கலைஞரின் முரட்டு பக்தர்! முதல்வர்ஸ்டாலின் அன்பைபெற்றவர்! என்.பெரியசாமி நினைவு நாள்!
- உறியடி செய்திகள்

- May 24, 2024
- 1 min read

முத்தமிழறிஞரின் கலைஞர் தனது முரட்டு பக்தன் என்று பாராட்டு பெற்ற, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்மதிப்பை பெற்ற என். பெரியசாமியின் 7ம் ஆண்டு நினைவு நாள். அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.!
சிறுவயது முதல் தி.மு.கழகத்தில் இணைந்து வட்டப் பிரதிநிதி, மாவட் டப் பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தன்பாடு உப்பு சுமை மூடை தூக்கும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 32 தொழிற்சங்கங்களுக்கு தலைவர் அதனை தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞரின் வழிகாட்டல்களோடு 1986 – ல் தூத்துக்குடி மாவட்டம் தனியாக உதயமான நாள் முதல் தன் இறுதிக் காலம் வரை ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழக செயலாளராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர் என்.பெரியசாமி.!

1986 - ல் தூத்துக்குடி நகரமன்ற தலைவர், 1989, 1996 ஆண்டுகளில் 2 - முறை சட்டப்பேரவை உறுப்பினர் என பதவி வகித்து தூ த்துக்குடி மாவட்டத்திற்கு எண்ணற்ற நல்ல திட்டப் பணிகளை கொண்டு வந்தவர்.!
முத்தமிழறிஞர் கலைஞரால் தன்னுடைய ”முரட்டு பக்தன்” என்று பாராட்டப்பட்டவர். இன்றைய கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், திராவிட மாடல் ஆட்சியின் எழுச்சி நாயகர் தளபதியார் மு.க.ஸ்டாலின் அன்பை பெற்றவர்.!
தூத்துக்குடி வளர்ச்சியின் நலனில் அக்கறையுடன் செயலாற்றி மறைந்த என்.பெரியசாமி அவர்களின் 7 -ம் ஆண்டு நினைவு தினம் வருகிற மே 26 - ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.!

அன்றைய தினம் காலை 9.00 மணி அளவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக் குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது!
தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது.!
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் - அனைத்து தரப்பு மக்கள் பிரதிநிதிகள், கழக சார்பு அணியினர் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றேன்.!
இவ்வாறு அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளா




Comments