top of page
Search

ஒரே நாடு! ஒரே தேர்தல்! தில்லுமுள்ளுக்கு வழிவகுக்கும்! அரியலூரில் விஜய் பேச்சு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Sep 13
  • 2 min read
ree

சென்னையிலிருந்து, தனி விமானம் மூலம் திருச்சி வந்த த.வெ.க.தலைவர் விஜய், விமான நிலையத்திலிருந்து பரப்பரை செய்யும் இடத்திற்கு சுமார் 7 மணி நேர கால தாமதத்திற்கு பின் வந்து சேர்ந்தார்.

அதே சமயம் பரப்புரையின் போது திடீரென அவர் பேசிய மைக் வேலை செய்யவில்லை. தொழிநுட்ப கோளாறு காரணமாக அவரது பேச்சைக் கேட்க முடியவில்லை. இதனால் தொண்டர்கள் ''கேட்கவில்லை... கேட்கவில்லை..'' என கூச்சலிட்டனர். இந்நிலையில் சுமார் 5 மணி நேரம் பயணம் மேற்கொண்டு அரியலூரில் விஜய் பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கீங்க. சாரி கொஞ்சம் லேட் ஆகிருச்சு. திருச்சியில் பேசும் போதும் மைக் பிரச்ச்சனை இருந்தது அதனால் அதனை இங்கே ரிபிட் செய்கிறேன். அந்தக் காலத்தில் போருக்குப் போவதற்கு முன்பு போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வம் கோயிலுக்குச்சென்று சாமி கும்பிடுவார்கள்.


அதுபோல 2026 ஜனநாயகப் போருக்கு தயாராவற்கு முன்பு மக்களை சந்திக்க வந்துளேன். உங்களின் அன்புக்காக எதனை வேண்டுமானாலும் விட்டு வருவேன். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஒத்து வராத திட்டம். இதன் மூலம் தேர்தல் தில்லுமுல்லுதான் நடக்கும். அதற்காகத்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு இதை கொண்டு வருகிறது. பார்லிமெண்ட் தொகுதிகள் மறுசீராய்விலும் தென்னிந்தியாவிற்கு எதிராக மிகப்பெரிய சதி உள்ளது. இது எல்லாம் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு செய்யும் ஓரவஞ்சனைகளில் சில சாம்பிள்கள்தான். இப்படி ஒன்றிய பா.ஜ.க.வின் மோடி அரசு நம்மை வஞ்சிக்கிறது என்றால் இங்கிருக்கும் தி.மு.க. அரசு நம்மை நம்ப வைத்து ஏமாற்றுகிறது. 505 தேர்தல் வாக்குறுதிகளில் முக்கால்வாசி வாக்குறுதிகளை நிறைவேற்றாமலே நிறைவேற்றிவிட்டதாக மனசாட்சியே இல்லாமல் இப்படி ட்கை விடுகிறீர்களே சி.எம். சார்.


சொல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அவர் விட்ட ரீல்கள் எல்லாம் பாதியிலேயே அறுந்துபோய்விட்டது. அப்படி அறுந்துபோன ரீல்களைப் பற்றி சொல்லட்டுமா?... கேஸ் சிலிண்டருக்கு மானியமா 100 ரூபா தர்றேன்னு சொன்னீங்களே...செஞ்சீங்களா?... ஆயிரம் ரூபாய ஒருத்தர்விடாம எல்லா பெண்களுக்கும் தருவேன்னு சொன்னீங்களே...செஞ்சீங்களா?... டீசல் விலையில மீதி இருக்க மூன்று ரூபாய குறைப்பேன்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?...நீட் தேர்வ ரத்து செய்வோம்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?..கல்விக்கடன ரத்து செய்வோம்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?... கல்விய பொதுப்பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?...வருசத்துக்கு பத்துலட்சம் பட்டதாரிகளுக்கு வேலை தருவேன்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?...


மின்சாரக் கட்டணத்த மாசாமாசம் கட்டுற மாதிரி மாத்துவேன்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?...மீனவர்கள பழங்குடியின பட்டியலில் சேர்ப்போம்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?... மீனவர்களுக்கு 2லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?... அனைத்து மீனவ கிராமங்களிலும் மீன் உலர்த்தும் தளம் அமைக்கப்படும்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?... நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கத்துல் கொடுக்கற கடனுக்கு வட்டி 12 பர்சண்ட்ல இருந்து 8 பர்சண்ட்டா குறைக்கப்படும்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?... ஆட்டோ ஓட்டுறவங்களுக்கு சொந்த ஆட்டோ வாங்க 10 ஆயிரம் மானியம் வழங்கவோம்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?.... சலவைத் தொழிலாளர்களுக்கு தொழிற்கருவிகள மானிய விலையில வாங்க ஆவண செய்வோம்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?...


அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு ஓல்டு பென்ஷன் ஸ்கீம் கொண்டுவருவேன்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?... பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிர்ந்தரம்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?... சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசுப் பணி உறுதின்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?... முதியோர் உதவித்தொகை 1500ரூபா தருவேன்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?... தமிழகத்தில் இருக்கும் வேலை வாய்ப்புகள்ல 75%தமிழர்களுக்கேன்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?...3லட்சத்துக்கும் மேல இருக்க காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?... தூய்மைப் பணியாளர்கள் பணி,ஊதியம்,ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்னு சொன்னீங்களே செஞ்சீங்களா?... மக்கள் நலப் பணியாளர்களாக 25 ஆயிரம் பெண்கள் நியமிக்கப்படுவார்கள்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?... ரேஷன் கடையில மீண்டும் உழுந்து வழங்கப்படும்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?...” இவ்வாறாக திருச்சியில் பேசியதை அரியலூரிலும் தொடர்ந்து பேசினார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page