அதிமுகவில் சூடு பிடிக்கும் அரசியல்! செங்கோட்டை பதவிபறிப்பு! எடப்பாடி அதிரடி!
- உறியடி செய்திகள்

- Sep 6
- 1 min read

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாள் கெடு விதித்த மறுநாளே செங்கோட்டையன், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் அவர் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று முதல் செங்கோட்டையன் அந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று காலை திண்டுக்கல்லில் முகாமிட்டிருந்தார். அங்கே ஒரு தனியார் ஹோட்டலில் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் அவர் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக செங்கோட்டையனை அவர் வகித்து வந்த கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை வெளியாகியுள்ளது.
செங்கோட்டையன் ஆதரவாளர்களும் பதவிநீக்கம்
அதிமுகவில் செங்கோட்டையனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் . தம்பி (எ) K.A. சுப்பிரமணியன்,
நம்பியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் . M. ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி,
கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் . N.D. குறிஞ்சிநாதன்,
அந்தியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் . M. தேவராஜ்,
அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர் . S.S. ரமேஷ்,
துணைச் செயலாளர் . வேலு (எ) தா. மருதமுத்து,
ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் .K.S. மோகன்குமார் ஆகியோராவார்கள்




Comments