முதல்வரின் வழியில் மக்கள் பணி! சென்னை முதல் கன்னியாகுமரி வரை! அமைச்சர் கே.என்.நேருவின் பயணங்கள்!
- உறியடி செய்திகள்

- Nov 8, 2023
- 4 min read

நவ.9.பிறந்தநாளில் ஒரு சிறப்பு பார்வை!
மூத்தப்பத்திரிக்கையாளர்
மணவை எம்.எஸ். ராஜா...
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில்! சென்னை-கன்னியாகுமரி வரை அமைச்சர் கே.என்.நேருவின் பயணங்கள்,!
தி.மு.கழகத்தில், ஒரு அடி மட்ட தொண்டராக தனது கழகப் பணிகளை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஈர்ப்பால் கழகத்தில் தன்னை முழு யாக ஈடுபடுத்தி கொண்டு தனது வாழ்நாளில் 50 ஆண்டுகளாக சமரசமில்லாமல் தி.மு.கழக வளர்ச்சிப் பணிகள் ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வருபவர் நேரு என்றால் அது மிகையாகது!

தி.மு.கழக வளர்ச்சியில் முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில், கழகப் பணிகளை முன்னெடுப்பதிலும், எடுத்தப் பணிகளை பிறர்களுக்கு முன்மாதிரியாகவும் செயல்படுத்துவதிலும் இவருக்கு நிகர் இவரே!கண்டிப்பிலும், அரவணைப்பிலும் தொண்டர்களை ஒருங்கிணைத்து கழகப் பணிகளை செயல்படுத்துவதில் தாயுக்கும், தந்தைக்கும் சமமானவராகவே கட்சியினர், இவரை கொண்டாடியும் வருகின்றார்கள்.!
அடிக்கற கைதான் அணைக்கும் என்பதற்கு கே.என்.நேருவே 'கழக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளார் என்பதும் கட்சியினர் பெருமிதத்துடன் கூறி மகிழ்ந்தும்வருகின்றார்கள்.!

1952-ல் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கானக்கிலிய நல்லூரில், விவசாயம். அவை சார்ந்த தொழிலில் முக்கியத்துவம் பெற்று விளங்கிய, செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்த நாராயசாமி ரெட்டியார் - தனலெட்சுமியம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்தார் கே.என்.நேரு.
பி.யூசி வரை பயின்ற நேரு, தனது வழியில் விவசாயம், ரைஸ்மில் பால் உற்பத்தி, விவசாய உற்பத்தி பொருட்கள் சார்ந்த மண்டி என தொழிலில் ஈடுப்பட்டிருந்த நேரு, தொழில்சார்ந்த பயணங்களை பெரும்பாலும் இருசக்கர மோட்டார் சைக்கிலான புல்லட்டிலே வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் இன்றும் இவர் புல்லட் நேருவாகத்தான் இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்றார்.!

குடும்பம்-தொழில்சார்ந்தவைகள் பேசப்பட்ட நேரு, காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர் நாராயணசாமி வாரிசான நேரு.தனது பள்ளி பருவ இளமை காலங்களிலே, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, தந்தைபெரியார் கொள்கை வழியில் திராவிட அரசியலில் ஈடுபட தொடங்கி, அதற்கான ஆக்கப்பூர்வ களப் பணிகளைகயும் ஒரு புறம்முன்னெடுத்தும் வந்தார்.!

இத்தகைய கழகத்தின்பால், அப்போதிலிருந்து கட்சியிரையும் தொண்டர்களையும், அரவணைத்து கழகப் பணியில் ஈடுபடச் செய்த இவரின் நேர்மையான உழைப்பு, நம்பகதன்மை, தி.மு.கழகத்தில் நேரடி அரசியல், ஆகியவற்றால் கிளைக்கழகச் செயலாளர், ஊராட்சி ஒன்றிய தலைவர், என்று வளர்ந்த நிலையில் கழக வளர்ச்சிக்காகவும், தான் சார்ந்த பகுதி மக்களுக்கான பணிகளுக்காவும் இவர் கடந்துவந்த பாதைகள் மிகவும் கரடு முரடானவைகள். இதனால் இவருக்கு ஏற்பட்ட சோதனைகளும் பற்பல!

இப்படி தி.மு.கழக வளர்ச்சியிலும்- திராவிட அரசியலிலும் மனம் தளராமல் தொடர்ந்த இவரின் மாற்று கட்சியினரும் வியந்து பாராட்டும் வகையிலும் இருந்தது.
இப்படி திராவிட கொள்கைகள் வைராக்கியமிக்கவராக கழகப் பணிகளை தொடர்ந்த நேரு, முத்தமிழறிஞர் கலைஞரால், அப்பகுதி ஒன்றுபட்ட ' ஒன்றிய செயலாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.!
1989, முன் தி.மு.கழகமும்-முத்தமிழறிஞரும், நெருக்கடியான சோதனைகளுக்கு உட்பட்ட காலகட்டங்களில் உறுதியுடன் தனது பணிகளை கட்சி தொண்டர்களை ஒருங்கிணைத்து மத்திய மண்டலத்தில் அரவணைத்து ஒருங்கிணைத்தது, இவரை ஒரு கட்டத்தில் கழகத்தின் மாவட்ட செயலாளராக உயர்த்தியது.!

கழகப் பணியில்இவரின் பணிகளை கவனித்துவந்த தலைவர் கலைஞர் கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கையாலும். மக்கள் இவர் மீது கொண்ட அன்பாலும், 1989 சட்டசபை தேர்தலில், லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பை தந்தார். தேர்தலில் வெற்றிபெறவும் செய்து தனது அமைச்சரவையில் பால்வளம் மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக்கிய தலைவர் கலைஞர், நேருவின் முழு திறமை, கடும்பணிகளை கழகத்திற்கும், மக்களுக்கும் முழுமையாக வெளிகாட்டும் வகையில் அடையாளமும் படுத்தினார்.
அவரின் கொள்கை வழி சிந்தனைகள், அரசுப் பணிகள். மக்கள் பணிகள், கழகப் பணிகள் என்று அனைத்திலும் தனி முத்திரை பதித்து, கலைஞரின் நம்பிக்கைக்குரியவராகவே மாறிய நேருவுக்கு, மீண்டும் 1996, தேர்தலிலும் மீண்டும் வெற்றிபெற்று, அப்போது மிகவும் சவலான உணவு-கூட்டுறவுத்துறையின் அமைச்சராக வாய்ப்பை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர்.!

தி.மு.கழகத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் எடுத்தப்பணிகளிலெல்லாம் தனிமுத்திரை பதித்துதான் கலைஞரின் செல்லப்பிள்ளை என சொல்லாமல் சொல்லி, கலைஞரின் இதயத்தில் - (குட் புக்கில்) தனக்கென தனி இடத்தையும் பெற்றார்.!
இப்படி கழக பணிகள் - அரசுப் பணிகள். மக்கள் பணிகளில் சமரமில்லா பணிகளை தனது தலைவர் கலைஞரின் வழியிலே அடி பிசகாமல் தொடர்ந்த நேரு, 2006, தேர்தலிலும் வெற்றி பெற்று, வெற்றியை கலைஞரின் காலடியில் சமர்பித்து ஆசியும் பெற்று தமிழக போக்குவரத்துத்துறையின் அமைச்சரானார்.!

அக்காலகட்டத்தில் தனது தலைவர் கலைஞரின் வழியில் பணிகளை தொடர்ந்த நேரு, போக்குவரத்துத்துறையில் பல்வேறு மாற்றங்களையும் திருப்பங்களையும் ஏற்பத்தி எடுத்த முயற்சி இன்றைக்கும் பல்வேறு சாதனைகள் நிறைந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.!
தொடர்ந்து மத்திய மண்டலத்தில், கலைஞரின் மிகுந்த நம்பகத்தன்மையுடன் மாவட்ட செயலாளராக 27. ஆண்டுகள் ஒன்றுபட்ட மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்த நேரு மீண்டும் 2011 தேர்தலிலும் வெற்றிபெற்றார்.
தனது கலைஞரின் மீது தான் கொண்ட பாசத்தால், இரவு-பகல் பராது தனது முயற்சியால் முதன் முதலாக திருச்சியில் கலைஞர் அறிவாலையம் அமைந்திட காரணமானார்.!

இதன் தொடர்ச்சியால், மாவட்டங்கள் தோறும் கலைஞரின் அறிவாலையம் அமைந்தது.!
தி.மு.கழகத்தின் பணிகளில் மிகுந்த கவனமெடுத்து இவர் செய்துவந்த களப்பணிகள், ஒரு கட்டத்தில் மாநாடு என்றாலே நேரு! நேரு என்றாலே மாநாடு! பொதுக்கூட்டங்களைக் கூட மாநாடு போல நடத்தும் பாங்குபெற்றவர் நேரு, என்று முத்தமிழறிஞர் கலைஞரால் பாராட்ட தொடங்கி, இப்போதைய தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் வரை தொடர்கிறது.
இப்படி கழகம் தனக்கு வழங்கும் பணிகளை நிகரில்லாவகையில் தொடர்ந்த நேருவை ஒரு கட்டத்தில் தி.மு.கழகத் தலைமையின், ஒரு அங்கமாக முதன்மைச் செயலாளராக்கி அழகு பார்க்கவும் செய்து தொடர்கிறது.!
நேரு, கழக பணிகளில் எடுத்து கொண்ட சவாலான முயற்சிகளில் சாதனையாக்கி வந்தது, அவரது எதார்த்ததன்மையுடனான, நிர்வாகிகள், கட்சியினர் பொதுமக்களுடனான அரவணைப்பு போன்ற செயல்பாடுகளை கண்டு அச்சமடைந்த அரசியல் எதிரிகளால், நேருவுக்கு மறு பிம்பமாக கழகப் பணிகளை நிறைவேற்றி வந்த இவரின் தம்பி ராமஜெயம் (எம்.டி.) அரசியல் படுகொலை செய்யப்பட்டார். இது தி.மு.கழகத்திற்கும், நேருவின் குடும்பத்திற்கும், கட்சியினருக்கும் பேரிடியாக அமைந்தது.!

(எம்.டி.) ராமஜெயம் படுகொலை சம்பவம் நேருவை கட்சிப்பணிகளில் ஒதுக்கிவிடும் என எண்ணி மனப்பால் குடித்த அரசியல் எதிரிகளுக்கு இடமளிக்காமல் தனது குடும்ப மாபெரும் இழப்பையும், மனதுக்குள்ளே மறைத்து கொண்டு மீண்டும் கழக வளர்ச்சியில் தனதுப் பணிகளை மேலும் தீவிரபடுத்தினார் நேரு.!
திருச்சி மாவட்டத்தில் 2021.ல், நடந்து முடிந்த சட்டமன்ற, உள்ளாச்சி அமைப்புகளில் போட்டியிட்ட அனைத்து இடங்களையும் தி.மு.கழகத்தின் வசமாக்கினார் நேரு.
அக்காலகட்டத்தில்தான் போட்டியிட்ட திருச்சி மேற்கு தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்று, பல்வேறு சவால்கள் நிறைந்த நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகவும், இரண்டாம் கட்டமாக சேலம் மாவட்ட பொருப்பு அமைச்சராகவும் முதல்வர் ஸ்டாலின் நியமித்தார்.!

மீனுக்கு நீந்த கற்றுத்தர வேண்டுமா? என்பதைப் போல சவால்கள் நிறைந்த தனக்கு ஒப்படைக்கப் பணிகளில் தனது அயராத கடும் உழைப்பால், தொடர் முத்திரைகளையும் தனது பணிகளில் பதித்தும், இதனால் தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினிடத்திலும் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் பெற்றும் வருகின்றார் நேரு.!

இன்றைய காலத்திற்கேற்ப அறிவியல் ரீதியான வளர்ச்சி மலமலவென பெருகிவரும் சூழலில், முதல்வரின் அரசு, கொள்கை வழி சிந்தாந்தங்களை செயல்படுத்துவதிலும், பிற துறை வளர்ச்சித்திட்டப் பணிகளை சம்மந்தபட்ட அமைச்சர்கள், அரசு அதிகாரிகளிலுடன் மிகுந்த ஆர்வமுடன் ஆய்வுகள் மேற்கொள்வதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப ஆலோசனைகள், வழிகாட்டல்கள் வழங்கி உதவுவதும், சக அமைச்சர்கள் மத்தியில் இவர்மீதுமிகுந்த மரியாதையும், மரியாதையும் ஏற்படுத்தியிருப்பதும் தனிசிறப்பான ஒன்றாகும்.
பெரும்பாலும் அமைச்சரவை கூட்டம், சட்டபேரவை நிகழ்வுகள், துறைசார்ந்த பணிகள், தனது தொகுதி மக்கள் பணிகள் தவிர்த்து இவரின் வளர்ச்சிப் பணிகள்ஆய்வு, திட்டப் பணிகள் தொடக்கம், பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள், தி.மு.கழகத்தின் முதன்மைச்செயலாளராக இவர் முன்னெடுக்கும் பயணங்கள், அரசு அதிகாரிகளையும், கட்சியின் நிர்வாகிகளையும் இன்றைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருவதும், குறிப்பிடதக்கதாகவே கூறுகின்றனர் இவரோடு பயணித்த அரசு துறை அதிகாரிகள், கட்சியினர் பலர்.!

காலையில் சென்னையை ஒட்டிய வட மாவட்டங்களில் தொடங்கி டெல்டா மாவட்டங்களின் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு மாலையில் பொறுப்பு அமைச்சராக தனக்கு இரண்டாவது முறையாக முதல்வரால் ஒதுக்கீடு செய்யபட்ட சேலம் மண்டலத்தில் தனது பணிகளை தொடர்வது, இன்றைய இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்து, ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வரும் முக்கிய நிகழ்வாகவே தொடர்ந்தும் வருகிறது.
சென்னையில் தொடங்கி தென்மாவட்ட எல்லையான கன்னியாகுமரி வரை முதல்வரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் படியான இவரின் பயணங்கள் தொடர்நிகழ்வுகளாக தொடரவே செய்கின்றது.
முத்தமிழறிஞர் கலைஞர் செய்தியாளர்கள் சந்திப்புகளை, அவரோடு பயணித்ததாலோ! என்னவோ?
ஊடகவியாளர்களிடம் கே.என்..நேருவின் அணுகுமுறைகள் நகைச்சுவை கலந்த ஆக்கப்பூர்வ சந்திப்பாகவே தொடர்ந்தும் வருகிறது.!

தி.மு.கழகத்தலைவர். தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தலைமையிலான அரசின் கீழ் அரசின் அமைச்சராகவும், கட்சியின் முதன்மைச்செயலாளராகவும் கே.என்.நேருவின் இத்தகை சுறுசுறுப்புமிக்க செயல்பாடுகள்
இவையனைத்தும், தான் தி.மு.கழகத்தின் மீது இன்றைக்கும், பற்றும் நம்பிக்கையும் உடைய ஆதரவாளர்கள், திராவிட அரசியலை முன்னெடுப்பவர்களின் அரசியல் அடையாளமாகவும், அங்கீகாரமாகவும் கருதி கழகப் பணியில் ஆர்வமுடன் தீவிரம் காட்டவும் செய்து வருகின்றது.! என்றாலும் மிகையாகாது!
தன்னை நோக்கி சொல்வந்து விழுந்தாலும், கல் வந்து விழுந்தாலும், தான் ஏற்றுக்கொண்ட தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் தி.மு. கழகத்தையும் - தமிழ்நாட்டின் அரசையும் வழிநடத்தும் திராவிடத் தலைவர், தமிழ் நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் காட்டுகிற வழியில் சாதுர்யமாகவும், சமர்த்தியமாகவும் தனது பணிகளை இன்றுவரை தனக்கு வரும் சோதனைகளை, சோகங்களை, எல்லாம் சுகமாக்கிகொண்டு பணியாற்றிவரும் கே.என்.நேரு முன்னெடுக்கும் அனைத்து பணிகளும் சாதனைகளாகும்.!

தி.மு.கழகத்திற்கும், தலைவர், முதல்வர் தளபதிக்கும் மென்மேலும் வலுசேர்க்கும் என்கின்றார்கள் தி.மு.கழக- திராவிட. சிந்தனையாளர்கள்.!

இந்நிலையில் நவ, 9, ம் தேதி அகவை தினத்தில் அடியெடுத்தும் வைக்கும் கே.என்.நேரு, தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள். ஆலோசகளின்படி,
தொடர் மழை. நோய் தடுப்பு, திட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கட்சியின் முக்கிய நிகழ்வுகளை முன்னெடுக்கும் பணிகளில் தீவிரம் காட்டிவருவதால் வழக்கமான நவ.9,ல்,அகவை தின நாள் சந்திப்பு, வாழ்த்துக்களையும் தவிர்த்திருப்பது, கட்சியினர் மத்தியில் ஒரு ஏமாற்றமாகவே பேசப்படுகின்றது!
மூத்தப்பத்திரிக்கையாளர்
மணவை எம்.எஸ்.ராஜா.




Comments