பெருந்தலைவர்கமராஜர் புகழ் மாலை சூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்! வரலாறு கூறும்சாதனைகள்!!
- உறியடி செய்திகள்

- Jul 16, 2023
- 2 min read

மூத்த பத்திரிக்கையாளர் ராஜா.
பெருந்தலைவர்கமராஜர் புகழ் மாலை சூட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்! வரலாறு கூறும்சாதனைகள்!!
முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் திராவிட இனமக்களின் சுயமரியாதை, உரிமைகள், தமிழ்நாட்டின் தமிழர்களின் எதிர்காலம் ஆகியவற்றிற்க்கான முன்னெடுப்புப் பணிகளை எவ்வித சமரசமுமின்றி, காத்து நிற்கும் தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் - கழக துணைச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர். கவிஞர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோர் கர்மவீரர் காமராஜர் புகழ் பரப்பும் செயல்பாடுகள் இங்கே நினைவூட்ட வேண்டிய கட்டாயமாகும்!
காமராஜ் என்ற பெயரை காமராஜர் என்றே இனி குறிப்பிடவேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தவர் முத்தமிழறிஞர்கலைஞர்!
.
காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர்!
சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயர் சூட்டி!
சென்னை கிண்டியில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டித் தந்து!

சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் உள்நாட்டு முனையம் என்று பெயர் வைக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை நிறைவேற்றி தந்ததுடன்
காமராஜர் பிறந்த வீட்டை நினைவில்லமாக ஆங்கியவர் முத்தமிழறிஞர்கலைஞர்!
.
கன்னியாகுமரியில் காமராஜருக்கு நினைவு மண்டபம் எழுப்பியவர்
நெருக்கடி நிலையின் போது காமராஜரை கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சொன்னதற்கு, என் ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை, காமராஜரை கைது செய்ய முடியாது, என் ஆட்சியை கலைத்துவிட்டு உங்கள் ராணுவம் வேண்டுமானால் அதை செய்யட்டும் என்று சொன்னவரும் முத்தமிழறிஞர் கலைஞர்.!
மணமேடைக்கே காரில் காமராஜரை அழைத்து வந்து தன் மகன் ஸ்டாலினுக்கு அவர் தலைமையில் திருமணமும் செய்து வைத்தார் தலைவர்கலைஞர் .!

காமராஜர் மறைந்த அன்று கொட்டும் மழையில் இரவோடு இரவாக தன்னுடைய நேரடி மேற்பார்வையில் அவருடைய அடக்கத்திற்கான இடத்தை ஒதுக்கி தயார் செய்து தந்து!
தமிழகத்திலயே முதன் முதலில் காமராஜருக்கு சிலை வைத்தது தி.மு.கழகம் மட்டுமே!.
சென்னை மாநாகராட்சியை திமுக கைப்பற்றியபோது பெரியார் பாலத்திற்கு அருகே காமராஜர் சிலை அமைத்து அதை நேருவை கொண்டு திறந்து வைத்து அழகு பார்த்தது தி.மு.கழகம்!
காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு இல்லையே என்ற குறை இருந்து வந்தது. இதை உணர்ந்து 25/07/2010 அன்று காமராஜர் நினைவு மண்டபத்தில் அணையா விளக்கை ஏற்றி வைத்தவர் தலைவர்கலைஞர்.!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு காமராஜரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில், "அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்” என்று பெயர் சூட்டியதும் தலைவர் கலைஞர்.!
திமுக அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டதிற்கு”* *சிவகாமி அம்மையாரின் பெயரை வைத்து, அத்திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார் தலைவர்கலைஞர்.!
பெருந்தலைவரின் படத்திற்குக் கீழே எழுதுவதற்குப் பொருத்தமான வாசகத்தைக் கேட்ட நிலையில் "உழைப்பே உயர்வு தரும்" என்று தலைவர் கலைஞர் அந்தக் கணமே எழுதிக் கொடுத்து, கர்மயோகி காமராஜருக்குப் பெருமைக்கு பெருமை சேர்த்தார்.!
நெல்லை மாவட்டம் இராதாபுரம் பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.
காமராஜர் பெயரில் தபால் தலை வெளியிட தலைவர் கலைஞர் மத்திய அரசுக்கு பரிந்துரையின் பெயரிலே மத்திய அரசு தபால் தலையும் வெளியிட்டுள்ளது!


காமராசர் பெயரில் அரசு விருது ஒன்றை நிறுவி 'பெருந்தலைவர் காமராசர் விருது' சமூகப்பணி செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது!


முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் திராவிட இனமக்களின் சுயமரியாதை, உரிமைகள், தமிழ்நாட்டின் தமிழர்களின் எதிர்காலம் ஆகியவற்றிற்க்கான முன்னெடுப்புப் பணிகளை எவ்வித சமரசமுமின்றி காத்து நிற்கும் தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் - கழக துணைச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர். கவிஞர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோர் கர்மவீரர் காமராஜர் புகழ் பரப்பும் செயல்பாடுகள் இங்கே நினைவூட்ட வேண்டிய கட்டாயமாகும்!
.
இந்த வரலாற்று நிகழ்வுகளை இளைய தலைமுறையினருக்கும் தெரியச் செய்வதே பெருந்தலைவர் காமராஜருக்கான உண்மையான புகழ் வணக்கமாாகும்!




Comments