top of page
Search

பாராளுமன்றத்தில் குண்டுவீச்சு! பதவி விலகுவாரா மோடி! சமூக வலை தளங்களில் வைரலகிவரும் பதிவு தொகுப்பு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Dec 14, 2023
  • 4 min read
ree


டிசம்பர் 13..

புது தில்லி: நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு நபர்களால் அவையில் அதிர்ச்சி, பதற்றம் ஏற்பட்டது!.


திடிரென இரண்டு பேர் மக்களவைக்குள் குதித்ததைப் பார்த்த மக்களவை உறுப்பினர்கள், துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பா.!


மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவரும், திடீரென மக்களவைக்குள் குதித்து, சர்வாதிகாரம் ஒழிக என்று இருவரும் கோஷம் எழுப்பியதாகவும், வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகைக் குண்டுகளை அவர்கள் கையில் வைத்திருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.!

ree

மக்களைவயில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, மர்ம நபர்கள் இருவரும் அவைக்குள் நுழைந்ததால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.!


நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாள் டிச.13.அன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.!

ree

இருவரும், தங்களது காலணியில் மறைத்து வைத்திருந்த கண்ணீர் புகைக் குண்டுகளை எடுத்துக் கொண்டு, மக்களவைக்குள் குதித்து அதனை வீச முயன்றபோது, எம்.பி.க்கள் பிடித்ததால், அசம்பாவிதம் தடுக்கப்பட்டதாக பரப்பு தகவல்கள் கூறப்படுகிறது.!


மர்ம நபர்களை நாடாளுமன்ற வளாகத்தில் காவல்துறையினர் பிடித்துச் சென்றபோது நெடியுடன் கூடிய புகை வரக்கூடிய பொருளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியதாகவும் கூறப்படுகிறது!.


நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் மர்ம நபர்கள் புகை குண்டை வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!

ree

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் டிச.13 அன்றும் வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்தனர்.!


'சர்வாதிகாரம் ஒழிக' என்ற முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றவர்களை எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.!

ree

இவர்கள் இருவரும் காலை மக்களவை அலுவல்கள் தொடங்கியது முதல் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்ததாகவும், பகல் 1 மணியளவில் ராகுல் காந்தி அவைக்கு வந்த சில நிமிடங்களில் புகை குண்டை வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மக்களவைக்குள் இரண்டு மத்திய அமைச்சர்கள் இருந்ததாகவும்கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பாஜக பிரமுகர்கள் சென்றதால் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் மக்களவைக்கு இன்று வராதது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.!

ree

அதே நாள்.. நாடாளுமன்ற தாக்குதல்!

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி 11.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாளான இன்று மக்களவைக்குள் அத்துமீறி இருவர் நுழைந்து களேபரம் செய்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.!


அன்று, பழைய நாடாளுமன்றக் கட்டத்துக்குள் பயங்கரவாதிகள் பாதுகாப்புத் தடுப்புகளை எல்லாம் உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக் கொன்றனர்.!


இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் எந்த சலசலப்பும் இல்லாமல், நான்கு கட்ட சோதனைகளைத் தாண்டி தடை செய்யப்பட்ட பொருள்களுடன் இருவர் உள்ளே நுழைந்து மக்களவைக்குள் உறுப்பினர்கள் அமரும் பகுதிக்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்டுள்ளனர்.!

..

ree

கடந்த 2001-ஆம் ஆண்டு டிச.13-ஆம் தேதி லக்ஷா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய பயங்கரவாத குழுக்களைச் சோந்த பயங்கரவாதிகள் 5 போ நாடாளுமன்ற வளாகத்துக்குள் தாக்குதல் நடத்தினா். இத்தாக்குதலில் தில்லி காவல்துறையினர் 5 போ, மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையைச் சோந்த பெண் ஒருவா், நாடாளுமன்ற வளாக தோட்டப் பணியாளா்கள் 2 போ மற்றும் செய்தியாளா் ஒருவா் என 9 போ உயிரிழந்தனா். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 5 பேரும் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.!


தாக்குதல் நடைபெற்று டிச.13. 22-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.!

ree

இதில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள், பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.!


நாடாளுமன்ற தாக்குதல் நினைவுநாளில், நாடாளுமன்றத்துக்கு வந்த உறுப்பினர்கள் அனைவரும், வெளியே, பயங்கரவாதத் தாக்குதலில் பலியான வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தவிட்டு உள்ளே சென்றனர். ஆனால், அவர்கள் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை மக்களவைக்குள் எழுந்தது.!

ree

மக்களவையின் பார்வையாளர் மடத்தில் அமர்ந்திருந்த இருவர், திடீரென மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்து, மேஜை நாற்காலிகள் மீது தாவிக்குதித்து ஓடினர். சர்வாதிகாரம் ஒழிக என்ற கோஷத்துடன் அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசியதால், அவைக்குள் என்ன நடக்கிறது என்பதே அவை உறுப்பினர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.!


ஆனால், இருவரும் குதித்த பகுதியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரிதமாக செயல்பட்டு இருவரையும் மடக்கிப் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.!

ree

நாடாளுமன்றத்துக்கு உள்ளே, வெளியே நடந்தது என்ன?


இந்த சம்பவங்கள் அனைத்தையும் ஊடகங்கள் வாயிலாக பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு, 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி காலையில் அவைக் கூடியதும் 11.30 மணிக்கு பயங்கரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதல் சம்பவங்கள் கண்முன் வந்துபோயிருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.!


இந்த சம்பவம் வேறொரு நாளில் நடந்திருந்தாலும் கூட அது பாதுகாப்புக் குறைபாடு என்ற ஒரு தொணியில் முடிந்திருக்கும். ஆனால், நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில், நிச்சயம் நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்பு கூடுதல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படியொரு நாளில் எவ்வாறு இந்த அத்துமீறல் நடந்திருக்கிறது என்பதுதான் கேள்வியாக மக்கள் மனதில் எழுகிறது.!

ree

மக்களவைக்குள் புகைக் குண்டுகளை மர்ம நபர்கள் திறந்ததால் அங்கே மஞ்சள் நிறப் புகை சூழ்ந்துகொண்டது. இதனால், அங்கிருந்தவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அது வெறும் நிறப் புகைதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. பதற்றம் தணிந்து, மக்களவை அரை மணிநேரத்துக்குப் பிறகு மீண்டும் கூடியது...!


நீட் தேர்வில் உள்ளாடை வரை சோதனை போட்டவர்கள்..!


பெரியாரின் சொல்லாடலை நீக்கியவர்கள்...

நாடாளுமன்றத்தில் அலட்சியம் காட்டியது ஏன்?


புகை வெடிகுண்டு வீசியதில்

அகமதும் இல்லை முகமதும் இல்லை

எனவே இதைச் செய்தவர்கள் தீவிரவாதிகள் இல்லை!


இந்திய ஜனநாயகம்.

அத்துமீறி குதித்தவர் பெயர் சாகர் சர்மா. அவருக்கு அனுமதி பாஸ் கொடுத்தவர் மைசூர் பா.ஜ. எம்.பி.

பிரதாப் சிம்கா, என்பது குறிப்பிடதக்கது.!

ree

தமிழ்நாட்டில் சமீபத்தில்ஆளுநர் மாளிகை எதிரே உள்ள சாலையில், போதையில் ஒருவர் பெட்ரோல் குண்டு (வெடிக்காத) வீசியபோது எடப்பாடி, அண்ணாமலைமற்றும் ஆளுநர் நடந்துகொண்ட விதத்தையும் பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்களையும் இப்போது உள்துறையை கையில் வைத்திருக்கும் அமித்ஷாவுக்கு எதிராகவும். இன்றைய அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டே பார்க்க வேண்டியுள்ளது.!


தேர்தல் திருவிழாவை

வெடிகுண்டு வெடித்து

நாடாளுமன்ற

வளாகத்தில் இருந்து

துவங்கி இருக்கிறதா !


இந்திய ஜனநாயகம்.

பாதுகாப்பில் குறைபாடு, அத்துமீறல் என பல வகைகளில் இந்த சம்பவத்தை வகைப்படுத்தினாலும், சாதாரண எளிய நபர்கள் கூட தடை செய்யப்பட்ட பொருளுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துவிடமுடியும் என்பதையே டிசம்பர் 13, நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில் நடந்த இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது.!

ree

இதைத்தான் தடுக்க, தவிர்க்க வேண்டும். நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளைத் தடுத்து பலப்படுத்த வேண்டும் என்பதையே இது காட்டுவதாகவும் உள்ளது.!


நாடாளுமன்றத் தாக்குதலில் பிடிபட்டவர்கள் இந்துக்களாக இருப்பதாலும், அவர்களை பார்வையாளராக நுழையப் பரிந்துரைத்தவர்

பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பதாலும், சுதாரித்துக் கொண்ட ஒரு தரப்பு மீடியாக்கள் எப்படியெல்லாம் செய்திகளைச் சொல்கிறார்கள் ?என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.!


தமிழ்நாட்டில்மழை வெள்ளத்தை தடுக்க முடியாதது திமுக அரசின் நிர்வாக தோல்வி என்று கூப்பாடு போட்ட அவாக்களின் மீடியாக்களின்

நாடாளுமன்றத்தில் புகை குண்டுகளை வீசும் அளவுக்கு பாதுகாப்பு பலவீனமாக இருக்கே, இதுக்கு மோடியின், அமித் ஷாவின், பாஜக அரசின் நிர்வாக தோல்வி ன்னு பேச மறுப்பதையும் எளிதில் கடந்து செல்லவும் முடியாது.!

ree

வீசப்பட்டது கண்ணீர் புகை குண்டு.

பிடிபட்டவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்று முதற்கட்ட விசாரணையில் தகவல்.

அந்தப் புகை உடலுக்கு மிக ஆரோக்கியமானது என்றும், ஆஸ்துமா காரர்களின் சுவாசக் கோளாறைப் போக்கும் ஹெர்பல் புகை என்றும் மீண்டும் ஒரு வடையை சுட்டுவருக்கின்றார்கள் சிலர்.!

நாளை

பூட்ஸ் காலுக்குள் மறைத்து எடுத்து வரும் சிறு குப்பிகளை எப்படி கண்டுபிடிக்க முடியும் ? இதை பாதுகாப்பு குறைபாடு என்று சொல்ல முடியாது !



அதேசமயம்

பிடிபட்டவர்களின் பெயர் முகமதாகவோ மும்தாஜ் ஆகவோ இருந்திருந்தால், என்ன என்ன சொல்லியிருப்பார்கள் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டி யுள்ளது?


நாடாளுமன்றம் தீவிரவாதிகளின் பிடியில் ...

இரசாயன ஆயுதங்களின் மூலம் தாக்குதல். பல உறுப்பினர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர் !


நச்சுப்புகையினால் பல எம் பிக்கள் மயங்கி வீழ்ந்ததாகவும், பலருக்கு மூச்சுத்திணறல், நெஞ்சடைப்பு என்று தகவல்.

பிடிபட்டனர் பயங்கரவாதிகள். என்.ஐ.ஏ. அதிரடிப் படையினர் நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்தனர்.!


நாடெங்கும் உச்சகட்டப் பாதுகாப்பு. எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து ஏவுகணைகளையும் பாகிஸ்தான், சீன திசை நோக்கி நிலை நிறுத்திய இராணுவத்தினர்.

ரஃபேல் விமானங்கள் டெல்லி மேல் ரோந்து

பிடிபட்டவர்கள் பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சிகள் பெற்றனர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது !


மேலும் பல நச்சுப்புகை குண்டுகளை நாடாளுமன்றத்தின் வெளியே வீசிய சிலர் கைது. தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக லஷ்கரின் துணை அமைப்பான லே முஜாகதின் மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு.!

ree

பிடிபட்ட அனைவரும் கொடூரமான பயங்கரவாதிகள். காங்கிரஸ் சப்போர்ட்டால்தான் அவர்கள் இப்படி செய்துள்ளார்கள். காங்கிரஸ் மற்றும் இந்தியக் கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும். அவர்கள் ஆட்சி நடத்தும் மாநிலச் சட்டசபைகள் கலைக்கப்பட வேண்டும் ...!


இதே போன்றொரு நிகழ்வு தமிழ்நாடு சட்டசபைக்குள் நிகழ்ந்திருந்தால்....!


சட்டசபைக்குள் அதிபயங்கரத் தாக்குதல்.. சட்டசபை உறுப்பினர்கள் அலறி அடித்து ஓட்டம், நெரிசலில் சிக்கி வானதி சீனிவாசன் மயங்கி விழுந்தார் !


சட்டசபையில் பாதுகாப்பு குறைபாடா ? பல எம் எல் ஏக்களின் கதி என்ன ?


அவையிலிருந்து பலத்த காயத்துடன் வெளிவந்த நயினார் நாகேந்திரன் நம்முடன் போனில் பேசிய ஒலிப்பதிவு ;

எதிர்கட்சி எம் எல் ஏக்கள் அமர்ந்திருந்த பகுதில ஒரு பெரிய கேஸ் சிலிண்டரோட ஒருத்தன் தொபுகடீர்ன்னு குதிச்சி, அத திறந்துவிட்டான். நான் உஷாரா மூக்கப் பொத்திக்கிட்டேன். ஆனாலும் அவன் உருட்டிவிட்ட சிலிண்டர் கால் தடுக்கி எனக்கு தலைல காயம். அதுக்கு கட்டுப் போடத்தான் அப்பல்லோ வந்திருக்கேன். இதுதான் தமிழக அரசின் இலட்சணம். உயர் பாதுகாப்பு கொண்ட முதலமைச்சர், அமைச்சர்கள் இருக்கும் அவையிலேயே கண்டவனும் புகுந்து கெமிக்கல் வெப்பன யூஸ் பண்ண முடியும்ன்னா இதுக்கு பேர் நாடா ? இதுதான் விடியலா ? வெட்கக் கேடு.! என்றல்லவா கண்டன எதிர்ப்புகுரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கும்.!

ree

பாஜக தலைவர் அண்ணமலையே.....!

வெட்கம், வேதனை. உள்துறையையும், காவல்துறையையும் தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இந்நேரம் இராஜினாமா பண்ணியிருக்க வேண்டும். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சற்று முன் என்னிடம் பேசினார்.!


தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணுங்க என்று கோரிக்கை வைத்தேன்.!

நிச்சயம் இன்றிரவுக்குள் ஆட்சி கலைக்கப்படும். நான் ஆளுநரைச் சந்திக்க இதோ கிளம்பிவிட்டேன் என்றல்லவா புழுகு மூட்டைகளை சுமந்து சென்றிருப்பார்கள் !

என்கிற சமூக வலைதளவாசிகளின் பதிவுகளும் முக்கியத்துவமிக்க ஒன்றாகவே அரசியல் விமர்சர்கள் பலராலும் பார்க்கபடுகிறது.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page