பெரம்பலூர் எம்.பி. கே.என்.அருண் நேரு வலியுறுத்தல்! ரயில் நிலையம். தொழிற்கூடம். சிறார்கள் வாழ்வாதரம் கோரி!
- உறியடி செய்திகள்

- Jul 31, 2024
- 3 min read

தோகமலை
ச.ராஜா மரியதிரவியம்
டெல்லி: ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து, பெரம்பலூர் மக்களவை தொகுதியில் ரயில்நிலையம், தொழிற்கூடங்கள் - குழந்தைகள்பாதுகாப்பு வாழ்வாதாரம் காப்பது குறித்து பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் கே.என்.அருண் நேரு வலியுறுத்தி பேசியதுடன் - எழுத்துப் பூர்வமான மனுக்களையும் கொடுத்தார்.!
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் முன்பு பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி),உப்பிலியாபுரம் (சட்டமன்றத் தொகுதி), வரகூர்_(சட்டமன்றத்_தொகுதி), அரியலூர் (சட்டமன்றத் தொகுதி), ஆண்டிமடம் (சட்டமன்றத் தொகுதி),ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தது.!

பெரம்பலூர் தொகுதியில் இருந்த ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) , அரியலூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்பட்டன. திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி ஆகியவை பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. கரூர் பாராளுமன்றத் தொகுதியில் இருந்த குளித்தலை,பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. முசிறி தொகுதியிலிருந்து மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு அதுவும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன .துறையூர்(தனி) தொகுதியும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன.!
முன்பு தனித்தொகுதியாக இருந்து மறுசீரமைப்புக்குப் பின் பொதுத் தொகுதியாக உள்ளது.

ரயில் வசதி இல்லாத தமிழக மாவட்டம் பெரம்பலூர் என்கிற பெயர் காலம்காலமாக நீடிக்கிறது. அரியலூர் சென்றுதான் ரயில் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஊருக்குள் ரயிலைக் கொண்டுவருவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால், வெற்றிக்கு பிறகு, அதைப் பற்றிப் பேசுவதுகூடக் கிடையாது. அரியலூர் - நாமக்கல் இடையே பெரம்பலூர் - துறையூரை இணைக்கும் ரயில் பாதைத் திட்டம் ஆய்வுப் பணிகளோடு நின்றுபோனது.

பெரம்பலூர் அருகே தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சிட்கோ தொழிற்பேட்டைப் பணிகள் தொடங்கி 18 ஆண்டுகள் கழித்தும் அது முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் திட்டமிடப்பட்ட 90 சிறு தொழிற்சாலைகளில் ஆறு மட்டுமே இங்கு இயங்குகின்றன. எனவே, தேவையான வசதிகளை ஏற்படுத்தி, பெரம்பலூரின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும்.! என்பதும் வேண்டு கோளாகவே உள்ளது.!

குளித்தலையில் பேருந்து நிலையம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாகப் பேருந்து நிலையத்துக்கான இடம் தேர்வுசெய்வதிலேயே இழுபறியே நீடிக்கிறது.!

முசிறி, மணச்சநல்லூர், லால்குடி விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் திட்டங்கள் எதுவும் பயனளிக்கும் வகையில் இல்லை. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமைகளைப் போல இங்கும் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பு ஆகும்.!
கொல்லிமலை, பச்சமலைகளிலிருந்து மழைக் காலங்களில் ஓடைகள் வழியாகத் தண்ணீர் சமவெளிக்கு வந்து ஏரிகளை நிரப்பும். ஆனால், காலப்போக்கில் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால், ஏரிகளுக்கு நீர்வரத்து நின்றுவிட்டது. இதனால், துறையூர், பெரம்பலூர் வட்டார விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.!

தமிழகத்தின் வெங்காயத் தேவையில் 51 சதவிகித்தைப் பெரம்பலூர் பூர்த்திசெய்கிறது. இங்கு ஆயிரக் கணக்கான ஏக்கரில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. ஆனால், விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையான வெங்காய குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும், என்கிற கோரிக்கை அரசியல் காரணங்களால் செயல்படாமல் முடங்கிக்கிடக்கிறது. தவிர, தானியக் குளிர்பதனக் கிடங்குகள் ஏற்படுத்தி செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும், என்பது விவசாயிகளின் தொடர் வலியுறுத்தலாகும்.!
எலுமிச்சை, வாழை, சின்ன வெங்காயம் போன்ற விளைபொருட்களைச் சேமிப்பதற்கான குளிர்பதனக் கிடங்குகள், இங்கு தேவை. விளைபொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால், தொகுதி பொருளாதார வளர்ச்சி பெறும் என்கின்றனர் தொகுதி மக்கள்.!
மணச்சநல்லூர், லால்குடி பகுதிகளில் அதிக அளவில் அரசு அரிசி ஆலைகளை ஆரம்பித்தால், பொதுவிநியோகத் திட்டம் உள்ளிட்ட தேவைகளுக்கும் தன்னிறைவு கிடைக்கும்; அரசி விலையையும் கட்டுப்படுத்தலாம். என்கிற கருத்தும் தொகுதி மக்களிடம் உள்ளது.!

முசிறி, குளித்தலை பகுதிகளின் பாரம்பரிய கோரைப்பாய்த் தொழில் வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட விவசாயம் சார்ந்த உற்பத்திகளும் அழிந்துவருகிறது. அவர்களுக்கான கடன் உதவிகள், தொழிற்சாலை, ஏற்றுமதி முகாந்திரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது உட்பட கோரிக்கையாக இருந்து வருகின்றது.!

இந்நிலையில் 2024-25. மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதி இண்டியா கூட்டணி கட்சிகளின், தி.மு.கழக வேட்பாளராக போட்டியிட்டு, பதிவான மொத்த வாக்குகளில் 53. சதவிகிதத்திற்கு மேல் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார் கே.என்.அருண் நேரு.!
பெரம்பலூர் மக்களவை தேர்தல் சுற்றுபயணத்தின்போதே வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புள் - கோரிக்கைகளை நன்கு புரிந்து உள்வாங்கி கொண்ட, மக்களவை உறுப்பினர் கே.என். அருண் நேரு, டெல்லி மக்களவையில் எம்.பி.யாக பொருப்பேற்ற நாள் முதலே தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நட வடிக்கைகளில் தீவிர காட்டி வருகின்றார்.!





அதனடிப்படையில், முதல் கட்ட நடவடிக்கையாக, பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரயில் நிலையம் அமைக்க ஒன்றிய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை டெல்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தியதுடன், எழுத்துப் பூர்வமாக மனுவாகவும் கொடுத்தார்.
இதே போன்று ஒன்றிய உணவு பதப்படுத்துதல் - தொழில்துறை அமைச்சர் சிராக் பாஸ்வானையும் நேரில் சந்தித்து, தொகுதியில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காய உற்பத்தியை ஊக்கப்படுத்தும் விதமாக பத படுத்தும் - சேமிப்பு கிடங்குகள் அமைத்திடவும் வலியுறுத்தி பேசிய அருண் நேரு எம்.பி. இது குறித்த எழுத்துப்பூர்வமான மனு ஒன்றையும் கொடுத்தார்.
மேலும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரானா நோய் தொற்றால் பெற்றோரை இழந்து, வாழ்வாதரத்தை இழந்துள்ள 1.413. குழந்தைகளின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் வகையில், ஒன்றிய பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்ன பூர்ணாவி தேவியுடன், நேரில் சந்தித்து குழந்தைகள் சிறப்புத்திட்டங்கள் மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுத்திடவும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டு, எழுத்துப்பூர்வமாக மனு ஒன்றையும் நேரில் கொடுத்தார் பெரம்பலூர் எம்.பி.கே.என்.அருண் நேரு.!
மனுக்களை பெற்றுக் கொண்ட ஒன்றிய அமைச்சர்கள், இத்திட்டங்கள் குறித்து நிதி சாத்திய மதிப்பீடு செய்யப்படுமென்று உறுதியளித்துள்ளார்கள்.!




Comments