உலகின் கவனத்தை ஈர்த்த சேலம் மாநாடு! முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்! ஒருங்கிணைப்பில் அமைச்சர் நேரு!
- உறியடி செய்திகள்

- Jan 20, 2024
- 3 min read
Updated: Jan 21, 2024

நாளை சேலம் மாநாடு!
உலகை திரும்பி பார்க்க வைக்கும் பணிகள்!
செந்தமிழர் படையே எழுச்சியோடு வா...
திராவிட இனத்தின் காவலர், தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியார் அழைக்கிறார்.!
களத்தில் அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு!

சபாஸ் அமைச்சரே!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞராலும், கழகத்தலைவர், முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலினாலும் மாநாட்டு நாயகர் என்கிற நன்மதிப்பை பெற்ற தங்களால், தமிழகத்தில் முதன்முதலாக முன்னெடுக்கப்பட்ட
பக முகவர்கள் முதல் கூட்டம் போல, கழகத்தலைவர், முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் சிந்தனைகளை செயல்படுத்தும் தாங்கள் பணிகளை முன்னெடுத்த இளைஞரணியின் இரண்டாவது மாநாடும் அமைச்சர் நேருவுக்கு மற்றுமொரு மைல் கல்லாய் மென்மேலும் பெருமைகளை சேர்க்கட்டும் - வாழ்த்துக்கள்.

கடந்த தி.மு.கழகத்தின் நிகழ்ச்சிகளை மிக பிரமாண்ட சிறப்புடன் தொடர்ந்து நடத்தி, முத்தமிழறிஞர் கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் மாநாடு என்றாலே கே.என்.நேரு,
என்கிற பாரட்டை பெற்ற தி.மு.கழக முதன்மைச் செயலாளர் சேலம் மாவட்ட பொருப்புஅமைச்சர் கே.என்.நேரு ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.!




இதனையடுத்த மறுநாள் முதலே அமைச்சர் நேரு சேலம் மாநாட்டு திடலில் கட்சியின் நிர்வாகிகளுடன் நேரடியாகச் சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, மாநாட்டு முகப்பு பகுதி, திடல், மாநாட்டுக்கு கட்சியினர் வந்து செல்லும் வழிபாதைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு தொடர்பான வசதிகள் நுழைவுவாயில், இருக்கைகள் அமைப்பது உள்ளிட்டமாநாட்டு அமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் - வழிகாட்டல்களையும் வழங்கி களப்பணியிலும் முகாமிட்டுதீவிர காட்டி வந்தார் அமைச்சர் நேரு.!


தொடர்ந்து சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் மாநாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்துகொண்டார் கே.என்.நேரு.!
இதனைதொடர்ந்து இளைஞரணி மாநாட்டு விளக்க கூட்டங்கள் விழிப்புணர்வு இருசக்கர மோட்டார் வாகன பேரணிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையில் ஆதரவை திரட்டி மாநாட்டில் இளைஞரணியினர் - பொதுமக்கள் கட்சியினரை ஆர்வ மூட்டி, பெரும் திரளாக பங்கேற்கச் செய்யும் வகையில் அமைச்சர் கே.என்.நேரு இருசக்கர புல்லட் மோட்டார் சைக்கிள்வாகனத்தை ஓட்டிச்சென்று ஊர்வலமாக பேரணிகளிலும் கலந்துகொண்டு தீவிர ஆதரவும் திரட்டினார்!



சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வரலாற்று திருப்புமுனையாக, நடைபெறும் தி.மு.கழக இளைஞரணி இரண்டாவது மாநாடு நாளை ஜன.21. ஞாயிற்றுக்கிழமை துவங்கி நடைபெற உள்ளது.!

தொடர்ந்து தி.மு. கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க. சிறப்புரையாற்றுகின்றார்.
முன்னதாக மாநாட்டு கொடியினை, கழகத்துணைப்பொதுச்செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழிகருணாநிதி ஏற்றிவைக்கின்றார்.!




மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் ஆன்றோர்களின் பேச்சரகங்கம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சீர்மிகு சிறப்பு நிகழ்வுகளும் நடைபெறுகின்றது.!
அரசியல் களத்தில் தி.மு.கழத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் வரலாற்றிலும். இந்திய துணைக்கண்ட அரசியல் வரலாற்றிலும் முக்கிய திருப்பமாகவும், நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளமான மாநாடாக இதுஅமையும் என்று தி.மு.கழக. அதன் கூட்டணி கட்சியினரின் மிகுந்த எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்றால் அது மிகையாகாது.!
கழகத்தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் தளபதியாரின் ஆலோசனை அறிவுறுத்தல்கள் வழிகாட்டல்களின் படி
சுமார் 5 - முதல் 7.லட்சம் இளைஞர் அணியினர் பங்கேற்கும் விதமாக, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மிகுந்த எழுச்சியூட்டும் மாநாடாகவும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கான நல்லதொரு தொடக்கமாகவும் இம்மாநாடு அமையும், ....
. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையும் தளபதியாரின் வழிகாட்டல்கள் படியே நடைபெறும். கூட்டணியில் புதிய கட்சிகள் இடம் பெறுவது குறித்தும், கழகத் தலைவர் தளபதியார் முடிவு செய்வார்...... மாநாட்டில் பங்கேற்க தளபதியாரின் அறிவுறுத்தல்கள்படி கூட்டணி கட்சித்தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்றார் அமைச்சர் நேரு.!



முன்பு எப்போதும் கழக மாநாடு 3.நாட்கள் நடைபெறும். ஆனால் இப்போது ஒரு நாள் மாநாடாக சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்தப்படுகிறது.
அதேசமயம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒரு நாள் மாநாடு உலக சாதனை மாநாடாக நிச்சயம் அமையும். என்கின்றார்கள் உற்சாகத்துடன் தி.மு.கழக கூட்டணி கட்சியினர்!


முன்னதாக ஜன.20. ந் தேதி முதல்வர் தளபதி இருசக்கரவாகன ஊர்வலத்தை பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து 3 ஆயிரம் டிரோன்கள் ஸோவும் திராவிடத்தலைவர்களையும் மாநாட்டின் சிறப்புகளை பறைசாட்டும் வகையில் வானில் அதிசயங்கள் பலவற்றை நிகழ்த்தி சாதனை படைத்தது குறிப்பிடதக்கது.!.

மாநாட்டில் இளைஞரணியினர் சீறுடை யில் கலந்து கொள்கிறார்கள். இம்மாநாட்டுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தி.மு.கழக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூராவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவும் திரட்டியது மிகவும் முக்கியத்துவமானது என்றால் மிகையில்லை!



3. முறை தள்ளிப்போன மாநாடு சற்றும் தொய்வின்றி, தள்ளிப் போன ஒவ்வொரு முறையில், மாநாட்டு அமைப்புப்பணிகளை
மிகவும் , கூடுதல் சிறப்பு வாய்ந்த வகையில் ஏற்பாடு செய்ததில், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர், தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பு அமைச்சர், தமிழ்நாடு நகராட்சிநிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஓய்வின்றி, முழுகவனமும் கடந்த 6 மாதங்களாக மாநாட்டுப் பணிகள் முனைப்புடன் கட்சியினரை ஒருங்கிணைத்து பணியாற்றியதும் குறிப்பிடதக்க ஒன்று என்கின்றார்கள் விவரங்கள் அறிந்த தி.மு.கழக நிர்வாகிகளும் - மக்கள் பிரதிநிதிகளும்.!





சேலம் தி.மு.கழக இரண்டாவது மாநாட்டை யெட்டி, அமைச்சர் நேரு வெளியிட்டுள்ள தனிசுற்று அறிக்கையில்,





Comments