ஊரை தாண்டி யாருக்கும் தெரியாது!பழனிசாமி ஆட்சியில் லஞ்சம் ஊழல் அதிகரிப்பு! அண்ணாமலை கடும் விமர்சனம்!
- உறியடி செய்திகள்

- Aug 24, 2024
- 1 min read

‘ஊரை தாண்டினால் அதிமுக தலைவர்களை யாருக்கும் தெரியாது. எடப்பாடி பழனிசாமிஆட்சிக்கு வந்தப் பிறகே லஞ்சம், ஊழல் அதிகரித்தது’ என்று அண்ணாமலை கடும் விமர்சனம்!
மதுரை, முனிச்சாலையில் நகர் பாஜ சார்பில் பொதுக்கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு, பாரதிய ஜனதா மரியாதை செலுத்தும் வகையில் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சியில் ஒன்றிய அரசு சார்பாக பங்கேற்றோம். எதிரியாக இருந்தாலும் தகுதியான எதிரியை தேர்வு செய்து அவர்களுக்கு மதிப்பளிப்பார்கள் என்பதற்கு அந்த நிகழ்ச்சியே சாட்சி. அதில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். இதே மரியாதையை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் செய்தோம்.அந்த விழாவில், எம்ஜிஆருக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டபோது, பிரதமர் மோடி கலந்து கொண்டார்.!

எம்ஜிஆர் நாடு முழுவதும் தெரிய வேண்டிய தலைவர். அவரின் புகழை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்காகத்தான், பிரதமர் மோடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியிட்டார். ஆனால், 2017ல் வெளியிட்ட நாணயத்தை, 2019ல் தான் அதிமுகவினர் வெளியிட்டார்கள். மோடியின் பக்கம் மக்கள் சென்று விடுவார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் 2 ஆண்டுகள் கழித்து நாணயத்தை வெளியிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ, உதயகுமாரை தங்களது ஊர் தாண்டினால் யாருக்கும் தெரியாது. அதிமுகவில் அற்புதமான தலைவர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பின்னால் வந்த தலைவர்களை மக்கள் வேறுபடுத்தி பார்க்கின்றனர். அவர்களிடம் இருந்த நேர்மை, பின்னால் வந்தவர்களிடம் இல்லை. மக்கள் இவர்கள் மீது கடும் எதிர்ப்பில் உள்ளனர். இவ்வாறு பேசினார்.!

கன்னியா குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:
மீனவர்கள் தட்ப வெப்பநிலை, புயல் போன்ற காரணங்களினால் எல்லை தாண்டும் போது இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. நாம் உடனடியாக தலையிட்டு அவர்களை பத்திரமாக மீட்டு வருகிறோம். அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல்முறையாக மீனவர்கள் நலனுக்காக ரூ.38 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, அதிமுக போட்ட பிச்சையில்தான் 4 பாஜ எம்எல்ஏக்கள் உள்ளார்கள் என்று ஜெயக்குமார் கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு எல்.முருகன், ‘இதுபற்றி மாநில தலைவர் தெளிவாக பதில் அளித்துள்ளார். அவரது கூற்றுப்படி நாங்கள்தான் அதிமுக,வுக்குஎதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்துள்ளோம். கூட்டணி என்றால் கொடுக்கல் வாங்கல் இருக்கும். எங்களது வாக்குகளை மாநிலம் முழுவதும் வாங்கியுள்ளார்கள். எங்களது வாக்குகளால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்திற்கு வந்துள்ளார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்!




Comments