எந்த அச்சுறுத்தலாலும் தி.மு.க.வினரை ஒன்றும் செய்ய முடியாது! கனிமொழி கருணாநிதி பேட்டி!
- உறியடி செய்திகள்

- Aug 16
- 1 min read

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்ட நிலையில், “எந்த அச்சுறுத்தலாலும் திமுகவினரை ஒன்றும் செய்ய முடியாது” என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.!
இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான அமலாக்கத் துறை சோதனையை திமுக எதிர்கொள்ளும். எந்த அச்சுறுத்தலாலும் திமுகவினரை ஒன்றும் செய்ய முடியாது.!
பாஜக அரசு ஒருபுறம், தேர்தல் கமிஷனை தன்னுடைய கையில் வைத்துக்கொண்டு எஸ்ஐஆர் போன்ற பல தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் மீது ஏவுகிறது. அதனடிப்படையில்தான் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் எத்தனையோ சிக்கல்களை கடந்து கட்சியோடு உறுதுணையாக நிற்கக் கூடியவர். எந்த பயமுறுத்தலாலும் கட்சித் தொண்டர்களை அச்சுறுத்த முடியாது” என்று அவர் கூறினார்.




Comments