top of page
Search

அமைச்சர் சிவசங்கர் பேச்சு! பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக போக்குவரத்துத்துறை செயல்பட்டு வருகிறது.!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 16, 2024
  • 1 min read
ree

தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ள மாநிலமாக, பிற மாநிலங்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக திகழுகின்றது.! போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.!


விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில், ரூ.12 கோடி மதிப்பிலான 30 புதிய அரசு பேருந்துகளின் சேவை துவக்க விழா இன்று காலை நடைபெற்றது. அமைச்சர்கள் சிவசங்கர், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கொடியசைத்து புதிய பேருந்துகளின் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.!


நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர். தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேசியதாவது.!

ree

கடந்த ‘அதிமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய ஊதிய ஒப்பந்தத்தை, கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள் நீட்டித்துக் கொண்டும், போதிய கால அவகாசம் இருந்த போதும், அதனை முடிக்காமல் சென்றுவிட்டனர்.!


ஆனால், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், தளபதியின் வழிகாட்டல்கள், ஆலோசனைகள், வழிகாட்டல்களின் படி உரிய பேச்சுவார்த்தையை நடத்தி, செயலற்ற நிர்வாக சீர்கேட்டால் சீர்குலைந்திருந்த ஊதிய விகிதத்தை சீர்படுத்தி, 5 சதவீத உயர்வு வழங்கி நல்ல நிலையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.!


புதிய பேருந்துகள் வாங்க ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் புதிதாக 2,200 புதிய வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.!


இதில், துரதமாக செயல்பட்டு மக்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே 1,000 பேருந்துகள் மக்கள் சேவைக்கு வந்துவிட்டன.!


இதன் தொடர் நடவடிக்கையாக 300 பேருந்துகள் இந்த வாரத்திற்குள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர பணிகளை முடுக்கு விடப்பட்டுள்ளது.!


. புதிதாக வரும் பேருந்துகளை தேவைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியாக இயக்கப்பட்டு வருகின்றது.!

ree

இந்த தொடர் நடவடிக்கையாக விருதுநகரில் இன்று 26 புறநகர் பேருந்து, 4 நகர் பேருந்து என மொத்தம் 30 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.!


இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை 20 ஆயிரம் பேருந்துகளை இயக்கி வருகின்றன.!

கழகத் தலைவர், தமிழக முதல்வர் தளபதியாரின், கொள்கை சிந்தனையுடனே மக்களின் நலனுக்கான தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் மக்கள் பணியில் தொடர்ந்து செயல்பட்டும் வருகின்றது.!


அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ள ஒரே மாநிலமாக இப்போது தமிழ்நாடு திகழுகின்றது.!.


. பல்வேறு வரலாற்று சிறப்புகள் உடைய தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு நிதியமைச்சர், தனி கவனத்துடன் உதவி வருகிறார்.!


மக்களுக்கான பணிகளில் மேலும் சிறப்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பாக இயங்க நிதியமைச்சர் மேலும் தனி கவனத்துடன் உதவ வேண்டும்.!


இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.!

கலெக்டர் ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page