மில் 98 பேரும், ராஜஸ்­தா­னில் 88 பேரும் உயி­ரி­ழந்­த­னர்.


2020-இல் கொரோனா பர­விய காலத்­தி­லும் கூட கள்­ளச் சாராய மர­ணங்­கள் நடந்­தன. நாடு முழு­வ­தும் 931 கள்­ளச் சாராய வழக்­கு­கள் பதி­வாகி 947 பேர் உயி­ரி­ழந்­த­னர். அப்­போது அதி­க­பட்­ச­மாக மத்­தி­யப் பிர­தே­சத்­தில் 214 பேரும், ஜார்க்­கண்­டில் 139 பேரும், பஞ்­சா­பில் 133 பேரும், கர்­நா­ட­கா­வில் 99 பேரும், சத்­தீஸ்­க­ரில் 67 பேரும் கள்­ளச்­சா­ரா­யத்­தால் உயி­ரி­ழந்­த­னர்.!


2021-ல் இந்­தியா முழு­வ­தும் 708 சட்­ட­வி­ரோத போலி மது அருந்­திய சம்­ப­வங்­கள் நடந்­தன. அதில் 782 பேர் இறந்து போனார்­கள். இந்த மர­ணத்­தில் அதி­க­பட்­ச­மாக உத்­த­ரப் பிர­தே­சத்­தில் 137 பேரும் பஞ்­சா­பில் 127 பேரும் மத்­தி­யப் பிர­தே­சத்­தில் 108 பேரும் கர்­நா­ட­கா­வில் 104 பேரும் ஜார்க்­கண்­டில் 60 பேரும், ராஜஸ்­தா­னில் 51 பேரும் இறந்­தார்­கள். இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­கள் பார்த்­தால் மற்ற மாநி­லங்­க­ளை­வி­டத் தமிழ்­நாடு அவ்­வ­ளவு மோச­மான இடத்­தில் இல்லை.!


இருந்­தா­லும் விஷச் சாரா­யம் முற்­றி­லும் ஒழிக்­கப்­பட வேண்­டும் என்­ப­தில் தமிழ்­நாடு அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்­பட்டு வரு­கி­றது.!


கள்­ளச் சாரா­யம் குடித்து மர­ணங்­கள் நடப்­பது திமுக ஆட்­சி­யில் மட்­டும்­தான் என்­பது போல அதி­முக பேசி வரு­கி­றது.! அம்­மை­யார் ஜெய­ல­லிதா ஆட்­சி­யில் 2001-இல் பண்­ருட்­டி­யில் கள்­ளச்­சா­ரா­யத்­திற்கு 52 பேர் பலி­யா­னார்­கள்.! தொடர்ந்து அதே ஆண்­டில் காஞ்­சி­பு­ரம், செங்­குன்­றம் பகு­தி­க­ளில் கள்­ளச்­சா­ரா­யம் அருந்தி 30 பேருக்­கு­மேல் இறந்­தார்­கள்.!


1993 ஜன­வ­ரி­யில் விழுப்­பு­ரம் அருகே சித்­த­லிங்­க­ம­டம் கிரா­மத்­தில் விஷச் சாரா­யம் குடித்து 9 பேர் இறந்­தார்­கள். அதே ஆண்டு டிசம்­ப­ரில் திருத்­தணி அருகே திரு­வா­லங்­காடு பகு­தி­யில் கள்­ளச் சாரா­யம் அருந்தி 7 பேர் பலி­யா­னார்­கள்.!


1996 ஜன­வ­ரி­யில் திருச்சி உறை­யூ­ரில் விஷச் சாரா­யம் அருந்தி 10 பேர் பலி­யா­னார்­கள். அப்­போ­தெல்­லாம் கள்­ளச் சாரா­யத்­தைத் தடுக்க அன்­றைய அரசு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டது.!


ஆனால், அதற்­காக முத­ல­மைச்­சர் பத­வியை அம்­மை­யார் ஜெய­ல­லிதா ராஜி­னாமா செய்­ய­வில்லை.!


பாஜக ஆளும் மாநி­லங்­க­ளி­லும் இப்­ப­டி­யான கள்­ளச்­சா­ராய மர­ணங்­கள் அதிக அள­வில் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. அதற்­காக அந்த மாநில முத­ல­மைச்­சர்­கள் எல்­லாம் ராஜி­னாமா செய்­து­விட்­டார்­களா? குஜ­ராத் மாநி­லம் அக­ம­தா­பாத் நக­ரின் மஜுர்­காம், நகவ் பகு­தி­க­ளில் 2009 ஜூலை­யில் கள்­ளச் சாரா­யத்­துக்கு 136 பேர் பலி­யா­ன­போது அங்கே மோடி­தான் முத­ல­மைச்­ச­ராக ஆட்சி செய்து கொண்­டி­ருந்­தார்.! உள்­துறை அமைச்­ச­ராக இருந்­த­வர் அமித் ஷா. இரு­வ­ரும் சம்­ப­வத்­துக்­குப் பொறுப்­பேற்று ராஜி­னாமா செய்­தார்­களா?


மக்­க­ளின் நம்­பிக்­கையை முழு­வ­து­மாக இழந்து தொடர் தோல்­வி­க­ளைச் சந்­தித்து வரும் பழ­னி­சாமி, சொந்­தக் கட்­சி­யி­ன­ரி­ட­மும் செல்­வாக்கை நம்பகத்தன்மையை இழந்­து­விட்­டு. இத­னைத் திசை­தி­ருப்பி, தனது இருப்­பைத் தக்­க­வைக்­கத்­தான் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் ராஜி­னாமா செய்ய வேண்­டு­மென வீரா­வே­சம் காட்ட முயற்சி செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்.!


யார் காலை­யும் பிடித்து முத­ல­மைச்­சர் ஆன­வர் அல்ல எங்­கள் தலை­வர் தளபதி மு.க.ஸ்டாலின். மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, அவர்­க­ளின் பேரா­த­ர­வு­டன் மக்களுக்கான ஆட்சி செய்து, தமிழ்­நாட்­டினை முன்­னேற்ற நாளும் செயல்­பட்டு வரு­கி­றார்.!


எனவே, பகல்­க­ன­வைக் காணு­வ­தைப் பழ­னி­சாமி நிறுத்­தி­விட்டு, பாஜ­க-­வி­டம் அடகு வைக்­கப்­பட்டு, இப்போது மூழ்­கும் கப்­ப­லாக உள்ள தனது கட்­சி­யைப் பற்­றிக் கவ­லைப்­ப­டும் வேலை­யைப் பார்க்­க­லாம் என்று தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.!


இவ்­வாறு அமைச்­சர் கே.என்.நேரு அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.!


ஓ...... இதுதான் அறுக்கத் தெரியாதவன், 52 அறுவாளை எடுத்துகிட்டு அறுக்கப்போன கதையோ!


தோகமலை, ச.ராஜா மரிய திரவியம்

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page