பெரம்பலூர் : 78 வது சுதந்திர தினம்! மாற்று திறனாளி ஊழியரை உற்சாக படுத்திய கே.என்.அருண் நேரு எம்.பி!
- உறியடி செய்திகள்

- Aug 15, 2024
- 2 min read

தோகமலை.
ச .ராஜா மரியதிரவியம் ......
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 78, வது சுதந்தின விழாக்கள்! மக்களுடன் கே.என். அருண் நேரு! தொகுதி மக்களின் கோரிக்கைகளின் மிகு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்!
பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் தனது தந்தையார், அமைச்சர் கே.என். நேருவைப் போலவே தி.மு.கழக த் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டல்கள் - அறிவுறுத்தல்களின்படி மக்கள் நலப் பணிப்பணிகளில் தீவிரம் காட்டி வருவதுடன்!

, தனது கவனத்திற்கு வரும் மக்களின் அத்தியாவச அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில், தனி கவனத்துடன், மிகுந்த ஆர்வமுடன் பணிகளை முன்னெடுப்பதுடன், சம்மந்த மக்கள் பிரச்சனை கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற, சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். என்று தொகுதி மக்களின் தி.மு.கழகம்- கூட்டணி கட்சியினரும் வெகுவாக பாராட்டி வருவது குறிப்பிட தக்க ஒன்றாகும்.!

இந்நிலையில் ஆக 15. 78 ,வது சுதந்திரதினத்தையெட்டி
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ள அருள்மிகு
ஸ்ரீ மதுர காளியம்மன் திருக்கோயிலில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொது விருந்து நிகழ்ச்சியில் பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் கே.என். அருண் நேரு கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுடன் உணவு அருந்தினார்!
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு விலையில்லா சேலைகளை வழங்கினார்.!


முன்னதாக பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் ஊராட்சியில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், முன்னிலையில் கலந்து கொண்ட மக்களவை உறுப்பினர் கே.என். அருண் நேரு கிராம மக்களின், அத்தியாவச அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை கேட்டறிந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்து துரிதமாக உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.!



இதனையடுத்து பெரம்பலூரை அடுத்த பாடலூரில் மியாவாக்கி முறையில் அடர் வனம் உருவாக்கும் வகையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் . எம். பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கே.என்.அருண் நேரு தொடங்கி வைத்தார்.!

தொடர்ந்து
பெரம்பலூர் மாவட்டம்
ஆலத்தூர் வட்டம் மாவிலங்கை கிராமத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் பிரியா, தமிழ்நாடு அரசின் க்ரூப் 4 தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் சிறப்பாக பணி புரிந்ததற்கான நற்சான்றிதழை கே.என்.அருண் நேரு அவருக்கு வழங்கி கௌரவித்து, அவரை மிகவும் உற்சாகப்படுத்தி பராட்டினார்..!
மேலும் தனது வளைதள பக்கத்தில்
தனது எல்லைகளை கடந்து சிறகடிக்கும் பிரியா போன்றோர், நாம் ஒவ்வொருவரும் முன் நோக்கி செல்வதற்கான எடுத்துக்காட்டு. வாழ்த்துகள் பிரியா.!
என்றும் பதிவிட்டுள்ளார்.!




Comments