பாஜக,வுக்கு பின்னால் ரஜினி! சந்திரபாபுநாயுடு பதவியேற்பு நிகழ்ச்சி! மீண்டும் சர்ச்சையாகும் விமர்சனங்கள்!
- உறியடி செய்திகள்

- Jun 13, 2024
- 1 min read

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நிகழ்ச்சி மூலம், பாஜக,வுக்கு பின்புலமாக நடிகர் ரஜினிகாந்த் செயல்பட்டாரா என்கிற விமர்சனங்களும், கருத்துக்களும் வைரலாகி பரப்பரப்பை ஏற்படுத்தியும் வருகின்றது.!
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுமுதல்வராக பதவியேற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்துகொண்டார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.!

விஜயவாடாவில் நடைபெற்ற சந்திரபாபுநாயுடு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிரஞ்சீவியும், ரஜினி காந்த் தம்பதியும் ஒன்றாக விழா மேடைக்கு வந்தனர். அதன் பின்னர், மேடையில் இருந்த சிறப்பு அழைப்பாளர்களான முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு, முன்னாள் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரை ரஜினி சந்தித்து பேசினார்.!

இவர்களை தொடர்ந்து மேடைக்கு வந்த மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ஜேபி நட்டா ஆகியோரும் ரஜினியுடன் கை குலுக்கி பேசினர்.! முதல்வராக பதவியேற்ற பிறகு ரஜினியை பார்த்ததும் சந்திரபாபு நாயுடு அவரிடம் சென்று கட்டியணைத்து நன்றி தெரிவித்தார்.!
பதிலுக்கு ரஜினியும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.!

நடிகர்கள் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோர் ரஜினி அருகில் அமர்ந்திருந்தனர். சிரஞ்சீவியும் ரஜினியும் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தனர். கடைசியாக விழா முடிந்த நிலையில், பிரதமர் மோடியும் ரஜினியை சந்தித்து கை குலுக்கி பேசினார்.!
ஒரே மேடையில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.!
சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்து அரசியல் வட்டாரத்தில் இப்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.!

ஆந்திராவில் பா.ஜ.க.வுடன் தெலுங்குதேசம் கட்சி,, கூட்டணியமைத்தது முதல் பிரதமர் மோடி பதவியேற்புவரை, மோடிக்கும் (பாஜக) நாயுடுவுக்கு இடையே பல்வேறு சமரசங்களை ஏற்படுத்தியதில் நடிகர் ரஜினிகாந்தின் பங்குகுறிப்பிடதக்கதாகவே அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.!
வெளிப்படையாக பாஜக,வை ஆதரித்து பேசி வந்த ரஜினி, திடீரென்று மெளனம் காத்து வந்ததும், அதே சமயம் மோடி பதவியேற்பு - நாயுடு பதவியேற்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் முக்கியத்துவம் படுத்தப்படுவதற்கு இதுவே காரணம் என்று பேசும் பொருளாக அரசியல் வட்டாரத்தில் மாறியுள்ளது.!

ஏற்கனவே ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம், உள்ளிட்ட பல்வேறு நிலைப்பாடுகளில், ஆர் எஸ்.எஸ். பாஜக, ஆதரவு நிலைப்பாடு எடுத்ததின் பின் விளைவுகளை மறந்து, ஏன் மீண்டும் ஆதரவு நிலைப்பாட்டை கையில்லுக்கிறார் ரஜினி என்று திரைத்துறையினர் - ரசிகர்கள் - அரசியல் விமர்சகள் தரப்பில் கடும் சர்ச்சை பேச்சுகளும் உருவாகி வருகின்றது.!




Comments