சேலம் மாநாடுப் பணிகள் விறுவிறு ! இளைஞரணி பேரணியில் மீண்டும் புல்லட் நேரு !! கட்சியினர் பெருமிதம் !
- உறியடி செய்திகள்

- Nov 28, 2023
- 2 min read

சேலம் மாநாடுப் பணிகள் விறுவிறு! இளைரணி மாநாடு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் மீண்டும் புல்லட்டில் அமைச்சர் கே.என்.நேரு! கட்சியினர் பெருமிதம்!

சேலம் தி.மு.கழக இளைஞரணி, 2.வது மாநாட்டுப் பணிகள் விறுவிறுப்பு அடைய தொடங்கியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் நேரு. மாநாட்டு வளாகத்தில் அதிரடி களஆய்வுகள் சுற்றுப்பகுதிகளில் மாநாட்டு விழிப்புணர்வு - விளக்க நிகழ்வுகளை தீவிரபடுத்தி வருவதுடன் மாநாடு தொடர்பாக இளைஞரணியினர், கட்சியினர்நடத்தி வரும் நிகழ்ச்சிகள், ஊர்வலங்களில் மீண்டும் புல்லட் நேருவாக வலம் வருவது, பொதுமக்கள், கட்சியினரை மிகுந்த உற்சாகப்படுத்தி வருகின்றது என்று பெருமிதத்துடன் கூறிவருகின்றார்கள்!




திருநெல்வேலியில் தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், தி.மு.கழக இளைஞரணி செயலாளராகயிருந்த போது மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட, தி.மு.க. இளைஞரணியின் முதல் மாநாட்டை தொடர்ந்து இரண்டாவதாக சேலத்தில் தி.மு.கழக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகிற டிச.17. ம் தேதி நடைபெறும், ஒரு நாள் மாநாடு என்பதால் மாநாட்டுப் பணிகளில் கழகத்தினர்களை ஒருங்கிணைத்துப் பணிகள் தீவிர படுத்தி முடுக்கிவிடப்பட்டுள்ளது.!


தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு கழகத் தலைவர் முதல்வர் தளபதி சிறப்புரையாற்றுகின்றார்.
அரசியல் களத்தில் தி.மு.கழத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் வரலாற்றிலும். இந்திய துணைக்கண்ட அரசியல் வரலாற்றிலும் முக்கிய திருப்பமாக, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளமான மாநாடாக இதுஅமையும் என்பது தி.மு.க. அதன் கூட்டணி கட்சியினரின் மிகுந்த எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்றால் அது மிகையாகாது.!
சுமார் 5 - முதல் 7.லட்சம் இளைஞர் அணியினர் பங்கேற்கும் விதமாக, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மிகுந்த எழுச்சியூட்டும் மாநாடாக இது அமையும், என்கின்றனர் விபரமறிந்த தி.மு.க.நிர்வாகிகள்.!

இந்நிலையில் கடந்த ஒரிரு நாட்களுக்கு முன்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அக்கார்டு ஹேட்டலில் நடைபெற்ற தி.மு.கழக மாநில நிர்வாகிகள் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சேலத்தில் டிச 17 ம் ந் தேதி நடைபெறும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக, தி.மு.கழக முதன்மைச்செயலாளர், சேலம் மாவட்ட பொருப்பாளர், தமிழக நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்து அறிவித்தார்.!

வெல்லம் திண்ணக் கூலியா என்பதைப் போல, கடந்த தி.மு.கழகத்தின் நிகழ்ச்சிகளை மிக பிரமாண்ட சிறப்புடன் தொடர்ந்து நடத்தி, முத்தமிழறிஞர் கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் மாநாடு என்றாலே கே.என்.நேரு,
நேரு என்றாலே மாநாடு என்று பாராட்டப்பட்டு மாநாட்டு நாயகர் கே.என்.நேரு என்று மிகுந்த அன்போடு அழைக்கபட்டார் என்பது குறிப்பிடதக்கது!
சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அன்று மாலையே சேலம் மாநாட்டு திடலில் கட்சியின் நிர்வாகிகளுடன் நேரடியாகச் சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, மாநாட்டு முகப்பு பகுதி, திடல், மாநாட்டுக்கு கட்சியினர் வந்து செல்லும் வழிபாதைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு தொடர்பான வசதிகள் அமைப்பது உள்ளிட்டமாநாட்டு அமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் - வழிகாட்டல்களையும் வழங்கினார் அமைச்சர் நேரு.!

தொடர்ந்து சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் மாநாட்டு விழிப்புணர்வுகள் பலவற்றில் கலந்துகொண்டார் கே.என்.நேரு.!
இதனைதொடர்ந்து பெத்தாநாயக்கன்பாளையத்தில், இளைஞரணி மாநாட்டு விளக்க விழிப்புணர்வு இருசக்கர மோட்டார் வாகை பேரணி நடைபெற்றது. இதில் இளைஞரணியினர் - பொதுமக்கள் கட்சியினரை ஆர் மூட்டும் வகையில் அமைச்சர் கே.என்.நேரு இருசக்கர புல்லட் மோட்டார் சைக்கிள்வாகனத்தை ஓட்டிச்சென்று ஊர்வலமாக பேரணியில் கலந்துகொண்டார்.!

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் பழுத்த காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்திலிருந்து, முத்தமிழறிஞர் கலைஞர் மீது கொண்ட அபரிதமான ஈர்ப்பால் தி.மு.கழக அரசியல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கிய இளம் வயதில் புல்லட் நேரு என்று ஒன்றுபட்ட திருச்சி மண்டலத்தின் சுற்றுப் பகுதியினரால் அழைக்கப்பட்டவர், இன்று சேலம் மண்டலத்தின் தி.மு.கழகத்தினர் - பொதுமக்கள் மத்தியிலும் புல்லட் நேருவாக மனதில் அன்பான இடத்தை பெற்றுள்ளதாகவும் மிகுந்த பெருமிதத்துடன் கூறுகின்றனர் தி.மு.கழகத்தினர்.
மணவை எம்.எஸ். ராஜா




Comments