கல்லூரி படிப்புக்கு உதவிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்! நெகிழ்ச்சியில் மாணவி - கிராமத்தினர்!
- உறியடி செய்திகள்

- Mar 17, 2024
- 1 min read

திருச்செந்தூர் அருகே டீ குடிக்க சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கல்விக்கு உதவி கேட்ட மாணவிக்கு உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் - கால்நடை நலத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன்.

இந்நிலையில் திருச்செந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காரில் புறப்பட்டு செல்லும் போது அடைக்கலாபுரம் பகுதியில் காரிலிருந்து இறங்கி சாலையோரம் இருந்த டீக்கடைக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார்.!

டீ சொல்லிவிட்டு டீக்கடையில் போடப்பட்டு இருந்து இருக்கையில் அமர்ந்து அவர் தன்னுடன் வந்தவர்களுடன் பேசி கொண்டிருந்தார்.!
அப்போது அதே பகுதியை சேர்ந்த அந்தோணி பிச்சை என்கிற கூலித்தொழிலாளியின் மகள் ஆஷா, அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்த. அவர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.!

அந்த மனுவில் கல்லூரி மாணவியான ஏழை குடும்பத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகளான தனது, படிப்புக்கு உதவக் கோரியிருந்தார் என்று தெரிகிறது.!
இதனை அறிந்த அனிதா ராதாகிருஷ்ணன் தனது உதவியாளரை அழைத்து மாணவியின் கல்லூரிக்கு தொடர்பு கொள்ளச் செய்து தேவையான உதவிகளைச் செய்து, மாணவி. ஆஷாவிடம் ‛‛
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் வழியில், நமது முதல்வர் தளபதியார் பல்வேறு திட்டங்களை பெண் கல்விக்கும், பட்டதாரி பெண்களுக்கும், மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகின்றார்,!

இவற்றை நன்கு பயன்படுத்தி, பெண்கள் கல்வியில் நல்ல முன்னேற்றங்களை அடைய வேண்டும் நீயும் நல்லமுறையில் படிக்கணும்மா. என்றும்கூறி உற்சாக படுத்தியுள்ளார்.!
அமைச்சரின் கல்விக்கான உதவியை பெற்ற மாணவி, அவரின் குடும்பத்தார் உள்ளிட்ட அக்கிராமத்தினர் மிகுந்த நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.!
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.!




Comments