சென்னை அருகே கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்! அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு!
- உறியடி செய்திகள்

- Aug 8, 2024
- 1 min read

மாமல்லபுரம் - பேரூர் பகுதியில் ரூ.4,077 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை!
கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு!
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பேரூர் பகுதியில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.4,276 கோடியே 44 லட்சம் மதிப்பில், நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.


மேலும், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் மேற்கண்ட திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய குடிநீர் ஆலையின் கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். இதையடுத்து, அப்பகுதியில் குடிநீர் ஆலைஅமைக்கும் பணிகள், முதல் அமைச்சர் வழிகாட்டு ஆலோசனைகளின் படி நடைபெற்று வருகின்றன.!

இந்நிலையில், மேற்கண்ட புதியகடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் கட்டுமான பணிகளை, தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு - தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே.என்.நேரு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.!

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைமுதன்மை செயலர் தா.கார்த்திகேயேன், சென்னை குடிநீர் வாரியமேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் சரவணன், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, உட்பட பலர் உடனிருந்தார்கள்.
.




Comments