கட்டுபாடுகளோ தாராளம்! தலைக்கு மேலே கத்தியா? திருச்சியிலிருந்துநாளை முதல் விஜய் பரப்புரை தொடக்கம்!
- உறியடி செய்திகள்

- Sep 12
- 1 min read

மிக கடுமையாக கட்டுபாடுகளுடன் நாளை திருச்சியிலிருந்து, தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். ஆக மொத்தத்தில் விஜய்க்கும் - அவரின் (கட்சிக்கும் )தமிழக வெற்றி கழகம் தலைக்கு மேலே கத்தியைப்போல் தான் பார்க்க வேண்டியுள்ளது.
விஜய் பரப்புரை செய்வதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பஸ் ஒன்றும் தவெக அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. பஸ் இன்று
சாலை மார்க்கமாக திருச்சி வந்தடையும் நிலையில், விஜய் நாளை விமானம் மூலம் திருச்சி வருகின்றார் .
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாளை (செப்டம்பர் 13) திருச்சியில் தொடங்க உள்ளார். தற்பொழுது, இந்தப் பிரச்சாரத்தின் இலச்சினை (போஸ்டர்) த.வெ.கவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில், உங்கள் விஜய் நா வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" என்ற வாசகங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. விஜய் பரப்புரை செய்வதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பஸ் ஒன்றும் தவெக அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. பஸ் இன்றே சாலை மார்க்கமாக செல்லும் நிலையில், விஜய் நாளை விமானத்தில் திருச்சி செல்கிறார்.

இந்த பயணத்தின் போது, சனிக்கிழமைகளில் மட்டும் சில நேரங்களில் ஞாயிற்றுக்கிழமை 3 மாதங்களில் 16 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து தொடங்கி, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களைத் தொடர்ந்து பயணத்தை மதுரையில் நிறைவு செய்கிறார்.
திருச்சியில் பிரச்சாரத்துக்கு 23 நிபந்தனைகளுடன் அனுமதி கிடைத்துள்ளது. பெரம்பலூர் அரியலூரில் 21 நிபந்தனைகளுடன் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தப் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளை உள்ளடக்கியது, மக்கள் சந்திப்புகள் மூலம் கட்சியை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இந்த முதல் பிரச்சாரம் அமையும் என தவெக நிர்வாகிகள் கருதுகின்றனர்.




Comments