top of page
Search

நீலகிரி தொகுதி : 4 , வது முறையாக தி.மு.க கூட்டணி வேட்பாளர்! தேர்தல் களத்தில் ஆ.ராசா! ஒரு சிறப்புபார்வை!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 20, 2024
  • 2 min read
ree

நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக ஆ.ராசா தி.மு.கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.!


தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் 4,வது முறையாக நீலகிரி தி.மு.கழககூட்டணியின் வேட்பாளராக தேர்தல்களம் காண்கிறார்.!

ree

ஆ.ராசா பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் எஸ்.கே. ஆண்டிமுத்து மற்றும் கிருஷ்ணம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.!

ree

வழக்கறிஞரான அவர் தனது பட்டப்படிப்பை (பிஎஸ்ஸி -கணிதம்) முசிறி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியிலும், சட்டப்படிப்பை (எல்) மதுரை சட்டக்கல்லூரியிலும், முதுநிலை சட்டப் படிப்பை (எம்.எல்) திருச்சியிலுள்ள அரசு சட்டக் கல்லூரியிலும் பயின்றவார்.!

ஆராசா மனைவி பரமேஸ்வரி சமீபத்தில் இயற்கை எய்தினார். இவர்களுக்கு மயூரி ராஜா என்ற மகள் உள்ளார். அவர் தற்போது டெல்லியில் சட்டப்படிப்பு படித்து வருகிறார்.!

ree

ஆ.ராசா முதன்முதலாக பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 11வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.!

பின்னர் 1999ல் நடைபெற்ற 13வது மக்களவைக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும், பெரம்பலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.!

ree

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 1999 - 2000,ம் ஆண்டு வரை மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராகவும், அதன் பின்னர் 2003,ம் ஆண்டு வரை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.!


2004ம் ஆண்டு நடைபெற்ற 14வது மக்களவைக்கான தேர்தலிலும் தி.மு.கழக வேட்பாளராக பெரம்பலூரில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.!

ree

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 - 2007 ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், பின்னர் 2007ம் ஆண்டு மே மாதம் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக 2009 வரை பொறுப்பு வகித்துள்ளார்.!


2009ம் ஆண்டு நடைபெற்ற 15வது மக்களவைக்கான தேர்தலில் திமுக சார்பில் முதன்முறையாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஜூன் 2009ல் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின் எழுந்த 2ஜி விவகாரத்தில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.!

ree

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் ஆராசா இளம் வயது மத்திய அமைச்சர்களில் ஒருவராக தனித்துவத்துடன் விளங்கினார் என்பது குறிப்பிடதக்கது.!

மீண்டும் நீலகிரி போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.!


தொடர்ந்து மூன்றாவது முறையாக 2019,ம் ஆண்டு நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆ. ராசா,இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் தி.மு.கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்,.!

ree

தனது இளமை -கல்லூரி காலங்களில் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகள் பலவற்றில் பங்கு கொண்ட ஆ.ராசா. பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் மீது பற்றும் மதிப்புமிக்கவராக திராவிடர் கழகத்தின் கொள்கைகளில் பெரிதும் ஈடுபாடுக் கொண்டிருந்தார்.!


தனது பொது வாழ்க்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, பெரம்பலூர் ஒன்றியச் செயலாளராகவும், தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.!

ree

. பெரம்பலூரில் டாக்டர் அம்பேத்கார் சிந்தனையாளர்கள் பேரவையின் தலைவராகவும், பகுத்தறிவாளர்கள் பேரவை மற்றும் தமிழ் இலக்கியப் பேரவையின் செயலாளராகவும் ஆ.ராசா பணியாற்றியிருக்கிறார் உள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.!.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page