சவுக்குவழக்கில் நீதியரசருக்கு அழுத்தம்! சி.பி.ஐ.விசாரணை தேவை! உயர் - உச்ச நீதிமன்றங்களில் மனு!
- உறியடி செய்திகள்

- May 27, 2024
- 2 min read

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றுஉயர் நீதிமன்ற பதிவாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.!
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசாரால் தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கர் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்ததது. இந்த வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 24 ஆம் தேதி விசாரணை நடத்தியது. நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் இந்த வழக்கை விசாரித்தனர். இதில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.!

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதேநேரம் சவுக்கு சங்கருடைய தாயார் கொடுத்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் நீதிபதி பாலாஜி மாறுபட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார்.!
கோவை சிறையில் இருக்கக்கூடிய சவுக்கு சங்கரைப் புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என இரண்டு நீதிபதிகளும் ஒரே கருத்தில் உத்தரவு பிறப்பித்தனர். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அடுத்த கட்டமாக விசாரணை செய்வதற்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்துள்ளார்கள். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்வதற்குச் சென்னை நீதிமன்றத்தினுடைய பொறுப்பு தலைமை நீதிபதி முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது..!

மேலும் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'இந்த வழக்கை பொறுத்தவரை அதிகாரமிக்க நபர்கள் சிலர் அவர்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், அதன் காரணமாகத்தான் இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரணைக்கு எடுக்க நேரிட்டேன்' என குறிப்பிட்டிருந்தார். அதிகாரம் மிக்கவர்கள் தன்னிடம் பேசியதால் சவுக்கு சங்கர் வழக்கில் இறுதி விசாரணை அவசரமாக நடத்தப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டு இருப்பது நீதிபதிக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தது.!
இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு 2 நபர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என உயர்நீதிமன்ற பதிவாளரிடம் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு கொடுத்துள்ளார்.!

இதேபோல் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கரூர் மாவட்டத்தில் உள்ள கோயிலில் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.!
இந்த உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிற்கு திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.!
மேலும் இது குறித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் யூடியூப் ஒன்றில் பேசும்போது....!

நீதிமன்றங்களில் இனப்ளுயன்ஸ்கள் நடக்கிறது என்பதுதெரியும்,
நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தன்னை அதிகார பலமிக்க இருவர் சவுக்கு வழக்கில் சந்தித்தாக கூறியுள்ளார். இது சம்மந்தமாக அவரே சுய மோட்டோவாக வழக்கு போட்டிருக்கலாம் ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. எனவே சி.பி.ஐ. இது பற்றி விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்.
கடந்த காலத்தில் ஆந்திராவை சேர்ந்த, உச்சநீதியரசர் கே.ராமசாமியை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவர் நேரில் வந்துவழக்கு தொடர்பாக அழுத்தம் தந்த போது, அவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளார்.!
அதே போல சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பழனிசாமியிடம், வேறு ஒரு நீதிபதி ஒரு வழக்கு தொடர்பாக பேசியபோது, அவரிடம், வேண்டுமானல் இவ்வழக்கில் நீங்களே ஆஜராகி வாதாடலாமே என்று கூறிய தகவல்களும் உள்ளது.!
அதே சமயம் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஏன் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை.!
இவ்வாறாக கருத்து கூறியுள்ளார்




Comments