மோடி தலைக்கு மேல் கத்தியா!எலிக்கு வாலா! சிங்கத்திற்கு தலையா எதிர்கட்சிகள்! பா.ஜ.கூட்டணி ஆட்சி தொடருமா?
- உறியடி செய்திகள்

- Jun 5, 2024
- 2 min read

மணவை எம்.எஸ்.ராஜா...
எலிக்கு வாலாகயிருப்பதை விட சிங்கத்திற்குதலையாகயிருக்க முடிவு செய்த கூட்டணி கட்டணி கட்சிகள்!
கட்சிகளின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் அதிர்ச்சியில் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் !
கூட்டணி ஆட்சிதான் வாங்க! பழகித்தான் பார்ப்போம்! கூட்டணி கட்சிகள்!
மோடிக்கு ஏற்பட்ட கூட்டணி கட்சி ஆட்சி எந்தளவுக்கு கை கொடுத்து நீட்டிக்கும்!

. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும்; தங்கள் ஆதரவின்றி பாஜக ஆட்சியமைக்க முடியாது என்பதால் அமைச்சரவையில் முக்கிய கேபினட் இலாகாக்கள், சபாநாயகர் பதவிகளை இருவரும் தங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.!
நடந்து முடிந்த மக்களவைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.!
அதன்படி பாஜக கூட்டணி 290 தொகுதிகளிலும்,இந்திய கூட்டணி 235 தொகுதிகளிலும், மற்றவை 18 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இதில் பாஜக 239 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.!

பாஜக தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.!
இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.!

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். தங்கள் ஆதரவின்றி பாஜக ஆட்சியமைக்க முடியாது என்பதால் அமைச்சரவையில் முக்கிய கேபினட் பொருப்பு இலாகாக்கள், இரண்டு இணை அமைச்சர் மற்றும் சபாநாயகர் பதவிகளை இருவரும் கேட்கின்றனர்.!
இந்தியா கூட்டணி தரப்பில் இருந்தும் அழைப்பு விடுக்கப்படுவதால் முக்கிய இலாகாக்கள் வேண்டும் என சந்திரபாபு, நிதிஷ் குமார் பிடிவாதமாக உள்ளனர்.!

ஒன்றிய அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை 2,கட்சிகளும் கேட்பதால் யாருக்கு ஒதுக்குவது என்பதில் பாஜக குழப்பம் அடைந்துள்ளது.!
தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, போலாவரம் நீர்பாசன திட்டத்துக்கு நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை சந்திரபாபு முன்வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதாதளம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. 16 எம்பிக்களை வைத்துள்ள சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, கேபினட் உள்பட11 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியை கேட்டுள்ளார்.!

7எம்பிக்களை வைத்துள்ள மாராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஒரு கேபினட் உள்ளிட்ட 3 ஒன்றிய அமைச்சர் பதவிகளை கேட்டுள்ளார்.!
ஏக்நாத் சின்டே ஒரு கேபினட் உள்பபட 3 அமைச்சர் பதவிகளையும்,
ராம்விலாஸ்பாஸ் வான் கட்சி ஒரு கேபினட் அமைச்சர் பதவியையும் கேட்டு வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது.!
கூட்டணி கட்சிகளின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்ற.
கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாஜக அறிவித்துள்ளது.!

இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: இந்த நிலவரம் அனைத்தும் சந்திரபாபு நாயுடுவுக்கும், நிதீஷ் குமாருக்கும் நன்கு தெரியும். இதனால், தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவது என்ற மிகவும் தவறான முடிவை அவர்கள் துணிவுடன் எடுக்க மாட்டார்கள்.! மாறாக தொடர்ந்து கூட்டணியில் நீடிக்க பா.ஜ.,வுடன் தங்களை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திபேரம் பேசவே செய்வார்கள்.!
மேலும்
இதனுடன், லோக்ஜனசக்தி, ஜனசேனா கட்சியை கூட்டணிக்கு அழைத்து வந்து தே.ஜ. கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பா.ஜ., ஈடுபடும். 1984 க்கு பிறகு, தொடர்ந்து இரண்டு முறை (2014 மற்றும் 2019)பெரும்பான்மை பெற்ற ஒரே கட்சி பா.ஜ., மட்டுமே. மேலும் குஜராத்திலும் மோடி, தனிப் பெரும் மெஜாரட்டியுடனே ஆட்சி செய்து இந்திய பிரதமரமாக தனிப் பெரும் தனி மனித ஆளுமையாக செயல்பட்ட வந்த நிலையில்,!

அடுத்து வரும் 5 ஆண்டுகளையும் பா.ஜ.,வே ஆட்சி செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருந்தாலும், அதே சமயம் பா.ஜ.வுக்கும், மோடிக்கும், கடந்த காலத்தில் பா.ஜ.க. நிறைவேற்றிய திட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதிலும், பல்வேறு வகையிலும் வலுவான கடிவாளம் போட பட்ட கதையைப் போலத்தான் மோடியின் அரசு - அரசியல் நகர்வுகள் தொடரும், இது ஒரு புறம் முற்றிலும் புதிய அனுபவம் அது எந்தளவுக்கு நடைமுறை சாத்தியமாகும் என்பது மில்லியன் டாலர் கேள்விகளையே கண்முன்னே ஏற்படுத்துகிறது.! அதே சமயம் ஆர்.ஆர்.எஸ். அபிமானி சோழவந்தான் சுப்பிரமணியசாமியின் பகிரங்க மோடி எதிர்ப்பும் இந்நேரத்தில் எளிதில் கடந்து செல்லவும் முடியாது.!
இவ்வாறு அரசியல் விமர்சகர்கள் - பார்வையாளர்கள் தரப்பில் பரப்பரப்புடன் பேசப்படுகின்றது.!
ஒரு புறம் எலிக்கு வாலா - புலிக்கு தலையா என்கிற நிலைபாட்டிலிருக்கும் தற்போதைய பா.ஜ.க.ஆதரவு கட்சிகள்.!
இந்திய அரசியல் - அரசு செயல்எப்படியிருக்கும் பொருத்திருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
இவ்வாறு அவர்கள் தரப்பில் கூறப்படு கின்றது.




Comments