நாதக, சிவராமன் - அசோக்குமார் மரணம்! சந்தேகமில்லை சீமான்! தவறான செய்தி பரப்பினால் நடவடிக்கை காவல்துறை!
- உறியடி செய்திகள்

- Aug 23, 2024
- 2 min read
Updated: Aug 24, 2024

பாலியல் வன்கொடுமை செய்ததாக நாதக,சிவராமன் மரணம் தற்கொலைதான்! தவறிவிழுந்த சிவராமன் தந்தை அசோக்குமார் மரணத்திலும் சந்தேகம் இல்லை.! சீமான் பேட்டி!
நாதக கட்சியை சே ர்ந்த சிவராமன் - அவரது தந்தை அசோக்குமார் மரணங்களில் சந்தேகம் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கூறி வந்த நிலையில் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள காந்தி கிராமத்தில் தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி, அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார்.!
சிவராமனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிவராமன், தான் எலி பேஸ்ட் உட்கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து நேற்று முன்தினம் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.!
சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவராமனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சிவராமனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.இதையடுத்து, சிகிச்சை பலனின்றி சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதனை அடுத்து அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் குற்றவியல் நடுவர் விசாரணைக்கு பிறகு, சிவராமனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.!

சிவராமன் உயிரிழப்பு தொடர்பாக கிருஷ்ணகிரி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இச்சாபவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது அவர் கூறியதாவது;
சிவராமன் கொஞ்ச காலத்திற்கு முன்பே சாகப்போகிறேன் என வருத்தம் தெரிவித்து எனக்கு கடிதம் எழுதியிருந்தார். கட்சித் தம்பிகளிடம் அதைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னேன். தவறு செய்தது தெரிந்ததும், அவரை போலீசில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் தம்பிகள்தான். குற்ற உணர்ச்சி இருந்ததால்தான் தற்கொலை செய்துள்ளார்.!
மகன் செய்த தவறால் அடைந்த மனவேதனையில் அப்பாவும் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதில் எந்த சந்தேகமும் இல்லை, இதன் பின்னணியில் யாரும் இல்லை
இவ்வாறு சீமான் கூறினார்.!
இந்நிலையில்
சிவராமன் தந்தை அசோக்குமார் மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது!

. காவேரிப்பட்டினம் திருமண மண்டபம் அருகே மதுபோதையில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு அசோக்குமார் (61) உயிரிழந்தார். சேலம் மருத்துவமனையில் சிவராமன் இன்று காலை உயிரிழந்த நிலையில், அவரது தந்தை அசோக்குமாரும் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.!
கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் இன்று காலை உயிரிழந்தார்.பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமனின் தந்தை நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் குடிபோதையில் இருந்த பொழுது தவறி விழுந்து உயிரிழந்தார்.!
அவரின் உயிரிழப்பு பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கபட்ட நிலையில் தற்பொழுது அவர் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது!
. இந்நிலையில், நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் உயிரிழப்பு பற்றி தவறான செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.!
சிவராமன் - அவரது தந்தை பற்றிய இறப்பு குறுத்து தவறான செய்தி பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராமன் குடும்பப் பிரச்சனை காரணமாக எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சை முடிந்து ஜூலை 9-ஆம் தேதி வீடு திரும்பினார்.!
சிவராமன் கைது நடவடிக்கைக்கு 2 நாட்களுக்கு முன் எலி பேஸ்ட் உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார். சிவராமன் எலி மருந்து உட்கொண்டதை மருத்துவர்கள், மெடிக்கல் குறிப்பில் கூறியுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.!




Comments