முத்தமிழறிஞர் கலைஞர் 6. ஆண்டு நினைவு தினம்! அமைதி ஊர்வலம்! திருச்சியில் சிலை திறப்பு! நூல் வெ
- உறியடி செய்திகள்

- Aug 7, 2024
- 1 min read
Updated: Aug 8, 2024

முத்தமிழறிஞர் கலைஞரின் 6, வது ஆண்டு நினைவு நாளை யெட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நினைவிடம் நோக்கி பேரணி! திருச்சியில் திருவுருவ சிலை திறப்பு! கவிதை நூல்வெளியிடு!


முத்தமிழறிஞர் கலைஞர் 6-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, தி.மு.கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆக 7. ந்தேதி சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.!


தி.மு.கழக பொதுச் செயலாளர், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். தி.மு.கழக பொருளாளர், நாடாளுமன்ற க்குழுத்தலைவர், டி.ஆர்.பாலூ, முதன்மைச்செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை - சேலம் மாவட்ட பொருப்பு அமைச்சர், கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர்கள், நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர், கனிமொழி கருணாநிதி, உள்ளாச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தி.மு.கழக நீலகிரிநாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தி.மு.கழக இளைஞரணி செயலாளர், தமிழக விளையாட்டு சிறப்பு விட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் - நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்க பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.!


முன்னதாக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நாளான நேற்று ஆக 7. ந்தேதி முகாம் அலுவலகத்திருந்து காணொலி காட்சி வாயிலாக, திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார்.!

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் .உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி, அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.!
மற்றும் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டமன்ற உறுப்பினர் .இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகர கழக செயலாளர் .மு.மதிவாணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.!

தொடர்ந்து
முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை யெட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து தொகுத்த “கலைஞர் 100 கவிதைகள் 100” நூலினை வெளியிட்டார்.,
இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முதல் நூலினைப் பெற்றுக் கொண்டார்.!

இந்நிகழ்வில் நீர்வளத் துறை அமைச்சர் .துரைமுருகன் , நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பொதுப்பணித் துறை அமைச்சர் .எ.வ.வேலு , நூல் ஆசிரியர் கவிப்பேரரசு திரு.வைரமுத்து திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.!.




Comments