top of page
Search

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 3, 2024
  • 1 min read
ree


நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வாக்கு எண்­ணிக்கை தி.மு. கழ­கத் தலை­வர் - – தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் வெளி­யிட்­டுள்ள சமூக வலைத்­த­ளப் பதிவில் கூறியிருப்பதாவது.!


வாக்கு எண்­ணிக்கை முகா­மிற்கு முத­லில் செல்­லும் ஆளா­க­வும், இறு­தி­யாக வெளி­யே­றும் ஆளா­க­வும் நம்­மு­டைய கழக வாக்கு எண்­ணிக்கை முக­வர்­கள் இருக்க வேண்­டும்.!


தபால் வாக்­கு­கள் எண்­ணிக்­கை­யில் அதிக கவ­னத்தை எடுத்­துக்­கொள்ள வேண்­டும். தபால் வாக்­கு­கள் இரண்டு வகைப்­ப­டும். 1. இ.டி.பி.பி.எஸ் (ETPBS, ) 2. சாதா­ரண தபால் வாக்கு.

அதற்­கு­ரிய வழி­மு­றை­களை உங்­க­ளுக்கு சொல்­லித் தரப்­பட்­டுள்­ளது. அதைப் பின்­பற்றி செல்­லாத வாக்­கு­களை செல்­லத்­தக்­க­தா­க­வும், செல்­லத்­தக்க வாக்­கு­களை செல்­லா­த­தா­க­வும் அறி­விப்­பதை ஒரு­போ­தும் ஏற்­றுக் கொள்­ளக் கூடாது.!


தபால் வாக்குகள் முதலில் எண்ண வேண்டும்!

எப்­படி இ.வி.எம். (EVM) வாக்­கு­கள் முக்­கி­யமோ, தபால் வாக்­கு­க­ளும் மிக முக்­கி­ய­மா­னவை. எனவே, அந்த எண்­ணிக்­கைக்கு அதிக முக்­கி­யத்­து­வம் தர வேண்­டும்.

கள் இ.வி.எம். ( EVM) இயந்­தி­ரத்­தி­லும் ஒத்­துப்­போ­கி­றதா என்­பதை ஒப்­பிட்­டுப் பார்க்க வேண்­டும். பிறகு, வாக்­குப் பதிவு துவங்­கிய நேரம் மற்­றும் முடி­வுற்ற நேரத்தை இ.வி.எம் ( EVM) இயந்­தி­ரத்­தில் பார்த்து, சரி­பார்த்­துக் கொள்ள வேண்­டும்.!


இவற்­றில் ஏதா­வது ஒன்­றில் சீல்­கள் கிழிக்­கப்­பட்­டி­ருந்­தாலோ அல்­லது இயந்­திர எண் ஒத்­துப்­போ­க­வில்லை என்­றாலோ, பதி­வான வாக்­கு­கள் ஒத்­துப்­போ­க­வில்லை என்­றாலோ, வாக்­குப் பதிவு நேரத்­தில் மிகப்­பெ­ரிய வித்­தி­யா­சம் இருந்­தாலோ, வாக்கு எண்­ணிக்­கைக்கு அந்த இயந்­தி­ரத்தை அனு­ம­திக்­கா­மல் தனி­யாக எடுத்து வைக்க வேண்­டும்.!

வாக்கு எண்­ணிக்கை முக­வர்­கள் குறிப்­பாக ஆர்.ஓ. மேஜைக்கு ( RO Table-க்கு ) செல்­லும் வாக்கு எண்­ணிக்கை முக­வர் இது­கு­றித்த கையே­டு­க­ளை­யும், சட்­டங்­க­ளை­யும் அறிந்­த­வ­ராக இருத்­தல் நலம்.!

ree

வாக்கு எண்­ணிக்கை முடிந்த பிறகு, ஒரு சட்­ட­மன்ற தொகு­திக்கு ஐந்து ( வி.வி.பி.ஏ.டி.) VVPAT இயந்­தி­ரங்­களை எடுத்து அதில் உள்ள காகித வாக்­கு­களை எண்ணி, இ.வி.எம் (EVM) இயந்­தி­ரத்­தில் உள்ள வாக்கு எண்­ணிக்­கை­யோடு ஒத்­துப் போகி­றதா என்­பதை உறுதி செய்து கொள்ள வேண்­டும்.!


படி­வம் 17 சி (C)-–இல் நிரப்­பப்­ப­டும் வாக்­கு­கள் சரி­யாக படி­வம் 20-இல் எழு­தப்­ப­டு­கி­றதா என்­பதை உறுதி செய்து கொள்ள வேண்­டும்.!

படி­வம் 20–-இல் எழு­தப்­பட்ட வாக்­கு­கள் மொத்த வாக்­கு­க­ளாக எண்­ணப்­ப­டும்­போது அல்­லது கூட்­டப்­ப­டும்­போது அந்த எண்­ணிக்­கை­யில் ஏதும் தவ­றில்­லா­மல் பார்த்­துக் கொள்ள வேண்­டும்.!

பிறகு, படி­வம் 20–-இல் அனை­வ­ரும் கையொப்­ப­மிட்டு வெற்­றிச் சான்­றி­தழ் பெறப்­பட்ட பிறகு வாக்கு எண்­ணிக்கை முக­வர்­கள் வாக்கு எண்­ணிக்கை முகா­மி­லி­ருந்து வெளியே வர வேண்­டும்.!


இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page