கடமை தவறிய,கமிஷனர் -கான்ஸ்டபுள் வரை அச்சத்திலா!அதிரடியாக நிற்காமல் சுழலுகிறதா முதல்வரின் சாட்டை!
- உறியடி செய்திகள்

- Jul 9, 2024
- 2 min read

கமிஷனர் முதல் கான்ஸடபுள் வரை கலக்கத்தில்! நிற்காமல் சூழலும் முதல்வர் ஸ்டாலினின் சாட்டை!
அச்சத்திலா காவல் பணியில் தவறு செய்தவர்கள்!
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடுரமாக கொலை செய்யபட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆம்ஸ்ட்ராங் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.!
இதனை தொடர்ந்து வெளியிடபட்ட செய்திக்குறிப்பில்
கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.!

இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும். காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்.' என்றும் கூறியிருந்தார்.!
இதன் தொடர் அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று
18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.!
தமிழகம் முழுவதும் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்து உள்ளார்.!

அபின் தினேஷ்: தாம்பரம் காவல் ஆணையராகவும்
அமல்ராஜ் :அமலாக்க பிரிவு ஏடிஜிபி யாகவும்
மகேஷ்குமார் அகர்வால்: ஆயுதப்படைஏடிஜிபியாகவும்
ஜெயராம்: குற்ற ஆவணபிரிவு ஏடிஜிபியாகவும்
வெங்கட்ராமன்: சென்னை நிர்வாக பிரிவு ஏடிஜிபியாகவும்
வினித் தேவ் வாங்கடே:சென்னை காவல் துறை தலைமயக ஏடிஜிபியாகவும் .........

அன்பு: சென்னை சிஐடி (குற்றக்கிளை) ஏடிஜிபியாகவும்
அஸ்ரா கார்க்:வடக்கு மண்டல ஐ.ஜி ஆகவும்
சஞ்சய்குமார்: சென்னை கடலோர பாதுகாப்பு குழு ஏடிஜிபியாகவும்
சந்தீப் மிட்டல்: சைபர் கிரைம் விங் ஏடிஜிபியாகவும்
ராஜிவ் குமார் : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவுக்கு டிஜிபியாகவும்
தமிழ் சந்திரன்:தொழில் நுட்ப சேவை ஏடிஜிபியாகவும்
பிரேம் ஆனந்த் சின்ஹா: மதுரைதெற்கு மண்டல ஐ.ஜி., ஆகவும்
கண்ணன் : சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராகவும்
நரேந்திரன் நாயர்: வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராகவும்
பவன்குமார் அபினபு: சேலம் மாவட்ட கமிஷனராகவும்
விஜயகுமாரி: சென்னை ஆயுதப்படை ஐ.ஜி., யாகவும்
லட்சுமி : திருப்பூர் மாவட்ட கமிஷனராகவும் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.!
இன்று பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர், சட்டமன்ற செல்வபெருந்தகை பற்றி, விமர்சித்து வழக்கு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பல்வேறு தகவல்களை முன்னுக்குப்பின் முரண்ணாக பேசியும் வெளியிட்டும் வருபவர் அண்ணாமலை என்கிற ஒற்றைகருத்து உலா வந்தாலும் மாஜி கர்நாடாக ஐ.பி.எஸ், அதிகாரியான அண்ணாமலையின் கருத்துகளுக்கும் தமிழக போலீஸ் வட்டாரத்திற்கும் ஒரு புள்ளியில் இணையும் வகையிலான சம்பவங்கள், தற்போது செல்வபெருந்தகை பற்றிய விமர்சனம் போல பல நடந்துள்ளதையும் அரசியல் சமூகதிரானாய்வாளர்களின் கருத்துக்களாக கேட்க முடிகின்றது.!
மேலும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளுக்கு பின்னும் - முன்னும் போலீஸ் புத்தியுடனான அசாதார சூழலை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் பல நடந்து வருவதும், இவைகள் அப்போது பேசும் பொருளாக்கப்பட்டு, மக்களை திசை திருப்ப - மனதை மடைமாற்ற செய்யும் வகையிலான இத்தகைய முயற்சிகள் சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது.!

இதனை அண்ணாமலை, தமிழக பாஜக, தலைவராக செயல்பட தொடங்கிய காலம் முதல் பின்னோக்கி பார்த்தால், இத்ததைய சந்தேக சூழல் எழுவது இயற்கையானதாகவே தெரியும் என்கின்றனர்.!

ஆக, தி.மு.கழகம் ஆட்சி பொருப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளாக காவல் பணியாளர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் தரப்பினர், என கூறப்பட்ட, அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட விஷயங்களை, குறிப்பாக தலைமைச்செயலகத்தில் செயல்படும் முதல்வரின் தனிப்பிரிவு ஆவணங்களை கிளறினால் இது போன்ற பல்வேறு பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் மேலும் பல வெளிச்சத்திற்கு வரும் என்றும் கூறுகின்றார்கள்.!




Comments