அரசியலாக்கப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு! நடைமுறைக்கு வலியுறுத்தும் தமிழக அரசு! பாஜகவின் நிலைப்பாடு என்ன?
- உறியடி செய்திகள்

- Jun 27, 2024
- 2 min read

லெமூரியன் பார்வை....
அரசியலாக்கப்படுகிறதா?சாதிவாரியான கணக்கெடுப்பு! ஏன்? எவரால் சாத்தியமில்லை!
வலியுறுத்தி வரும் தமிழ்நாடு அரசு!
இனியாவது பாஜக முன்னெடுக்குமா? கூட்டணி கட்சிகள் அரசியலாக்காமல் அழுத்தங்களா?
கடந்த 1865ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.
கடந்த 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிகள் விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், பட்டியல் பிரிவில் இருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. அதிலும் உட்பிரிவில் பல்வேறு குழப்பங்கள் வேறு!
அதேசமயம் பிற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.!

ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.!
இந்தியாவில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011இல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கடுத்த கணக்கெடுப்பு, 2021இல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தருணத்தில் கோவிட் பரவல் இருந்த காரணத்தால், மேற்கொள்ளப்படவில்லை.!

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்பட மால் தொடர்ந்து 3.0. பிரதமராக உள்ள மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு இன்னமும் மெளனம் சாதிப்பதும் ஏற்புடையதாகவும் இல்லை என்கின்றனர். நடுநிலையாளர்கள் தொடர்புடைய அரசியல் வட்டாரத்தினர்கள் .!
கடந்த 2011ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது.! ஆனால், முடிவுகள் வெளியிடப்படவில்லை.!
அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மோதி தலைமையிலான அரசும் கணக்கெடுப்பு முடிவுகளை ஏனோ வெளியிடவில்லை.

இந்தக் கணக்கெடுப்பு பல குறைபாடுகள் கொண்டது என்றும், நம்பகத்தன்மையற்றது என்றும், இட ஒதுக்கீடு மற்றும் கொள்கையின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாதது என்றும் மோதியின் அரசு கூறியதாகவும் அரசு வட்டாரத்தில் தகவல்கள் கூறப்படுகின்றது.!

தரவுகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக, நிதி ஆயோக்கின் அப்போதைய துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைக்க அரசு முடிவு செய்தது.!
ஆனால் கமிட்டியின் மற்ற உறுப்பினர்கள் பெயர் அறிவிக்கப்படாததால், அந்தக் குழு ஒருபோதும் இதுவரை மக்களைச் சந்திக்கவில்லை. என்பது மிகுந்த அக்கரையின்மையையே காட்டுவதாகவே நினைக்க தோன்றுகின்றது.!
இதன் விளைவாக, மூலத் தரவுகளைத் தொகுத்து, வெளியிடக்கூடிய கணக்கெடுப்பாக மாற்ற எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவும் இல்லை.
கடந்த 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கு மத்திய அரசு 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தது. அதில், சமூக-பொருளாதார சாதிக் கணக்கெடுப்பை நடத்துவது நிர்வாக ரீதியாகக் கடினமானது மற்றும் சிக்கலானது எனக் கூறியது.
மேலும் "வெவ்வேறு பட்டியல்களின்படி சாதி வகைகளில் உள்ள வேறுபாட்டை மத்திய அரசு சுட்டிக்காட்டாது. மத்திய பட்டியலில் 2,479 பிற்படுத்தப்பட்ட சாதிகள் உள்ளன, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்களின்படி 3,150 சாதிகள் உள்ளன" என்றும் ஒன்றிய அரசு கூறியது.!
மேலும், "மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி தொடர்பான கேள்வியைக் கேட்டால், அதற்குப் பல ஆயிரம் சாதிப் பெயர்கள் பதிலாக வரும். ஏனெனில், சாதி குறித்துக் கேட்கும்போது மக்கள் தங்கள் குலம், கோத்ரம், துணை சாதி என ஒன்றுக்கொன்று மாறுபட்ட வகையில் பயன்படுத்துவதால் கணக்கெடுப்பு தரவுகளில் குழப்பம் ஏற்படும்" என்று தனது பதிலில் மத்திய அரசு கூறியது ஏனோ பொருப்பை தட்டிக்கழிக்கும் வகையிலே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.!

இந்நிலையில், இவற்றையெல்லாம் நன்கு அறிந்த ஒன்றிய அரசான பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பா.ம.க. உள்ளிட்ட பிரகட்சிகளும், நாம் தமிழர் கட்சி சீமான் போன்றோடும் சாதிவாரியான கணக்கெடுப்பு என்கிற பெயரில் அரசியல் செய்யவே நினைப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்புடன் பேசும் பொருளாகியுள்ளது.!

ஆக 2024 ம் . ஆண்டி லாவது சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் உறுதியுடன் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறார் என்பது தற்ப்போது நடைபெறும் கூட்ட தொடர் சம்பவங்கள் மூலம் உணரமுடிகின்றது.!
இனி அடுத்தது ஒன்றிய அரசான பாஜக,வோடு கூட்டணியில் உள்ள தமிழ்நாட்டிலுள்ள எதிர்கட்சிகளும், ஒன்றிய அளவிலுள்ள, நிதிஸ், நாயுடு, உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் மக்களின் நலனில் உண்மையான அக்கரை கொண்டு சாதிவாரியான கணக்கெடுப்பை அரசியலாக்குவதை தவிர்த்து செயல்படுத்த முயற்சிப்பார்களா?


அதே சமயம் அடுத்த பெருபான்மையை பெற்றுள்ள
எதிர்கட்சிகளும் எப்படி இதில் முனைப்பு காட்டி செயல்படுத்த முயற்சிக்க வேண்டிய பொருப்பும் கடமையும் அவர்களுக்கு உண்டு என்று உணர்ந்து தங்களின் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.!
எப்படியும் சாயம் வெளுக்காமல் போகப் போவதில்லை!
அதுவரை நாமும் பொருத்திருந்து கவனிப்போம்.!




Comments